ஞாயிறு, 22 மார்ச், 2020

#807 - மரித்தோருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது? விளக்கவும்

#807 - *மரித்தோருக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது?* விளக்கவும்

இதற்காக மரித்தோரானவர்கள், மனுஷர்முன்பாக மாம்சத்திலே அக்கினைக்குள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைக்கும்படியாக, அவர்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது.
1பேதுரு 4:6 - இதற்கான விளக்கம் தேவை சகோதரா

*பதில்*
எல்லோரும் அவருடைய வாழ்க்கை கணக்கை தேவனுக்கு ஒப்புக்கொடுப்பார்கள் (வ5).

கிறிஸ்தவர்கள் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறார்கள்.

துக்கமாக அல்ல மகிழ்ச்சியுடன் அவர்கள் தங்கள் கணக்கைக் தேவனிடத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற மனதுடன் சுவிசேஷம் அனைத்து மக்களுக்கும் பிரசங்கிக்கப்படுகிறது -1யோ. 2:28.

மிக கடினமான இந்த வசனப்பகுதியை நாம் புரிந்து கொள்ள மற்ற மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் போது இலகுவாகிறது.

இலகு தமிழ் மொழிபெயர்ப்பு : இக்காரணங்களுக்காக இப்போது இறந்துவிட்ட விசுவாசிகளுக்கும் நற்செய்தியானது போதிக்கப்பட்டது. இதன் மூலம் அவர்களின் உலக வாழ்க்கையின்போது மோசமான வகையில் மனிதர்களால் நியாயம் தீர்க்கப்பட்டாலும், ஆவியால் தேவன் முன்னிலையில் அவர்கள் வாழ்ந்தார்கள்.

(HNC-NT)  This is why the Good News was preached to those who are now dead. They could be judged in the body with all men, but they would live with God in the spirit.

“மரித்தோர் மற்றும் ஜீவனுள்ளோர்” என்ற சொற்றொடரில் சரியான பதத்தை வைத்தால், பேதுரு இந்த கடிதத்தை எழுதின காலத்தில் கல்லரையில் வைத்திருக்கப்பட்ட / மரித்திருந்த அனைவருக்கும் சுவிசேஷம் அனைவருக்கும் பிரசங்கிக்கப்பட்டிருக்க வேண்டும்.

இங்கே 1பேதுரு 3:19ல் சொல்லப்பட்டதைப் போன்றது – இவ்விரண்டையும் பிரித்துப்பார்க்க நமக்கு முடியாது. காவலில் இருந்த ஆவிகள் என்று சொல்லப்பட்டதைப் போல மரித்தவர்களும் குறிக்கப்படுகிறார்கள்.

“சுவிசேஷத்தைப் பிரசங்கித்தல்” என்ற வார்த்தையை நாம் பொதுவாக கிறிஸ்துவின் மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் பரம் ஏறின சம்பவம் மற்றும் தேவ குமாரனாகிய கிறிஸ்துவின் மூலமாக மாத்திரமே இரட்சிப்பு வழங்கப்படுகிறது என்பதோடு மட்டுப்படுத்தியுள்ளோம்.

உண்மை தான் – ஏனென்றால் 1கொரி. 15ம் அதிகாரம் அதோடு வகையறுத்துள்ளது. பேதுருவும் அவ்வாறே 1:12, 25ல் உபயோகப்படுத்தியிருக்கிறார்.

ஆனால் இந்த வார்த்தையின் குறிப்பிட்ட வரையறை நற்செய்தியை பறைசாற்றும்படியான அதன் அடிப்படை பொருளின் பயன்பாடு என்பதே.

செப்டுவஜின்ட்டில் பலமுறையும், மற்றும் பல புதிய ஏற்பாட்டு பத்திகளில் இது இந்த அடிப்படை அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது (வெளி. 10:7, 14:6; மத் 11:5).

நாம் பொதுவாக நினைத்துக்கொண்டிருப்பது போல இந்த எழுத்தாளருக்கு இரட்சிப்பு என்பது “உயிர்த்தெழுந்த” கிறிஸ்துவின்  மூலம் வராமல் இருந்திருக்கலாம்.

ஆனால் இரட்சிப்பின் செய்தி என்பது முற்பிதாக்களின் காலத்திலோ மோசேயின் காலத்திலோ கிறிஸ்துவின் காலத்திலோ நிச்சயமான "நற்செய்தியே / அல்லது சுவிசேஷம்” என்பது தெளிவாகிறது.

ஆனாலும் சுவிசேஷத்துக்கு எல்லாரும் (யூதர்கள்) கீழ்ப்படியவில்லை. அதைக்குறித்து ஏசாயா: கர்த்தாவே, எங்கள் மூலமாய்க் கேள்விப்பட்டதை விசுவாசித்தவன் யார் என்று சொல்லுகிறான். ரோ. 10:16

மேலும், மோசேயின் காலத்தில் இருந்த யூதர்களின் கீழ்படியாமையை எபிரேய எழுத்தாளன் விவரிக்கிறார் :
ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரிமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும், இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகுகாலத்திற்குப்பின்பு தாவீதின் சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார் - எபி. 4:6-7

இரட்சிப்பை வழங்கிய முந்தைய சகாப்தத்தின் செய்தியானது -
பின்னர், வேதப்பூர்வமாக நல்ல செய்தி, மகிழ்ச்சியான செய்தி,
நற்செய்தி, சுவிசேஷம் அல்லது சந்தோஷத்தின் செய்தியாக சொல்லப்பட்டது.

"மரித்தவர்களுக்கும் சுவிசேஷம் பிரசங்கிக்கப்பட்டது" என்ற (3:19-20), இந்த பதமானது - பேதுரு எழுதிய நேரத்தில், இறந்தவர்கள், காவலில் இருந்த ஆவிகளுக்குப் பொருந்துகிறது.

அவர்களுக்கு இந்த நல்ல இரட்சிப்பின் செய்தி அறிவிக்கப்பட்ட போது அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அது அவர்களுக்கு ஏற்கனவே உபதேசிக்கப்பட்டிருந்தது.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee


*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக