செவ்வாய், 7 ஏப்ரல், 2020

#855 - மரியாள் ஏன் இயேசுவை தோட்டக்காரர் என எண்ணினார்?

#855 - *மரியாள் ஏன் இயேசுவை தோட்டக்காரர் என எண்ணினார்?*

யோவான் 20:15=> இயேசு அவளைப் பார்த்து: ஸ்திரீயே, ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன்.

*பதில்*
இதை கருத்து குறித்து பலவிதமான கருத்துக்கள் இருந்தாலும்  - வேதத்தில் சொல்லபட்ட வசனங்களின் அடிப்படையில் கீழே உள்ளதை பட்டியலிடுகிறேன்:

யோ. 20:1 – வாரத்தின் முதல் நாள் காலையில் *அதிக இருட்டோடே* கடந்து சென்றாள்

யோ. 20:9 அவர் *மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவேண்டும்* என்கிற வேதவாக்கியத்தை அவர்கள் *இன்னும் அறியாதிருந்தார்கள்*.

யோ. 20:11 *மரியாள்* கல்லறையினருகே வெளியே நின்று *அழுதுகொண்டிருந்தாள்*; அப்படி அழுதுகொண்டிருக்கையில் அவள் குனிந்து *கல்லறைக்குள்ளே* பார்த்து..

யோ. 20:13 அவர்கள் அவளை நோக்கி: ஸ்திரீயே, *ஏன் அழுகிறாய்* என்றார்கள். அதற்கு அவள்: என் ஆண்டவரை *எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்*, அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை என்றாள்.

யோ. 20:14 இவைகளைச் சொல்லிப் பின்னாகத் திரும்பி, இயேசு நிற்கிறதைக் கண்டாள்; ஆனாலும் அவரை இயேசு என்று *அறியாதிருந்தாள்*.

யோவான், மாற்கு 16:2-11, லூக்கா 24:1-8 & மத்தேயு 28:1-10ன் படி *மகதலேனா மரியாள்* தோட்டத்தில் இயேசுவை சந்தித்ததை வைத்து, பின்வரும் அனுமானங்கள் நியாயமானவை:

வெளிச்சம் வெளியில் வருவதற்கு முன்னரே கல்லறைக்கு மிக அதிகாலையில் அதிக இருட்டோடே வந்தார்கள். இந்த இருளில் அவர்கள் இயேசுவைப் பார்த்தார்கள்.

உயிர்த்தெழுந்தவரை அல்ல – மரித்தவரைத் தேடினார்கள் !! அவர்களுக்குப் பின்னால் நிற்கும் ஒருவர் இயேசுவாக இருக்க முடியும் என்று அவர்கள் நினைத்திருக்கவில்லை.

அவர்கள் பயத்துடன் / பதட்டத்துடன் இருந்தார்கள். திகைத்து, ஆச்சரியப்பட்டார்கள். ஏனென்றால் பூமி அப்போது தான் கடுமையாக அதிர்ந்தது – மத். 28:2. இயேசு நெருங்கும் போது அவர்கள் அப்படிபட்ட பதட்டத்தில் இருந்தார்கள்.

அழுதுகொண்டிருக்கிறாள்;
அழுகை, மனவருத்தம், பயம், இருள் – இவை அனைத்தும் பார்க்கும் திறனை நிச்சயமாக கலங்க செய்யும்.

இயேசுவை முதன்முதலில் பார்த்தபோது தோட்டத்திலுள்ள கல்லறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தாள். இந்த சூழ்நிலையில், அதிக இருட்டோடே அதிகாலை நிற்பவர் தோட்டக்காரராக இருக்க வேண்டும் என்று கணிக்க எல்லா சூழ்நிலையும் உள்ளது.

தோட்டக்காரர் என்று உணர்ந்ததும் மறுபக்கம் திரும்பியிருக்க வேண்டும். ஏனென்றால் மரியாளே என்று இயேசு கூப்பிட்ட போது ரபூனி என்று *திரும்பினாள்* - யோ. 20:16

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*

Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக