#867 - *இந்த கொரோனா பாதிப்பு சமயத்தில் உலகம் முழுவதும் 144 தடை பிறப்பிக்கபட்டுள்ளதால் சபை அனைத்தும் மூடப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது ... சில சபைகளில் on Line மூலமாக வீடுகளில் இருந்தபடியே திருவிருந்து கொடுக்க சொல்லுகிறார்கள்.. வேதத்தின் படி இது சரியா ... விளக்கவும்*.
*பதில்*
புதிய ஏற்பாட்டில் சபை என்று சொல்லப்படுவது கட்டிடத்தை அல்ல. சபை என்றால் "பிரித்தெடுக்கப்பட்டவர்கள்" – அப். 2:47
சபை என்பது தலையாகிய *கிறிஸ்துவினுடைய சரீரத்தை* குறிக்கிறது. கிறிஸ்தவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறார்கள் – எபே. 1:23, கொலோ. 1:24
ஆதிக் கால கிறிஸ்தவர்கள் வீடுகளில் கூடி தேவனை தொழுது கொண்டார்கள். பிலே. 1:2, ரோ 16:5, 1கொரி. 16:19, கொலோ. 4:15.
கொஞ்சம் பெரிய வீடாக இருந்த பட்சத்தில் மற்றவர்களும் அங்கு போய் கூடினார்கள் - அப். 12:12.
சரித்திர தகவல்களின்படி கி.பி 240களில் வீடுகளை தவிர்த்து பொதுவான ஒரு இடத்தை தெரிந்தெடுத்து கூடி தேவனை தொழுது கொள்ளும் பழக்கம் துவங்கினது.
அந்த இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள முனைந்ததோடு நின்றுவிடாமல் மெதுமெதுவாக கட்டிடம் அலங்காரம் பெற துவங்கியது.
கட்டிடத்தினுள் பிரத்யேக வடிவமும் உள்அலங்காரமும் முக்கியத்துவம் பெற துவங்கியதும்; ஜனங்களின் இருதயத்தில் தேவன் வாசமாயிருக்கிறார் என்ற கருத்தை மறந்து; அந்த கட்டிடத்திற்குள் தேவன் வசிக்கிறார் என்ற கோணத்தில் அநேகர் நிணைக்கத் தூண்டப்பட்டார்கள்.
பிரத்யேக கட்டிடம் அவசியம் அல்ல. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் எந்த இடத்தில் கூடினாலும் அங்கு அவரும் ஆஜர் (இருக்கிறேன்) என்று வாக்கு கொடுத்திருக்கிறார். மத். 18:20
ஆகவே அவரவர் வீடுகளில் கணவனும் மனைவியும் பிள்ளைகளும் பெற்றோரும் சேர்ந்து
ஜெபித்து; அப் 12:5, 12
துதித்துப் பாடி; எபே 5:19
வசனங்களை வாசித்து – ஆராய்ந்து;1கொரி 4:17
கர்த்தருடைய பந்தியை வீட்டிலேயே தயாரித்து (கோதுமை மாவில் சிறிய ரொட்டியை செய்து + திராட்சை ரசம் எடுத்து அல்லது உலர் திராட்சையை வெண்ணீரில் கொதிக்க வைத்து பிழிந்து எடுத்துக்கொள்ளலாம்); அப் 20:7
காணிக்கையை சேகரித்து (சபை வளர்ச்சிக்கென்று); 1கொரி 16:1-2
தொழுகையை வீட்டிலேயே நடத்திக்கொள்வதில் வேதம் தெளிவாக இருக்கிறது.
*கவனிக்கவேண்டியவை 👇*:
*வீட்டில் கூடும் போது உள்ள சிக்கல்கள் / சவால்கள்*:
நடத்துபவர்கள் ஞானஸ்நானம் எடுத்த ஆண்களாக இருக்க வேண்டும்.
சேகரிக்கும் காணிக்கையை தனியே வைத்து கிறிஸ்தவ வளர்ச்சி காரியங்களுக்கென்று உபயோகப்படுத்தவேண்டும்.
வார்த்தையை இன்னும் அதிகமாய் ஆழமாய் அறிந்து கொள்வதற்கு ஆன்லைன் பிரசங்கங்கள் பிரயோஜனப்படுவதில் தவறில்லை. ஆனால் *அது ஐக்கியமல்ல* !!
ஐக்கியம் என்பது கூடிவந்து ஒருவருக்கொருவர் அப்பத்தை பிட்டுக்கொள்வதில் உள்ளது.
ஊரடங்கு உத்தரவுகளின் நிமித்தம் ஏற்பட்டிருக்கும் இந்த நெருக்கடியினால் அநேகர் ஒரிடத்தில் கூடிவரமுடியாதாகையால், இரட்சிக்கப்பட்ட இரண்டு ஆண்கள் ஓரிடத்தில் இருந்தால், அருகாமையில் உள்ள உதவி தேவைப்படும் வீடுகளுக்கு சென்று உதவலாம்.
ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஜெபிக்க, நடத்த, பேச என்று எப்போதும் சீஷத்துவத்தில் பயிற்றுவிக்க வேண்டும் என்ற இயேசு கிறிஸ்துவின் முன்னுதாரணம் இக்கால கிறிஸ்தவ மேடை முதலாளிகளுக்கு பெரிய சவால் தான்.
தன் சொந்த மகனை அல்லது மருமகனைத் அல்லது நெருங்கிய உறவினரைத் தவிர மற்றவர்களை பயிற்றுவித்தால் தனியாக அவன் வளர்ந்து தன் ஆடுகளை இழுத்துக்கொண்டு போய்விடுவானோ என்ற அச்சத்தில் சபையை வளர்க்காமல் இருந்து விட்டதன் விளைவு இன்று தன் ஆடுகள் சிதறப்பட்டு போய்விடாமலிருக்க அவர்கள் படும்பாட்டினால் பெறும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.
அநேகருக்கு,
குறிப்பாக காணிக்கை எப்படியாவது தனக்கு வந்து சேர்ந்து விடவேண்டும் என்ற ஆதங்கம்.
வீடுகளில் கூடி தொழுது கொள்வது வேதத்திற்கு உகந்ததே. ஆன்லைனில் செய்தியை ஊழியரிடம் இருந்து பெற்றுக்கொள்வது தாராளமாக நிச்சயமாக அவரவர் விசுவாச வளர்ச்சிக்கு உதவும்.
ஆனால், கர்த்தருடைய பந்தி என்பதை பகிர்ந்தளிக்க இரட்சிக்கப்பட்ட ஆண் அங்கு நேரடியாக இருப்பது அவசியம்.
டி.வியில் ஊழியர் அப்பத்தைக் காண்பிக்க வீட்டில் உட்கார்ந்துக்கொண்டு கையிலுள்ள அப்பத்தை எடுத்து சாப்பிட்டுக்கொள்வதென்பது தேவத்திற்கு முரணானது.
சபையார் தங்கள் காணிக்கையை டிவியில் காண்பித்துவிட்டு தன் பெட்டியில் போட்டால் ஏற்றுக்கொள்வரோ?
*எடி ஜோயல் சில்ஸ்பி*
கர்த்தருடைய வேலைக்காரன்,
கிறிஸ்துவின் சபை, கணியாகுளம்,
தொடர்பு : +91 81 44 77 6229
Tweet @joelsilsbee
*கேள்வியும் வேதாகம பதில்களும் Whatsapp (Locked) குழுவில் இணைய : https://chat.whatsapp.com/EKPqmK9OPZuH4m7AihX443
*Q&A Biblical Book ஆர்டர் செய்ய* :
https://joelsilsbee.wordpress.com/2021/02/23/qa-book/
----*----*----*----*----*
ஞாயிறு, 12 ஏப்ரல், 2020
#867 - சில சபைகளில் on Line மூலமாக வீடுகளில் இருந்தபடியே திருவிருந்து கொடுக்க சொல்லுகிறார்கள்.. வேதத்தின் படி இது சரியா ... விளக்கவும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக