#866 - *வெளி. 20:15ல் சொல்லப்பட்ட அக்கினிகடல் என்பது உண்மையான அக்கினியிலானதா? அல்லது எப்படி
புரிந்து கொள்வது?*
*பதில்*
அக்கினிகடல்
என்ற வார்த்தையை வெளிப்படுத்துதல் புத்தகத்தில் 19:20; 20:10; 14,15, 21:8 இடங்களிலும் பார்க்கமுடியும்.
இது
கந்தகத்தால் எரியும் என்று விவரிக்கப்பட்டுள்ளது (வெளி 19:20).
இதில்
மிருகமும்(பிசாசு வெளி 20:7),
பொய்யான
தீர்க்கதரிசி (தவறாக போதிப்பவர்கள்),
பொய்யான
அற்புதங்களை நம்பி அவனைச்சார்ந்தவர்கள்,
மற்றும்
உருவத்தை வணங்கியவர்கள் (வெளி 19:20)
அக்கினி
கடலில் உயிருடன் வீசப்படுகிறார்கள் (20:10).
மேலும்
தேவபக்தியற்றவர்கள் மற்றும் ஜீவபுத்தகத்தில் காணப்படாத அனைவரும் இதில் தள்ளப்படுகிறார்கள்.
வெளி 20:15
பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும்,
அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம்
மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே தள்ளப்படுகிறார்கள் (வெளி 21:8).
அத்துடன்
மரணம் மற்றும் பாதாளமும் தள்ளப்படுகிறது (வெளி. 20:14).
அக்கினி
கடல் என்பது இரண்டாவது மரணத்தை குறிக்கிறது (வெளி. 20:14; 21:8).
அது
தணிக்க முடியாத நெருப்பு (மாற்கு 9:43).
சில
வேத வல்லுனர்கள் அக்கினி கடல் என்பது இறுதித் தீர்ப்பில் நித்தியமாக இருக்காது
என்று கருதுகின்றனர்.
இருப்பினும், இந்த வார்த்தையின்
பயன்பாடுகளை குறித்து விளக்கத்திற்கு அவசியமில்லை என்றே நினைக்கிறேன்.
வெளிப்படுத்தல்
புத்தகம் குறியீடுகளால் ஆனது. வார்த்தைகளை நாம் அப்படியே எடுத்துக்கொள்ளாமல் அந்த
குறியீட்டை அகற்றி/உடைத்து அர்த்தம் கொள்ளவேண்டும். எனவே இந்த அக்கினி கடலுக்கான துல்லியமான
விளக்கங்கள் கடினமே.
அக்கினி
கடல் என்பது உருவகமா அல்லது உண்மையிலேயே நெருப்பா என்பதை அறிவதைக்காட்டிலும் –
நிச்சயம் இது நிரந்தர வேதனைக்குறிய அழிவில்லாத அவியாத வலிதீராத ஒரு தண்டனைக்குறிய
இடம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.
மத்தேயு
25:31-46ல், நீதிமான்களையும் துன்மார்க்கரையும் பிரித்த நிலையில், நியாயத்தீர்ப்பை இயேசு கிறிஸ்து விவரிக்கிறார்.
இடது
பக்கத்தில் நிற்கும் துன்மார்க்கரைப் பார்த்து கர்த்தர் கூறுவார், "சபிக்கப்பட்டவர்களே,
என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே
போங்கள்." மத் 25:41 என்று.
இதிலிருந்து
இரண்டு விஷயங்களைக் கவனியுங்கள்: 1) நரகம் என்பது "நித்திய நெருப்பின்"
இடம், மற்றும்
2) இது பிசாசுக்கும் அவனுடைய தூதர்களுக்கும் தயாராக வைக்கப்பட்ட ஓர் இடம்.
நரகம்
எந்த மனிதருக்காகவோ தயாராக வைக்கப்படவில்லை. ஆனால், வசனத்திற்கு கீழ்படியாமல் தாங்களாக
தேர்ந்தெடுத்துக்கொள்ளும் நபர்கள் இதில் பங்கடைகிறார்கள். (மத் 25:46)
மற்றொரு
வசனத்தில் இவ்வாறு கூறுகிறது: "என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச்
சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக்
கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு
நலமாயிருக்கும். உன் கை உனக்கு இடறல் உண்டாக்கினால்,
அதைத் தறித்துப்போடு; நீ இரண்டு கையுடையவனாய்
அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய்
ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும்
அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கால் உனக்கு இடறல் உண்டாக்கினால் அதைத் தறித்துப்போடு;
நீ இரண்டு காலுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே
தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய் ஜீவனுக்குள்
பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.
அங்கே
அவர்கள் புழு சாவாமலும் அக்கினி அவியாமலுமிருக்கும். உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப்
பிடுங்கிப்போடு; நீ இரண்டு கண்ணுடையவனாய் நரக அக்கினியிலே
தள்ளப்படுவதைப்பார்க்கிலும், ஒற்றைக் கண்ணனாய் தேவனுடைய
ராஜ்யத்தில் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும். அங்கே அவர்கள் புழு சாவாமலும்
அக்கினி அவியாமலுமிருக்கும்." - மாற்கு 9:42-48.
நரகத்தின்
நெருப்பைப் பற்றி இயேசு வலியுறுத்துவதைக் கவனியுங்கள், மேலும்
"அவர்களுடைய புழு சாவதில்லை" என்று அவர் கூறுகிறார் என்பதைக்
கவனியுங்கள் - வேறுவிதமாகக் கூறினால் அவர்கள் இன்னும் வலியை உணர்கிறார்கள். இந்த
வலி நித்தியமானது.
வெளி
20:10-15ல், கர்த்தர் நரகத்தைப் பற்றி யோவானுக்கு வெளிப்படுத்துகிறார்.
அவர்களை
ஏமாற்றிய பிசாசு நெருப்பு மற்றும் கந்தக ஏரிக்குள் தள்ளப்பட்டான். அங்கே மிருகமும் பொய்யான தீர்க்கதரிசியும்
இருக்கிறார்கள்; அவர்கள் இரவும் பகலும் என்றென்றும் துன்புறுத்தப்படுவார்கள்.
சத்தியத்தை
உணர்ந்து கட்டுக்கதைகளுக்கு விலக்கி உண்மையான தேவனை அவர் சொன்ன வகையில் வாழ்வோமென்றால்
– இவ்வகை தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளமுடியும்.
இயேசு
அனைவரின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார்.
"இவ்வளவு
பெரிய இரட்சிப்பை நாம் புறக்கணித்தால் நாம் எவ்வாறு தப்பிப்போம்?" (எபிரெயர் 2:3).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக