வெள்ளி, 3 ஏப்ரல், 2020

#845 - இமெனேயுவை குறித்தும் அலெக்சந்தரை குறித்தும் பிலேத்துவை குறித்தும் விளக்கவும்.

#845 - *இமெனேயுவை குறித்தும் அலெக்சந்தரை குறித்தும் பிலேத்துவை குறித்தும் விளக்கவும்*.

*பதில்*
புதிய ஏற்பாட்டில் 2 இடங்களில் இமெனேயுவை குறித்து 1 தீமோ. 1:20 & 2 தீமோ. 2:17 காணமுடியும்.

2தீமோ. 2:17ன்படி அவரையும் பிலேத்துவையும் சேர்த்து மிகவும் ஆபத்தான மனிதர் என்று பவுல் குறிப்பிடப்படுகிறார்.

அப். 19:33ல் குறிப்பிடப்பட்ட அலெக்சந்தர் தான் 1தீமோ. 1:20ல் சொல்லப்படுபவர் என்று வேத வல்லுனர்களில் சிலர் சொல்லியிருந்தாலும் உறுதியாகத் சொல்வதற்கில்லை.

அப்போஸ்தலருக்கு - செம்பு வேலை செய்யும் கன்னானாகிய அலெக்சந்தர், "மிகவும் தீமை" செய்தவர் என்று குறிப்பிடப்படுகிறார். ஆகவே அப். 19:33ல் குறிப்பிடப்பட்ட நபராக இவர் இருக்க அதிகம் வாய்ப்பு உள்ளது.

உயிர்த்தெழுதல் ஏற்கனவே நடந்துவிட்டது” என்ற கோட்பாடுகளை வைத்திருந்தவர் இமெனேயு (2தீமோ. 2:18)

ஆனால் அலெக்ஸாண்டர் என்ன கோட்பாட்டைக் கொண்டிருந்தார் என்று சொல்லப்படவில்லை.

இமெனேயுன் தொடர்பில் 1தீமோ. 1:20ல் குறிப்பிடப்பட்டுள்ளதால், இவரும் அதே கருத்தைத் உடையவராக இருக்க வாய்ப்பு உள்ளது.

எப்படியாயினும் இவர்கள் அவதூறாக தேவ மனிதர்களை தூற்றி திரிந்ததுமல்லாமல் தவறான உபதேசத்தை பறைசாற்றின  குற்றவாளிகள். 2தீமோ. 2:17-18

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக