#875 - *புனித வெள்ளி ஏன் வருடாவருடம் தேதி மற்றும் கிழமைகள் மாறி வருகிறது. இதற்கு என்ன காரணம்? ஏன் தேதிகளில் மாற்றம் வருகிறது. இதற்கு வேதத்தின் அடிப்படையில் சற்று விரிவாக பதில் கூறவும் ஐயா*....
*பதில்*
மிகப்பரிதாபமாக – வேதத்தில் இந்த புனித வெள்ளி அல்லது கிறிஸ்மஸ் அல்லது ஈஸ்டர் என்ற மூன்று பண்டிகைகளுமே ஆதி கிறிஸ்தவர் கடைபிடித்ததாக எந்த ஆதாரமும் கிடையாது !!
கிறிஸ்து பிறந்தது – உண்மை. யாரும் மறுக்க முடியாத சரித்திரம்
கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதும், அடக்கம் பண்ணப்பட்டதும் உயிர்த்தெழுந்ததும் உண்மை. அதுவும் யாரும் மறுக்க முடியாத சரித்திரம்.
தன் பிறந்தநாளை கொண்டாடுங்கள் என்று இயேசு கிறிஸ்து சொல்லவில்லை !!
புதிய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் வெளிபடுத்தல் புத்தகம். அது சுமார் கி.பி 95ல் எழுதப்பட்டது.
அதாவது கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் 40 நாள் அநேகரைப் பார்த்து பின்னர் ஜனங்களின் கண்கள் பார்த்துக்கொண்டிருக்க பரலோகம் ஏறிப்போன வருடத்திலிருந்து சுமார் (33-95) 62 வருடங்களில் எங்கும் கிறிஸ்து பிறந்த நாளையோ ஒவ்வொரு வருடத்திலும் அவருடைய உயிர்த்தெழுந்த நாளையோ அப்போஸ்தலர்கள் அல்லது ஆதி கிறிஸ்தவர்கள் (வேதத்தில் எழுதப்பட்ட காலங்கள் முடிய) கொண்டாடினதாகவோ வேதத்தில் இல்லை !! அப். 1:3, அப். 1:9, 1கொரி. 15:5-6
தான் மரித்ததை நினைவு கூறும்படி கிறிஸ்து தாமே தன் சீஷர்களுக்கு கட்டளையிட்டார். அதை அவர்களும் ஆதி கிறிஸ்தவர்களும் கடைபிடித்தார்கள். லூக்கா 22:19
கிறிஸ்துமஸ், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகைகளை பிற்காலங்களில் உருவான கத்தோலிக்கர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.
சதுர்நாலியா என்ற ரோம் நாட்டுப் பண்டிகையை திசைதிருப்பி கிறிஸ்துமஸ் பண்டிகையாக லாவகமாக மாற்றினார்கள். இதை குறித்த விபரமான தகவலுக்கு நம்முடைய கேள்வி பதில் புத்தகம் வாங்கியவர்கள் கேள்வி எண் #661 & #633ஐ பார்க்கவும்.
அது போலவே ரோமில் உள்ள விக்கிரக ஆராதனைக்காரர்களின் இஷ்டார் தெய்வ பண்டிகையை கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாளாக மாற்றி உலகத்தை வேற்று பாதையில் மாற்றியதன் பெருமையும் அவர்களையே சாறும் !!
வேதத்தை பின்பற்றும்படியான கவனம் இவர்களுக்கு இருப்பதை காட்டிலும், *ஈஸ்டர் தினம் எப்போதும் ஞாயிறன்று வரும்படியாக கவனமாக கணக்கிடுவார்கள்.
*எப்படி ஈஸ்டர் தினத்தை கணக்கிடுகிறார்கள்*?
ஒவ்வொரு வருடமும் – மார்ச் 21ம் தேதியை மையமாக வைத்து – அந்த தேதிக்கு பின் வரும் பவுர்ணமியை தொடர்ந்து வரும் ஞாயிறு தினத்தை ஈஸ்டர் என்று தீர்மானிக்கிறார்கள்.
ஈஸ்டர் தேதியை முடிவு செய்ததும் அதற்கு முந்தியதை பொிய வியாழன், பொிய வெள்ளி என்றும் அறிவிப்பார்கள்.
இவர்கள் குறித்த அந்த ஈஸ்டர் ஞாயிற்றுகிழமையிலிருந்து பின்னோக்கி உள்ள 40வது நாளை குறித்து அந்த நாள் லெந்து நாட்களின் துவக்கம் என்று அறிவிப்பார்கள்.
*கீழே உள்ள அட்டவணையை பார்க்கவும்*:
ஈஸ்டரிலிருந்து 46 நாள் முன்னர் - சாம்பல் புதன்;
ஈஸ்டருக்கு 7 நாள் முன்பு – குருத்தோலை ஞாயிறு;
ஈஸ்டருக்கு 3நாளுக்கு முந்திய நாள் - பெரிய வியாழன்;
ஈஸ்டருக்கு 2நாளுக்கு முந்திய நாள் - பெரிய வெள்ளி;
39வது நாள் ஈஸ்டர் கழித்து - பரமேறிய நாள் !!
*பவுர்ணமியை வைத்து குறிக்கும் இவர்களின் கணக்கை வேதத்தில் எப்படி தேடமுடியும்*? இந்த பண்டிகைகளுக்கும் கிறிஸ்துவின் கட்டளைகளுக்கும் சம்பந்தமேது !! ??
*உலகமே கொண்டாடுகிறதே - கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கலாமா என்கிற ஒரு கேள்வி எழும் பட்சத்தில் நாம் வேதத்தை ஆராய்ந்து பார்க்க கடமைப்பட்டிருக்கிறறோம்*.
ஏசா. 1:13-14 இனி வீண் காணிக்கைகளைக் கொண்டுவரவேண்டாம்; தூபங்காட்டுதல் எனக்கு அருவருப்பாயிருக்கிறது; நீங்கள் அக்கிரமத்தோடே ஆசரிக்கிற மாதப்பிறப்பையும், ஓய்வு நாளையும், சபைக்கூட்டத்தையும் நான் இனிச்சகிக்கமாட்டேன். உங்கள் மாதப்பிறப்புகளையும், உங்கள் பண்டிகைகளையும் என் ஆத்துமா வெறுக்கிறது; அவைகள் எனக்கு வருத்தமாயிருக்கிறது; அவைகளைச் சுமந்து இளைத்துப்போனேன் என்றார்.
மாதப்பிறப்புகள் என்பது – பவுர்ணமியை குறிப்பிடுகிறது !!
இந்த பண்டிகைகளை ஒருபோதும் கிறிஸ்தவர்களோ, அப்போஸ்தலர்களோ கடைபிடித்ததாக வேதாகமத்தில் இல்லை.
வேதத்தில் சொல்லப்படாத அல்லது ஆதி கிறிஸ்தவர்கள் தொழுகையில் கடைபிடிக்கப்படாத எதையும் நாம் செயல்படுத்துவது வேதத்திற்கு முரணானது !!
தமிழ்நாட்டு கலாசாரத்திலும் இந்துக்கள் முறைமைகளிலும் அவர்கள் கும்பிடும் தெய்வங்களை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள்..
ஊர் எல்லையை காக்க ஒரு சாமி, படிப்பு நல்லா வரணும் என்பதற்காக ஒரு சாமி என்று பல தெய்வங்கள் உள்ளது போல வசந்த கால தெய்வம் என்கிற கிரேக்கர்கள் கும்பிட்டு வந்த விக்கிரகம் இஷ்டார் என்கிற ரோமானியர்களின் தெய்வம்.
விபசாரத்தில் பிறந்த தன் குழந்தையை ஊரே கும்பிடும்படி சூரிய கடவுள் தினமாக கிரேக்க ராணி தன் நாட்டினருக்கு அறிவித்து அனைவரையும் சதுர்நாலியா என்ற பண்டிகையை கும்பிடச்செய்தாள்.
அந்த சதுர்நாலியா பண்டிகையே கிறிஸ்துமஸ் என்று உருவெடுத்தது.
அது போல இஷ்டார் தெய்வத்தை வணங்கும் விக்கிரக ஆராதனை பண்டிகையும் ஈஸ்டர் தினமாக வலம் வருகிறது !!
இவையெல்லாம் நாங்கள் கொண்டாட மாட்டோம் என்று கத்தோலிக்கர் அல்லாத மற்ற கிறிஸ்தவ மதத்தினர் சுமார் 30 வருடம் முன்பு வரை வைராக்கியமாக இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் இப்போது ஈஸ்டர், கிறிஸ்துமஸ் என்று சகலத்தையும் கொண்டாட / கடைபிடிக்க பெரும்பாலானவர்கள் துவங்கியது பிசாசின் மிகப்பெரிய வெற்றி !!

இந்த பண்டிகை நாட்களின் விடுமுறையையும் விளம்பரத்தையும் முன்னிட்டு எப்போதும் அண்டாத சிலர் அந்த நாளில் பயத்தோடும் பக்தியோடும் வருவது உண்டு. உண்மையை வெளிக்கொண்டு வரும்படியும் உண்மையான சுவிசேஷத்தை கூறும் வாய்ப்பை அந்த நாளில் ஜனங்களுக்கு சொல்ல உண்மையான தேவ ஊழியர்கள் நழுவ விடக்கூடாது !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book வேண்டுவோர்* பயன்படுத்தவேண்டிய லிங்க் : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எங்களது வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
எங்களது YouTube Channel பெயர் "வேதம் அறிவோம்” https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக