#847 - *ஆதி. 11:7-9 கர்த்தர் ஏன் ஜனங்கள் பேசிய ஒரே பாஷையை தாறுமாறாக்கினார்?*
அதனால் தானே மனுஷருக்குள் பிரச்சினை வந்தது அன்றிலிருந்து இன்றுவரை?
மொழி பிரச்சினை பெரும் பிரச்சினையாக இருக்கிறது?
அதேசமயம் பறவைகள், விலங்குகள் இவற்றுக்கும் அதே நிலையா கொஞ்சம் விளக்கம் தாங்க பிரதர் நன்றி.
*பதில்*
நோவாவின் நாட்களில் ஜலப்பிரளயம் வந்து நோவாவின் குடும்பத்தார் 8 பேரை தவிர உலகத்தார் அனைவரும் மரித்தபின் தண்ணீர் வடிந்து பேழையில் இருந்தவர்கள் வெளியே வந்து சந்ததி பெறுகியது – ஆதி 10.
ஜனங்கள் கூடின போது – முன்பு போல மறுபடியும் தேவன் உலகத்தை அழிக்க நினைத்தால் எப்படி காப்பாற்றிக்கொள்வது என்ற எண்ணத்திலும் தங்களுக்கு மகிமை உண்டாகவும் அனைவரும் ஒரே இடத்தில் வசிக்கும்படி திட்டம் போட்டு பெரிய வானலாவிய கோபுரத்தை கட்ட நினைத்தார்கள். ஆதி 11:3-4
மனிதர்கள் உலகமெங்கும் பரவி பலுகி பெருக வேண்டும் என்பது தான் தேவனுடைய திட்டம். ஆதி 9:1
இவர்களோ ஒரே இடத்தில் இருக்கும்படி திட்டம் பண்ணினார்கள்.
ஆகவே தேவன் அவர்களை பிரிக்கும் வண்ணம் பாஷையை தாறுமாறாக்கினார் :
அப்பொழுது கர்த்தர்: இதோ, ஜனங்கள் *ஒரே கூட்டமாய்* இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே பாஷையும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடமாட்டாது என்று இருக்கிறார்கள். நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் அறியாதபடிக்கு, அங்கே அவர்கள் பாஷையைத் தாறுமாறாக்குவோம் என்றார். அப்படியே கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து *பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்*; அப்பொழுது நகரம் கட்டுகிறதை விட்டுவிட்டார்கள். பூமியெங்கும் வழங்கின பாஷையைக் கர்த்தர் அவ்விடத்தில் தாறுமாறாக்கினபடியால், அதின் பேர் பாபேல் என்னப்பட்டது; கர்த்தர் அவர்களை *அவ்விடத்திலிருந்து பூமியின்மீதெங்கும் சிதறிப்போகப்பண்ணினார்*. ஆதி 11:6-9
*பறவைகள் மிருகங்களின் பாஷை*: விலங்குகள் & பறவைகளுக்கு நம்மை போல மொழி இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இருப்பினும் ஒலிகள் மற்றும் சைகைகள் மூலம் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்கிறது.
விலங்குகள் தங்கள் உணர்வுகளை அடையாளம் காணப் பயன்படுத்தும் பல பிறப்புக் குணங்களைக் கொண்டுள்ளன, ஆனால் இவை மனித மொழியில் நாம் காணும் சொற்களைப் போல இல்லை.
மனித குழந்தைகள் அழுவதும் சைகை செய்யும் போதும் குழந்தைகளின் அதே வகையான தொடர்புகளைக் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மெதுவாக மொழியின் சொற்களைக் கற்றுக் கொண்டு இதை தகவல்தொடர்பு வடிவமாகப் பயன்படுத்துகிறார்கள்.
அப்படியென்றால் கட்டளைகளைப் புரிந்துகொள்ளும் நாய்கள் அல்லது “பேசக்கூடிய” பறவைகள் போன்ற விலங்குகளைப் பற்றி என்ன?
‘உட்கார்’, ‘வா’ மற்றும் ‘போ போன்ற சில கட்டளைகளைப் பின்பற்ற நாய்களுக்கு பயிற்சியளிக்க முடியும்.
ஆனால் இதன் பொருள் அவர்கள் மொழியைப் புரிந்துகொள்கிறார்கள், எனவே அதைப் பயன்படுத்தலாம் என்றும் அர்த்தமா? நாய்கள் அவற்றின் உரிமையாளர்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்ளும்படியான நிபுணர்களாக அறியப்படுகின்றன.
மேலும் அவை உண்மையான சொற்களுக்கு பதிலளிப்பதில்லை, ஆனால் அது தொனியை வைத்து கீழ்படிகிறது.
எனவே நீங்கள் மகிழ்ச்சியான தொனியில் “கெட்ட நாய்” என்று சொன்னால், நாய் அதன் வாலை அசைக்கும். கடுமையான தொனியில் “நல்ல நாய்” என்று நீங்கள் சொன்னால், நாயின் விளைவை நாம் காணமுடியும் !!
இதே போல தான் பறவைகளும்.. அவை கேட்கும் ஒலிகளை நகலெடுக்கின்றன.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக