#870 - *சாமுவேலின் உடன்பிறப்புகள் எத்தனை?*
அவருடன் சேர்த்து மூன்றா? அல்லது அவர் தவிர்த்து மூன்றா?
1 சாமுவேல் 2:21=> அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார். அவள்
கர்ப்பந்தரித்து மூன்று குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள். சாமுவேல்
என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியில் வளர்ந்தான்.
*பதில்*
இந்த
வசனத்திற்கு மேலே வாசிக்கும்போது இதற்கான பதிலை கவனிக்க முடியும்.
1சாமு
2:19 அவனுடைய தாய் வருஷந்தோறும் செலுத்தும் பலியைச் செலுத்துகிறதற்காக, தன் புருஷனோடேகூட
வருகிறபோதெல்லாம், அவனுக்கு ஒரு சின்னச் சட்டையைத் தைத்துக்
கொண்டு வருவாள்.
1சாமு
2:20 ஏலி எல்க்கானாவையும் அவன் மனைவியையும் ஆசீர்வதித்து: இந்த ஸ்திரீ *கர்த்தருக்கென்று
ஒப்புக் கொடுத்ததற்குப் பதிலாகக்* கர்த்தர் உனக்கு *அவளாலே சந்தானம்
கட்டளையிடுவாராக* என்றான்;
அவர்கள் தங்கள் ஸ்தானத்திற்குத் திரும்பப் போய்விட்டார்கள்.
1சாமு
2:21 அப்படியே கர்த்தர் அன்னாளைக் கடாட்சித்தார்; அவள் *கர்ப்பந்தரித்து* மூன்று
குமாரரையும் இரண்டு குமாரத்திகளையும் பெற்றாள்; சாமுவேல்
என்னும் பிள்ளையாண்டான் கர்த்தருடைய சந்நிதியிலே வளர்ந்தான்.
இந்த
வசனங்களின் அடிப்படையில் சாமுவேலுக்கு 3 தம்பிகளும் 2 தங்கைகளும் தன் தாயின் மூலம்
இருந்தது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக