*பதில்*
சுவாரஸ்யமான
கேள்வி..
இன்று
வரை இதை குறித்து யாரும் யோசித்து இருக்கமாட்டார்கள் என்றே தோன்றுகிறது.
மத்தேயு
எழுதும் போது 100, 60,
30 என்கிறார். (மத். 13:8, 23)
மாற்கு
எழுதும் போது 30, 60,
100 என்கிறார். (மாற்கு 4:8)
தேவனுடைய
இராஜ்ஜியத்தின் வசனம் ஜனங்களுக்குள்ளே விதைக்கப்படும் போது அதன் பலன் எப்படியாக
இருக்கும் என்ற பகுதியில் தான் நாம் இதை படிக்கிறோம் – மாற்கு 4:1-9, மத். 13:1-9
மத்.
13:23ல் கிறிஸ்துவானவர் தன் சீஷரிடத்தில் இந்த உவமையை விவரிக்கும் போது சொல்லும்
வசனம் நமக்கு இதன் ஆழத்தை உணர்த்துகிறது. நல்ல நிலத்தில் *விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக்
கேட்கிறவனும் உணருகிறவனுமாயிருந்து*, நூறாகவும் அறுபதாகவும் முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.
இந்தியாவில்
தற்போது உள்ள சட்டத்தின்படி 18வயது பூர்த்தியானால் மேஜர் என்று அங்கீகரிக்கிரதோ
வேதாகம காலத்தில் 30 வயதாகும் போது ஒருவரை ஆண் அல்லது மேஜர் என்று அங்கீகரிக்கிறது.
எண். 4:1-4
இயேசு
கிறிஸ்து 30வது வயதில் ஞானஸ்நானம் எடுத்தது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் –
லூக்கா 3:23
முப்பது
என்று சொல்லும் போது – வாழ்க்கையின் துவக்கத்திலானாலும்;
அறுவது
என்று சொல்லும் போது – வாழ்க்கையின் முதிர்ச்சியிலானாலும் (எண். 4:3);
நூறு
என்று சொல்லும் போது – முதிர்வயதிலானாலும்;
எவரும்
இரட்சிப்பை அடைந்து இராஜ்ஜியத்திற்கு பலன் தர தகுதியானவர்களே (மத். 13:23)
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக