#865 - *உம்மைப் பெற்றவள் பாக்கியமுள்ளவள் என்று லூக்கா 11:27-28 வசனங்களை விளக்கவும்*.
*பதில்*
லூக்கா
11:27-28 அவர் இவைகளைச் சொல்லுகையில்,
ஜனக்கூட்டத்திலிருந்த ஒரு ஸ்திரீ அவரை நோக்கி: உம்மைச் சுமந்த
கர்ப்பமும் நீர் பாலுண்ட முலைகளும் பாக்கியமுள்ளவைகளென்று சத்தமிட்டுச் சொன்னாள். அதற்கு அவர்: அப்படியானாலும், தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே
அதிக பாக்கியவான்கள் என்றார்.
இயேசு
கிறிஸ்துவின் போதனையைக்கேட்டு பூரித்துப்போன ஒரு ஸ்திரீ இப்படியாக இயேசு கிறிஸ்துவை
பாராட்டினார்.
ஒரு
தாயாக இருந்த ஒரு பெண் இவ்வாறு பூரிப்படைவது மிகவும் இயல்பானது.
அத்தகைய
மகனுக்கு தாயாக இருந்த ஒரு பெண்ணின் மகிழ்ச்சி உண்மையில் பெரியது என்று அவள்
நினைத்தாள்.
ஆனால்
நம்முடைய ஆண்டவரோ,
இப்படிப்பட்ட
ஒரு குமாரனுக்கு தாயாக இருப்பதால் பயனடைய முடியாது என்பதையும், கிறிஸ்துவை தங்கள்
இருதயங்களில் சுமந்தால் மட்டுமே மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்பதை அவளுக்குக் தெரிவித்தார்.
கிறிஸ்து
இயேசுவின் இரட்சிப்பின் நற்செய்தியைக் கேட்டு, விசுவாசித்து மனந்திரும்பி, அவர் வார்த்தைக்கு கீழ்படிதலே இரட்சிப்பை தருகிறது. அவற்றை அப்பட்டமான
வாழ்க்கையில் கடைப்பிடிப்பதில் உண்மையான மகிழ்ச்சி காணப்படுகிறது.
நித்திய
மகிழ்ச்சி – நம் கிரியையினால் அல்ல.
அவர்
வார்த்தைக்கு கீழ்படிதலினால் வருகிறது.
இல்லையென்றால்
– அதிக பண உதவி செய்ய திராணியுள்ளவர்களும்,
பெரிய கோயிலை கட்ட முழு பணத்தையும் சிலவு செய்பவர்களும், அன்னதானம் செய்தவர்களும், இப்படி பல நல்ல காரியங்கள்
செய்து விட்டு நித்திய மகிழ்ச்சியை அடைந்து முடியுமே !!
மரியாள்
கிருபை பெற்றவர், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர் தான் – அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும்
அதன் நிமித்தமாக மாத்திரம் அல்ல – அவர்கள் தன் ஆண்டவருக்கு எப்போதும் கீழ்படிந்தார்
என்பது தான் முக்கியம் !! லூக்கா 1:48, லூக்கா 1:38, அப். 1:14, யோ. 2:5, லூக்கா 8:21,
மத். 12:48-50, கொலோ. 3:17, ரோ. 4:4
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக