இஸ்ரவேல் ஜனங்களை ஆண்டவர் செங்கடலை பிளந்து எகிப்திலிருந்து கானானுக்கு
கொண்டு வந்தார்.
அவர்கள் போகும்போது செங்கடல் வழியாக போகவில்லை ஆனால் வரும்போது
செங்கடல் வழியாக கடந்து ஆண்டவர்
அற்புதத்தை நிகழ்த்தினார்.
வேறு ஏதாவது வழி இருக்கிறதா அப்படியானால் அவர்களின் அந்த வழியில்
செல்லாமல் செங்கடல் வழியாக ஆண்டவர் அவர்களை ஏன் நடத்தினார்.
*பதில்*
வேறு
வழி நிச்சயம் உள்ளது. வேதாகமத்தின் பின்புறத்தில் உள்ள வரைபடத்தை பார்க்கும் போது
அது தெளிவாக புலப்படும்.
யோசேப்பும், யாக்கோபும் மற்றும் அவரது
அண்ணன்கள் போக்கும் வரவுமாக இருந்தார்களே !!
மாற்று
வழி இருந்த போதும் ஏன் தேவன் இஸ்ரவேலர்களை இந்த வழியாக கொண்டு வரவேண்டும்? சில பாடங்களை நாம்
இதில் கற்றுக்கொள்ள முடிகிறது.
*குறிப்பாக*
- 1கொரி. 10:1-2ன் படி செங்கடல் வழியாக இஸ்ரவேலர்கள் அழைத்து
வரவேண்டியதன் நோக்கம் – ஞானஸ்நானத்திற்கு ஒப்பிடப்படுகிறது.
- ஜனங்களின் பொறுமையின்மை வெளிப்பட்டது – யாத். 14:10-12
- தன் ஜனங்களான இஸ்ரவேலரின் எதிராளியான எகிப்திய படைகள் இனி ஒரு போதும் இஸ்ரவேலரை பின் தொடராமல்
முற்றிலுமாய் முடிவிற்கு கொண்டு வரும்படி இந்த பாதையை தேவன் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும்
– யாத். 14:26-28
- தேவனுடைய நாமம் பிரத்யேகமாக எகிப்தியர் மத்தியில்
மகிமைப்படும்படியாக இந்த பாதை !! – யாத். 14:17-18
- இஸ்ரவேலரின் விசுவாசம் பலப்படும்படியும் மோசேக்கு அந்த
ஜனங்கள் கீழ்படியும் வண்ணமாக இந்த பாதை இருந்தது – யாத். 14:30-31
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக