#859 - *ஏன் இந்த காலங்களில் இது வலியுறுத்தப்படுவதில்லை?*
1-
ஒரு வீட்டில் பிரவேசிக்கிறபோது: இந்த வீட்டுக்குச் சமாதானம்
உண்டாவதாகவென்று முதலாவது சொல்லுங்கள். Luk 10:5
2-
இந்தச் சுவிசேஷம் உலகத்தில் எங்கெங்கே பிரசங்கிக்கப்படுமோ அங்கங்கே
இவளை நினைப்பதற்காக இவள் செய்ததும் சொல்லப்படும் என்று மெய்யாகவே உங்களுக்குச்
சொல்லுகிறேன் என்றார். மத் 26:13
*பதில்*
சமாதானம்
சொல்வது – அவர்களை வாழ்த்துவது.
ஸ்தோத்திரம்
(நன்றி) சொல்வது – கர்த்தருக்கு !!
1)
சமாதானம்
கூறும் பழக்கத்தை இஸ்லாமியர்கள் அறிந்தும் அறியாமலும் 100 சதவீதம்
கடைபிடிக்கிறார்கள்.
அரபி
மொழியில் “சலாம் அலைக்கும்” என்ற வார்த்தை தான் அது. உங்கள் மீது சமாதானம் உண்டாவதாக என்பது அதன்
தமிழ் அர்த்தம்.
அதற்கு
மறுமொழியாக அலைக்கும் சலாம் என்பது. அதாவது உங்களுக்கும் சமாதானம் உண்டாவதாக என்று
பதில்.
2003ம்
வருடம் ப்ரூனைய் நாட்டில் உயர்தரப்பட்ட அரசாங்க கூட்டம் ஒன்றிற்கு என் கம்பெனி
சார்பில் நான் கலந்து கொண்டபோது அங்கு வந்த இராணுவ அதிகாரி ஒவ்வொருவராக தன் கையை
கொடுத்து சலாம் அலைக்கும் என்று வாழ்த்தினார். என்னை தவிர அனைவரும் இஸ்லாமியர்கள்.
என்னிடம் வந்த போது குட்மார்னிங் என்றார். நான் சலாம் அலைக்கும் என்றதும் – No, you should not say that word என்று என்னிடம் சொலல நான் அவருக்கு அதன் அர்த்தத்தை சொல்லி அந்த ரீதியில்
உங்களை வாழ்த்துகிறேன் என்று சொன்னதும் ஆச்சரியப்பட்டார். அவர்கள் மலாய்
பேசுபவர்கள். எனக்கு அரபு மொழி சரளமாக பேச அறிந்ததால் வெட்கப்படவில்லை.
கிறிஸ்தவர்கள்
வழக்கமாக சமாதானம் என்று சொல்வதை காட்டிலும் கர்த்தருக்கு நன்றி சொல்லி
வாழ்த்துகிற பழக்கம் இக்காலத்தில் அதிகம் உள்ளது.
அனைத்து
நிருபங்களிலும் – வாழ்த்துதல் பெரும்பாலும் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக /
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக என்றே வருவதால் – ஒருவேளை இப்படி பழகினார்களோ
என்று நினைக்கிறேன்.
எப்படியாயினும்
ஒருவரை முதலில் பார்க்கும் போது அவரை காண செய்த தேவனுக்கு நன்றி சொல்லி பின் அவரை
சமாதானம் கூறி வாழ்த்துவது உகந்தது.
நம்முடைய
முதல் 2 குழுவில் அட்மின்களில் ஒருவராக இருக்கும் ஊழியர் ஜீவதுரை அவர்கள்
உங்களுக்கு சமாதானம் என்று தன் வாழ்த்துதலை துவங்குவார். மற்றபடி அனைவரும் வடமொழி
வார்த்தையான ஸ்தோத்திரம் தான் !!
ஏன்
ஸ்தோத்திரம் சொல்கிறோம் என்று பலருக்கு தெரியுமா என்பது சந்தேகமே !! அர்த்தம்
புரியாமலே அநேகர் ப்ரைஸ் த லார்ட் என்று ஸ்டைலாக சொல்லிவிடுவதும் உண்டு. கடைசியில்
கர்த்தருக்கு நன்றியும் போய் சேருவதில்லை !!
2-
அன்று
அந்த பெத்தானியா சிற்றூரில் உள்ள குஷ்டரோகியாயிருந்த சீமோனுடைய வீட்டில் கிறிஸ்து போஜனம் பண்ணிக்கொண்டிருந்த
போது அவர் தலையில் ஊற்றின அந்த சம்பவத்தை வேதத்தில் பதியவும், அதை இந்த 2000
வருடங்களாக அனைவரும் படிக்கவும் அதை குறித்து நீங்கள் கேட்பதும் நான் எழுதுவதும்
அனுதினமும் இப்படி நிறைவேறிக்கொண்டு தான் இருக்கிறது. மத். 26:7-8
இரட்சிப்பிற்கு
ஏற்ற சுவிசேஷம் என்ற நற்செய்தியானது - கிறிஸ்துவின் மரணம் அடக்கம் உயிர்த்தெழுதலை
குறித்தது. 1கொரி. 15:1-4
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக