#872 - *தை மாதம் நீ பொங்கல் கொண்டாடும் போது, ஆசிப் மாதம் நாங்கள் ஈஸ்டர் கொண்டாடுவது தவறில்லை என்கிறார்களே?*
யாத். 12:2-3,6: "இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது
உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாயிருப்பதாக. நீங்கள் இஸ்ரவேல் சபையார்
யாவரையும் நோக்கி: இந்த மாதம் பத்தாம் தேதியில் வீட்டுத்தலைவர்கள், வீட்டுக்கு ஒரு ஆட்டுக்குட்டியாக, ஒவ்வொருவரும்
ஒவ்வொரு ஆட்டுக்குட்டியைத் தெரிந்து கொள்ளக்கடவர்கள். … அதை இந்த மாதம் பதினாலாம்
தேதிவரைக்கும் வைத்திருந்து, இஸ்ரவேல் சபையின் ஒவ்வொரு
கூட்டத்தாரும் சாயங்காலத்தில் அதை அடித்து,"
தை மாதம் பொங்கல் நீ கொண்டாடும் போது, ஆசிப் மாதம் நாங்கள் ஈஸ்டர்
கொண்டாடுவது தவறில்லை. இது பண்டய மக்களின் பாரம்பரியம். பாரம்பரிய பண்பாடு
கலாச்சாரத்தை தடை செய்ய நீ யார்? ஈஸ்டர் பண்டிகையை ஆதிகாலத்து கிறிஸ்துவின் சீஷர்கள் கொண்டாடும்போது
கிறிஸ்துவின் சபையார் ஏன் கொண்டாடக் கூடாது என்று ஒருவர் என்னிடம் கேட்டதற்கு பதில் என்ன சொல்வது?
*பதில்*
கிறிஸ்தவர்கள்
கிறிஸ்துவின் கட்டளையை மாத்திரம் பின்பற்ற வேண்டும்.
அவர்கள்
சுயமாய் யோசிக்க முடியாது. ஏனென்றால் கிறிஸ்துவர்கள் அனைவரும் உடல் மாத்திரமே.
வழக்க
சொல்லில் ஒப்பனையாக சொல்வதென்றால் கிறிஸ்தவர்கள் அனைவரும் தலையில்லாத முண்டம். எபே.
4:16, 1கொரி.
12:27, ரோ. 12:5
அந்த
முன்டத்திற்கு தலை கிறிஸ்துவாக இருக்கிறார்.
கொலோ. 1:18, எபே. 4:15, எபே. 1:23,
சுமார்
600 கி.பி களில் கத்தோலிக்கம் துவங்கிய பின்னர் கிறிஸ்தவத்திற்குள் அநேக சடங்குகள்
வந்தது.
வேதத்தில்
ஈஸ்டர் கொண்டாடியதாக எந்த ஆதாரமும் இல்லாததால் கிறிஸ்தவர்கள் அதை பின்பற்றுவது
இல்லை.
மேலும்
- ஈஸ்டர் நாள் என்பது அமாவாசையை அடிப்படையாக குறிக்கப்படும் ஒரு மதச் சடங்கு. போன
வருடம் எந்த தேதியில் ஈஸ்டர் வந்தது?
அடுத்த வருடம் எந்த தேதி என்று காலண்டார் பார்க்காமல் சொல்லமுடியுமா?
கிறிஸ்து
உயிர்த்தெழுந்தது சரித்திரம்.
ஒரு
வாரத்தின் முதல் நாளில் உயிர்த்தெழுந்தார்.
அதை
நினைத்து வருஷத்திற்கு ஒரு முறை நன்றி சொன்னால் போதாது - எல்லா வாரத்தின் முதல்
நாளிலும் தேவனுக்கு நன்றி சொல்லவேண்டும்.
கிறிஸ்துவின் மரணத்தை அன்று நினைவுகூர்ந்தனர்.
தான்
உயிரோடு எழுந்ததை அல்ல மரணத்தை நினைவுகூறும்படி இயேசு கட்டளையிட்டார் - லூக்கா
22:19
கிறிஸ்தவ
மதத்தினர் கொண்டாடும் பண்டிகைகள் வேதத்தில் இல்லை. அதை கிறிஸ்தவர்கள்
கடைபிடித்தால் தேவனுக்கு கீழ்படிந்திருக்கமுடியாது - 1யோ. 2:4
இந்த
ஈஸ்டர் பண்டிகை எப்படி துவங்கியது என்ற வரலாறு அறிந்தால் இந்த ஈஸ்டருக்கும்
கிறிஸ்து உயிர்த்தெழுதலுக்கும் சம்பந்தமேயில்லை என்பது புரியும்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக