#848 - *எனக்கு
தெரிந்த ஒரு சகோதரி, ஞானஸ்நானம் மூன்று முறை முங்கி எடுத்திருக்கிறார்கள் (ஒரே நேரத்தில்) இதைப் பற்றி
விளக்கவும்*
*பதில்*
ஞானஸ்நானம்
என்பது மரித்தபின் ஒருவரை மண்ணில் அடக்குவதற்கு சமமான ஒரு சம்பவம். ரோ. 6:3-4
அதாவது
பாவத்திற்கு மரித்தவர்களை கிறிஸ்துவின் மரணத்திற்குள்ளாக தண்ணீரில் அடக்கம்
செய்து, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு ஒப்பாக தண்ணீரிலிருந்து வெளியே வருவது.
தேவ
வார்த்தையை கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று
வாயினால் அறிக்கையிட்டு, பாவமன்னிப்பிற்கென்று ஒருவர் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ள
வேண்டும் – அப். 8:37-38, மாற்கு 16:16, அப். 22:16
வேதத்தில்
எங்கும் காணாத இந்த மூன்று தடவை மூழ்க வேண்டிய முறையை புதியதாக பக்கவாட்டில் யாரோ நுழைத்து
இருக்கிறார்கள் !!!
ஜெபம்
முடிந்ததும் - ஒரு தடவை ஆமேன் போட்ட காலங்கள் போய் இப்போது 3 முறை ஆமேன் போட சொல்லி
அநேகர் பழக்கிவிட்டதன் பலன் இது என்று தான் தோன்றுகிறது. அடுத்தபடியாக 7 முறை மூழ்கவேண்டும்
என்றும் கூடிய விரைவில் நாம் கேள்விபட வாய்ப்பு உள்ளது !!
இவை
எல்லாம் மனித பாரம்பரியங்களேயன்றி வேறொன்றும் இல்லை.
நிச்சயமாக
சத்தியத்தை முறையாக அறியாதவர் தான் இந்த ஆத்துமாவை இவ்வாறு தவறாக வழி
நடத்தியிருப்பார்.
வாய்ப்பு
இருந்தால் அந்த ஆத்துமாவிற்காக பாரப்பட்டு தயவாக அவர்களிடம் தெரிவிக்கவும்.
முறையாக
தேவ வார்த்தையை கேட்டு, விசுவாசித்து, மனந்திரும்பி, கிறிஸ்து தேவனுடைய குமாரன்
என்று வாயினால் அறிக்கையிட்டு, *பாவமன்னிப்பிற்கென்று* ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளட்டும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக