வெள்ளி, 3 ஏப்ரல், 2020

#846 - ஆதி. 10:11 - அசூர் என்பது பெயரா அல்லது ஊரா

#846 - *ஆதி. 10:11 - அசூர் என்பது பெயரா அல்லது ஊரா?*
நினிவே கட்டினது யாரு  நிம்ரோத் ஆ அல்லது அசூர் ஆ

நிறைய கேள்வி பதில் குழுக்களில் இந்த பிரச்சனை வருகிறது....
In English bible அசூர் ஊர் பெயர் தான்.  In Tamil bible அசூர் ஆண் பெயர்..


*பதில்*
தமிழ் வேதத்திலும் ஆங்கில வேதத்திலும் ஆதி. 10:11ம் வசனத்தில் வரும் அசூர் என்பது *ஊரை தான் குறிக்கிறது*.

தமிழ் வேதத்தில் 8ம் வசனத்திலிருந்து 12ம் வசனம் முடிய படித்து பார்த்தால் இந்த குழப்பம் நீங்கிவிடும்.

மேலும் அசூர் என்ற வார்த்தையின் நிமித்தம் கீழ்கண்ட விளக்கங்களும் நாம் அறிய வேண்டி உள்ளது:

சேமின் இரண்டாவது மகன் அசூர்; ஆதி. 10:22

அவருடைய சந்ததியினரும் அவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடும் அசீரியா என்றும் அழைக்கப்பட்டது.

அசூர் நிமித்தம் அங்கு வாழ்ந்தவர்கள் அசீரியா என்று அழைக்கப்பட்டது.

அசீரியா – ஒரு தேசத்தை குறிக்கிறது.

அசீரியா அல்லது அஷூர் என்றும் வேதத்தில் காணமுடியும்.

அசீரியா ஒரு பெரிய மற்றும் சக்திவாய்ந்த நாடாக இருந்தது, இது டைக்ரிஸில் உள்ளது, ஆதி. 2:14, இதன் தலைநகரம் நினிவே. ஆதி. 10:11, முதலியன. அதன் பெயர் சேமின் மகன் அசூரிடமிருந்து தோன்றியது, ஆதி. 10:22, பிற்காலத்தில் அசீரியர்களால் அவர்களுடைய பிரதான கடவுளாக வணங்கப்பட்டார்.

ஆஷூர் - அவரது மனைவி அபியாவால் ஹெஸ்ரோனின் மரணத்திற்குப் பிந்தைய மகன். 1நாள. 2:24; 1நாள. 4:5

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக