#871 -*வாரத்தின் முதல்நாள் சபை கூடினால் அது ஆராதனை (அப்பம் பிட்கும்படி)
செய்யும்படி தான் இருக்க வேண்டுமா?*
நடுவார வேதவகுப்பு போல் (அப்பம் பிட்குதல் இல்லாமல்) கூடக்கூடாதா?
அதாவது வாரத்தின் முதல்நாள் கர்த்தரின் பந்தி நடத்தாமல் சபை கூடலாமா?
காலை சபை கூடும் இடத்தில் ஆராதனையில்
கலந்து கெண்ட பிறகு
நான் மட்டும் எங்கள் வீட்டில் ஆராதனை நடத்தலாமா?
*பதில்*
1-
*வாரத்தின்
முதல்நாள் சபை கூடினால் அது ஆராதனை (அப்பம் பிட்கும்படி) செய்யும்படி தான் இருக்க
வேண்டுமா*?
*தொழுகைக்காய்
கூடுவதானால்* ஜெபம்+பாடல்+செய்தி+காணிக்கை+பந்தி ஆகிய 5 பகுதிகளும் அடங்கியதாக இருக்க
வேண்டும்.
அந்த
விசேஷமான நாளில் தேவனுடைய தொழுகை அவசியம்.
அது
முடிந்த பின்னர் பாடல் பயிற்சிக்காகவோ வேத ஆராய்ச்சிக்காகவோ மற்ற காரியங்களுக்காகவோ
கூடுவதில் எந்த ஆட்சேபனையும் இருப்பதாக வேதத்தில் காணவில்லை.
2-
*நடுவார
வேதவகுப்பு போல் (அப்பம் பிட்குதல் இல்லாமல்) கூடக்கூடாதா*?
தாராளமாக
எந்த நாளிலும் வேதவகுப்பை நடத்தலாம் – அப் 2:46
கர்த்தரின்
மரணத்தை நினைவுகூறும்படியாக அப்பம் பிட்குதல் வாரத்தின் முதல் நாளை தவிர்த்து வேறு
எந்த நாளிலும் கூடினதாக புதிய ஏற்பாட்டில் இல்லை !!
3-
*அதாவது
வாரத்தின் முதல்நாள் கர்த்தரின் பந்தி நடத்தாமல் சபை கூடலாமா*?
தொழுகைக்கென்று
சபை கூடினால் - புதிய ஏற்பாட்டு சத்தியத்தின்படி கர்த்தரின் பந்தியும் சேர்ந்து
இருக்க வேண்டும். லூக்கா 6:46,
1யோ 2:4
4-
*காலை
சபை கூடும் இடத்தில் ஆராதனையில் கலந்து
கெண்ட பிறகு
நான்
மட்டும் எங்கள் வீட்டில் ஆராதனை நடத்தலாமா*?
இதற்கான
அவசியம் ஏன் ஏற்படுகிறது?
ஐக்கியமின்மை
காரணமாக இருந்தால் – ஐக்கியத்தை பலப்படுத்தவேண்டும். ஐக்கியம் இல்லாமல் –
மற்றவர்களோடு கிறிஸ்தவ அன்பை வளர்க்கமுடியாது. எபி 10:24
ஒருவேளை
- நீங்கள் கூடும் கூடுகை தவறான கொள்கையுள்ளதாக இருப்பின் – வேதத்தின்படி அவர்களுக்கு எடுத்து சொல்ல
உங்களுக்கு கடமையுள்ளது. தீத்து 3:10-11
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக