திங்கள், 13 ஏப்ரல், 2020

#873 - சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.

#873 - *சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள் என்பதை விளக்கவும்*. மத். 10:16 ஆடுகளை ஓய்நாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போலவினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்- விளக்கவும்

*பதில்*

*ஆடுகள்*:
எதிர்ப்பை காண்பிக்க தெரியாத மற்றும் இவைகளால் எந்த பாதிப்பும் இல்லை என்று எவரும் சுலபமாக கிட்டே அநுகக்கூடிய ஒன்று.

*ஓநாய்*:
சுரனையற்ற, தாய், பிள்ளை என்றும் வித்தியாசம் பார்க்க தெரியாத மூர்க்கமான நட்பு அறியாத கொடூரமான ஒரு குளிர்ந்த சுயநலமிக்க மிருகம். 

இயேசு கூறியதன் அர்த்தம்:
உங்கள் அப்பாவித்தனம் பாதுகாப்பானதாக இருக்காது.

பாம்புகளைப் போல வினாவுள்ளவர்கள் என்றால் – பிரச்சனை வருவதற்கு முன்னர் அதை அறிந்து கொள்ளும் திரனுள்ளவர்களாக இருங்கள் என்றார்.

பாம்புகள் எப்போதும் அறிவுள்ளதும் தந்திரமுள்ளதாக இருந்தன, ஆதி. 3:1.

தங்களின் சூசகத்தன்மையையும் அறிவையும் வெளிப்படுத்தும்படியாக  எகிப்தியர்கள் தங்கள் ஹைரோகிளிஃபிக்ஸில் பாம்பை அடையாளமாகப் பயன்படுத்தினர்.

பாம்பைப் போல வினாவுள்ளவர்களாக இருக்கவேண்டும் என்று கிறிஸ்து தம்மைப் பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்திய விஷயம் ஆபத்தைத் தவிர்ப்பதில் எச்சரிக்கையாக இருந்தது.

எந்தவொரு மிருகமும் ஆபத்திலிருந்து தப்பிப்பதில் அவைகள் வெளிப்படுத்தும் வேகத்திலும் திறமையிலும் பாம்பிற்கு சமம் எதுவும் இல்லை. க்ஷனப்பொழுதில் பாம்பு விலகி ஓடிவிடும்.

உங்களுக்கு கேடு விளைவிக்கும் ஒரு உலகத்தின் மத்தியில் உங்களுக்கு எச்சரிக்கையும் ஞானமும் தேவை என்றார்.

அவர் அவர்களை பாதிப்பில்லாமல் இருக்கவும், ஆபத்தைத் தூண்டக்கூடாது, காயம் செய்யக்கூடாது என்றும் தெரிவித்தார்.

பெரும்பாலான மக்கள் பாம்பை அடித்துக்கொல்லுவார்கள், ஆனால், ஒரு புறாவைக் கொல்லும் அளவுக்கு மிகக் குறைவான மனதுள்ளவர்கள்.

புறா சுத்தமான பறவை. பலிக்கு உகந்தது.  – லேவி. 14:22
 
மற்ற பறவை அல்லது மிருகங்களுக்கு இருப்பது போல புறாவிற்கு பித்தம் அதன் சரீரத்தில் கிடையாது !! கசப்பு என்பது அதன் சரீரத்திலேயே இல்லை. அது போல கிறிஸ்தவர்கள் சுயநலமற்ற கசப்பற்ற பரிசுத்தமான மனதுடன் எப்போதும் புறாவை போல மென்மையானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றார்.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக