செவ்வாய், 7 ஏப்ரல், 2020

#858 - தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள்.

#858 - *தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்ற வார்த்தை சரியானதா?*
யோபு 2:9  அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனை விடும் என்றாள். இந்த வசனத்தில் தூஷித்து என்ற வசனத்தின் மூல வசனம் என்ன கருத்தை சொல்கிறது? பலர் தூஷித்து என்பதாக பிரசங்கிக்கிறார்கள் *சிலர் துதித்து என்று பிரசங்கிக்கிறார்கள் எது சரி*?

*பதில்*
எபிரேயத்தில் பாஆரக் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வார்த்தைக்கு கீழ் வரும் அர்த்தங்கள் எபிரேய-அங்கில டிக்ஷனரியில் கொடுக்கப்பட்டுள்ளது.

கடவுளை வணங்கும்படி மண்டியிடு;
நேர்மாறாக – கடவுளையோ மனிதனையோ ராஜாவையோ, தேசத்துரோகமாக சபிக்கவும் இந்த வார்த்தையே
ஒட்டுமொத்தமாக எல்லாவற்றிற்காகவும் நிந்திப்பது,
ஆசீர்வாதம், வாழ்த்து, சாபம் என்றவைகளை அர்த்தமாக கொண்டுள்ளது.

ஆனால் யோபுவின் மனைவி எந்த அர்த்தத்தில் இதை யோபுவிடம் சொல்லியிருக்கமுடியும் என்பது அதே வசனத்தில் நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது “அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் *உம்முடைய உத்தமத்தில்* உறுதியாய் நிற்கிறீரோ?”

யோபுவின் உத்தமத்தை நன்கு படித்தவர்கள் நாம்.
அதில் ஏன் இன்னும் நிற்கிறீர் என்றால்?

யோபுவின் பதில் – அவளுடைய நோக்கத்தை இன்னும் நமக்கு தெளிவுபடுத்துகிறது:

யோபு 2:10 அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் *தீமையையும்* பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

துதிக்க சொல்லும் ஒரு மனைவி உயிரை விடும் என்று சொல்வாளோ?

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக