செவ்வாய், 7 ஏப்ரல், 2020

#857 - இயேசு கடைபிடிக்க சொன்ன விஷயங்களை இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களிடத்திலும் ஊழியங்களிலும் காணமுடியாதது ஏனோ?

#857 - *இயேசு கடைபிடிக்க சொன்ன விஷயங்களை இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களிடத்திலும் ஊழியங்களிலும் காணமுடியாதது ஏனோ?*

*பதில்*
ஊழியரும் ஊழியங்களும் சபைகளும் எவ்வாறு நடத்தவேண்டும் என்று இயேசு கிறிஸ்து தன் இராஜ்ஜியத்தின் பணிகளை குறித்து அப்போஸ்தலர்களிடம் திருஷ்டாந்தப்படுத்தியதை பரிசுத்தஆவியானவர் தாமே அப்போஸ்தலர்கள் / எழுத்தாளர்கள் மூலமாக நம் வழிமுறைக்காக எழுதிவைக்கப்பட்ட தொகுப்பை வேதத்தில் பார்க்கிறோம்.

அப். 1:3, கொலோ. 1:13, 2தீமோ. 3:16, அப். 20:20, 20:27, 1கொரி. 12:7, 2தீமோ. 3:10-11, 2பேதுரு 1:19-21

சபையின் தொழுகை ஒழுங்கு முறையை குறித்தும் (1கொரி. 14)
மூப்பர்களை தேர்ந்தெடுக்கும் முறையை குறித்தும் (1தீமோ. 3)
ஊழியங்கள் செய்ய வேண்டிய விதத்தை குறித்தும் (1பேதுரு 5:2-3)
சொல்லப்பட்டிருந்தாலும் – அவைகளை அப்படியே பின்பற்றும் போது அநேக நடைமுறை சிக்கல் உள்ளது !!

இலகுவாக இந்த கேள்வியை கேட்டவிட்டீர்கள் – ஆனால் என் பதில் பலருக்கு முகச்சுளிவை தரும் !!

கிறிஸ்து ஒருவரே நமக்கு பிரதான ஆசாரியர் (எபி. 6:20)

கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆசாரியர்கள் (1பேதுரு 2:9)

சபையில் ஆண்கள் மாத்திரமே பிரசங்கிக்க வேண்டும் (1கொரி. 14:35)

மொழிபெயர்ப்பாளர் இல்லையென்றால் சபையில் கூடியிருக்கும் அனைவரும் புரிந்து கொள்ளும் மொழியில் தான் பேசவேண்டும் (1கொரி. 14:28)

கைதட்டியோ, தம்புரு வாசித்தோ, மேளம் கொட்டியோ புதிய ஏற்பாட்டு தொழுகை முறை வேதத்தில் சொல்லப்படவில்லை (மத். 26:30, எபே. 5:19, கொலோ. 3:16, 1கொரி. 14:26, 1கொரி. 14:15, யாக். 5:13, வெளி. 14:3, வெளி. 7:10)

அனைவரும் சகோதரர்கள் என்றே அழைக்கப்படவேண்டும் என்றார் இயேசு கிறிஸ்து (மத். 23:8)

ஊழியர்கள் உழைத்து தன் குடும்பத்தை நடத்த வேண்டும் – இல்லையென்றால் சாப்பிடவுங்கூடாதென்றார் ஆவியானவர் (2தெச. 3:10)

*சபையார் தங்களை பாஸ்டர் என்றும் ரெவரென்டு என்றும் ஃபாதர் என்றும் அழைக்க விரும்புகிறார்கள். கவுரவம் அவசியப்படுகிறது !!
ரெவரென்டு என்பது எந்த மனுஷனுக்கும் பொருந்தாது – அது பரலோக தேவனுக்குரியது. சங். 111:9

*டீகா பூகா உஸ் புஸ் ஷீரக்கா புரக்கா என்று எதையாவது வேற்று மொழியில் எவருக்கும் (அவருக்குமே) புரியாததை பேசினால் தான் உங்களை அபிஷேகம் பெற்றவர் என்றும் வல்லமையுள்ள பாஸ்டர் என்றும் ஜனங்கள் ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு அவர்களில் வேத திறனை இவர்கள் மட்டுப்படுத்திவைத்திருக்கிறார்கள்.

*இவர் மாத்திரம் போதாதென்று பல காரணங்களையும் சமாதானத்தையும் கூறி வேத வசனங்களை தங்களுக்கு ஏற்றார் போல் பிரித்தும் திரித்தும் ஊதி சொந்த வீட்டம்மாவையும் பாஸ்டரம்மாவாக்கி ஊரை நம்பவைத்திருக்கிறார்கள். அதன் விளைவாக கணவனை பின் தள்ளி ரெவரென்டு பெண்கள் முன்னேறிவிட்டார்கள்.

*நைட் கிளப்பை மிஞ்சும் அளவிற்கு மேடை அலங்காரமும், பாட்டு வரிகள் கூட காதில் விழாத அளவிற்கு இசைக்கருவிகளும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் அவரவர் அரங்கேற்றுகிறார்கள். கூடவே இப்போது அங்க அசைவுகளும் நடனமும்  வந்து விட்டது.

இவையெல்லாம் கிறிஸ்தவத்தில் இல்லை என்று மார்தட்டி கண்டித்து சொல்லும்படி  வேதத்தை அறிந்து உணர்ந்த அனைவரும் கைகோர்த்தால் தான் இப்படிப்பட்ட வியாபாரங்களும் வயிற்று பிழைப்புக்காரர்களும் முடிவிற்கு வரும். சங். 139:21, ரோ. 16:17-18, பிலி. 3:19

திறப்பில் நிற்கும் (தவறை சுட்டிகாட்டும்) ஆட்களை தேவன் அறிகிறார் !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக