சனி, 11 ஏப்ரல், 2020

#864 - கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதற்கு முன்பு மற்றவர்களுடைய கால்களைக் கழுவுதல் சரியா?

#864 - *கர்த்தருடைய பந்தியில் பங்கு பெறுவதற்கு முன்பு மற்றவர்களுடைய கால்களைக் கழுவுதல் சரியா?*
 
*பதில்*
கால் கழுவுதல் என்பது சபை தொழுகையில் ஒரு பங்கு அல்ல.
 
கால்களை கழுவுவது, சுகாதார நோக்கங்களுக்காக மட்டுமல்ல, கடவுளை வணங்குவதாகக் கூறப்படும் ஒரு மதச் செயலாக கருதப்படும் ஒரு கேள்வி இது.
 
யோவான் 13: 1-18ஐ முழுவதுமாக பொறுமையாக வாசிக்கவும்.
 
இயேசு பூமியில் வாழ்ந்த இறுதி வாரத்தில், அவர் பரலோகம் ஏறிய பின்னும் சீஷர்கள் அவரை சரியாய் பின்தொடரும்படியான அளவிற்கு  அவர்களைத் தயார்படுத்திக் கொண்டிருந்தார்.
 
இயேசு கடைப்பிடித்த கடைசி பஸ்கா விருந்தை யோவான் 13 விவரிக்கிறது.
 
புதிய ஏற்பாட்டில் நாம் அறியப்பட்ட மரணத்தை நினைவு கூறுவதற்கான கர்த்தருடைய இராப்போஜனம் கடைபிடிக்கப்படுகிறது. (I கொரிந்தியர் 11:20).
 
தம்முடைய உண்மையான மனத்தாழ்மையை வெளிப்படுத்த, இயேசு அவர்களின் கால்களைக் கழுவினார்.
 
வரவிருக்கும் இராஜ்யத்தில் மிக முக்கியமான இடத்தை யார் பிடிப்பார்கள் என்ற போட்டி அவர்கள் சீஷர்களிடையே இருந்தது?
 
யாக்கோபுத மற்றும் யோவானின் தாயார், தன் மகன்களுக்காக ஒரு உயர்ந்த பதவிக்கு இயேசுவிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தார் (மத்தேயு 20:20-21).
 
கர்த்தர் எவ்வாறு பதிலளித்தார் என்பதைக் கவனியுங்கள். "அப்பொழுது, இயேசு அவர்களைக் கிட்டவரச்செய்து: புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ்செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும்வந்தார் என்றார். "(மத் 20:25-28).
 
இயேசு கால்களைக் கழுவ குனிந்தபோது, ​​பேதுரு, "ஆண்டவரே, நீ என் கால்களைக் கழுவலாமா?" என்றார். ஏதோ ஒன்று தவறாக இருப்பதை அவர் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டார்.
 
அவரல்லவோ இயேசுவின் கால்களைக் கழுவிக்கொண்டிருக்க வேண்டும்?
 
இயேசு தம்முடைய சீஷர்களிடம் சொன்னதை நடைமுறைக்குக் கொண்டுவந்தார். மிகுந்த மரியாதைக்குரிய நிலையை எதிர்பார்ப்பவர்கள் மற்றவர்களுக்கு சேவை செய்வதில் தங்களைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பாடம் இங்கே.
 
சபை ஸ்தாபிக்கப்பட்ட பின்னர் சீஷர்களால் சபையில் பின்பற்றப்பட வேண்டிய ஒரு மார்க்க சடங்கை இயேசு ஏற்படுத்துகிறாரா? நிச்சயமாக இல்லை.
 
முடிந்தபின், இயேசு, "நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல, அனுப்பப்பட்டவன் தன்னை அனுப்பினவரிலும் பெரியவனல்ல"(யோ 13:15-16).
 
சீஷர்களுக்கு மற்றவரின் கால்களைக் கழுவத் தெரிந்திருந்தாலும் அதில் அடங்கியிருக்கும் உண்மையான மனத்தாழ்மையை தெரிந்திருக்கவில்லை. குருவானவர் தன் சீஷருக்கு செய்து காண்பிக்கும் இந்த சேவையானது ஒரு மாதிரியான காரியம் - அதாவது மனத்தாழ்மையைக் வெளிப்படுத்தும் உதாரணம்.
 
கால் கழுவுதல் என்பது விருந்தோம்பலின் பொதுவான செயலாகும். இது பொதுவாக ஒரு விருந்தினருக்காக ஒரு வேலைக்காரரால் செய்யப்படுகிறது. ஆதி 18:4ஐப் படியுங்கள். அங்கு ஆபிரகாம் அந்த விருந்தோம்பல் செயலை வெளிப்படுத்துகிறார். தேவனிடமிருந்து வந்த தூதர்கள் லோத்தின் வீட்டிற்கு வந்தபோதும் அவர்களுக்கு அதே விரும்தோம்பல் சேவை வழங்கப்பட்டது - ஆதி 19:2.
 
கிழக்குவாழ் மக்களிடையே இருந்த இந்த கலாச்சாரமானது பல தலைமுறைகளில் கால் கழுவுதல் ஒரு வழக்கமாக இருந்தது.
 
செருப்பை அணிந்து, தூசி நிறைந்த சாலைகள் மற்றும் பாதைகளில் நடந்து சென்ற மக்கள் தங்கள் கால்களை குளிர்ந்த, சுத்தமான நீரில் கழுவுவது புத்துணர்ச்சியைக் கொடுக்கிறது.

இப்படிப்பட்ட விருந்தோம்பல் தொலைதூரத்திலிருந்து நம் வீட்டிற்கு வரும் விருந்தினருக்கும் நாம் செய்கிறோம். பாத்ரூம் போய் கொஞ்சம் ரிஃப்ரஷ் பண்ணிக்கொள்கிறீர்களா என்று நாம் கேட்பதும், கிராமத்து வீடுகளில் ஒரு பானையில் தண்ணீரை வீட்டிற்கு வெளியே வைத்து வெளியிலிருந்து வருபவர்கள் கை கால் அளம்புவதற்கு உதவுவதும் நம் கலாச்சாரத்திலும் இன்றும் உள்ளது.

கால் கழுவுதல் என்பது இன்று சபையில் சேர்க்கப்பட வேண்டிய வழிபாடு மற்றும் சேவை அல்ல.
 
"சபையில் ஒரு அங்கமாக" செயல்படுத்தப்படவேண்டும் என்று எந்தவொரு அறிவுறுத்தலும் இதை குறித்து இல்லை.
 
தேவன் - கால் கழுவுதலை ஒரு வழிபாட்டுச் செயலாக கருதவில்லை என்பதை தெளிவாகக் காட்டுகிறது. 1 தீமோ 5:10ல் ஒரு குறிப்பு உள்ளது. ஆனால் அது ஒரு தனிமனிதனின் தாழ்மையையும் நல்லொழுக்கத்தையும் வைத்து அவனுடைய வாழ்நாளில் கடைபிடிக்கவேண்டிய நற்பண்புகளின் கடமையாக சேர்க்கப்பட்டுள்ளது. அது சபை தொழுகையில் செய்யப்படவேண்டிய கடமையாக இல்லை.
 
கைகள் கழுவுவதலை முதன்மைப்படுத்துவதைக்காட்டிலும் கால்கள்  கழுவுதலுக்கு முன்னுரிமை உண்டாயிருந்ததா?
 
யூதர்கள் கைகளை கழுவுவதற்கு முன்பு சாப்பிட மாட்டார்கள் என்று மாற்கு கூறுகிறார்.
 
சுகாதாரமான காரணங்களுக்காக அல்ல மதரீதியான கோட்பாடுகளுக்காக கைகள் கழுவவேண்டியதை வலியுறுத்தினார்கள்.
 
ஆனால் இயேசு கிறிஸ்துவோ – இப்படிப்பட்ட மனிதர்களின் கோட்பாடுகளை / வழிபாட்டை "வீண்" என்று அழைத்தார்.  மாற்கு 7: 1-9.
கால்கள் கழுவுதலை ஒரு மதத்தின் செயலாகச் (சபையின் ஒரு பங்காக) செய்யும்போது இதே விஷயம் பொருந்தும்.
 
அப்போஸ்தலர்களோ, அல்லது முதல் மூன்று நூற்றாண்டுகளின் கிறிஸ்தவ இலக்கியங்களில், எந்தவொரு குறிப்பும் “தொழுகையில் அல்லது கர்த்தருடைய பந்தியின் போது” கால்களை கழுவினதாக இல்லை.
 
பரிசீலிக்கப்பட்ட செயல்களாலும் சொற்களாலும் இயேசு கிறிஸ்துவானவர் தாழ்மையை வெளிப்படுத்தும் ஒரு முன்னுதாரணமான காரியமாக செய்ததார் – யோ 13:15.
 
மேலும் கிறிஸ்து தெரிவிக்க நினைத்த போதனை, தாழ்மையான சேவைச் செயல்களில் சகோதர அன்பின் ஆவியின் வெளிப்பாடாகும். . .
 
கி.பி 306ம் வருஷத்தில் எழுதப்பட்ட எல்விராவின் சினோட் குறிப்பில் கால்களைக் கழுவுவதற்கான சடங்கு பயன்பாட்டை தெரிவிக்கிறது. ஆனால் அது ஏ.எச். நியூமன், சர்ச் வரலாற்றின் கையேடு, பிலடெல்பியா: அமெரிக்கன் பாப்டிஸ்ட் பப்ளிகேஷன் சொசைட்டி / ஜுட்சன் பிரஸ், 1933, தொகுதி I, பக்.140 கண்டிக்கப்படுகிறது !!
 
அவ்வாறு ஒரு மேன்மையானவர் தேவகுமாரன் தன் கால்களை கழுவியிருந்தும் – கற்றுக்கொள்ளாமல் யூதாஸ்காரியோத்து வெளியேறி ஆண்டவரைக்காட்டிக்கொடுத்தான் – யோ 13:21-27
 
கால்களைக் கழுவுதல் தாழ்மையை வெளிப்படுத்தும் ஒரு செயல். வெளியரங்கமாக கால்களை கழுவிவிட்டு வெளியே போய் அவர் கால்களை வாறிவிட்ட யூதாஸை போல இருந்துவிடகூடாது. தாழ்மை உள்ளத்தில் வரவேண்டும் – செயலில் அல்ல !!
 
கால் கழுவுதல் – ஆராதனை தொழுகை முறைமையில் கர்த்தருடைய பந்தியின் போது செய்யப்பட்டதாக வேதாகம சபை வரலாறில் கிடையாது. 
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக