#806 - *அப்போஸ்தலருடைய
நடபடிகள் 18: 18ன் படி ஒரு கிறிஸ்தவன் பிரார்த்தனை பண்ணிக்கொண்டு, தலை தலைச்சவரம்
பண்ணலாமா?*
*பதில்*
பவுல் சொன்னதை கவனிக்கவும்.
நான் ஒருவருக்கும் அடிமைப்படாதவனாயிருந்தும், நான்
அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன். யூதரை ஆதாயப்படுத்திக் கொள்ளும்படிக்கு யூதருக்கு யூதனைப்போலவும், நியாயப்பிரமாணத்துக்குக்
கீழ்ப்பட்டவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு நியாயப்பிரமாணத்துக்குக் கீழ்ப்பட்டவனைப்
போலவுமானேன். நியாயப்பிரமாணமில்லாதவர்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு அவர்களுக்கு
நியாயப்பிரமாணம் இல்லாதவனைப்போலவுமானேன். அப்படியிருந்தும், நான் தேவனுக்குமுன்பாக
நியாயப்பிரமாணமில்லாதவனாயிராமல், கிறிஸ்துவின் பிரமாணத்துக்குள்ளானவனாயிருக்கிறேன்.
பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும்
சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன். 1கொரி 9:19-22
கிறிஸ்தவர்கள்
இனி பழைய ஏற்பாட்டு உடன்படிக்கையின் கீழ் இல்லை என்று பவுல் கடுமையாக கற்பித்த போதிலும்,
கிறிஸ்துவின் பிரமாணத்தைக் கடைப்பிடிப்பதில் இடையூறு இல்லாதவரை, பழைய உடன்படிக்கையின்
பழக்கவழக்கங்களை வைத்திருப்பதற்கு பவுல் எதிர்க்கவில்லை.
ஒருபோதும் விருத்தசேதனம்
செய்யப்படாத போதிலும், தீமோத்தேயு பவுலுடன் எருசலேமுக்குப் பயணித்தபோது, பவுல் தீமோத்தேயுவை
விருத்தசேதனம் செய்தார். இந்த செயல் தீமோத்தேயுவிற்கு அந்தப் பகுதியிலுள்ள யூதர்களிடையே
சுவிசேஷம் எடுத்து செல்ல பிரயோஜனமாயிருந்தது. (அப் 16:1-3)
தீமோத்தேயுவின்
விருத்தசேதனம் பழைய ஏற்பாட்டைக் கடைப்பிடிப்பதில் எந்த தொடர்பும் இல்லை, இது தீமோத்தேயுவைப்
பொருத்தமாக அனுமதிப்பதற்கான ஒரு வழியாகும்.
அது போல பவுல்
தலைச்சவரம் செய்தது – நசரேய விரதத்தின் அடிப்படையில் அவர் எடுத்துக்கொண்ட ஒரு பொருத்தனை
(எண் 6:2-21)
இந்த குறிப்பிட்ட
பொருத்தனையின் மூலம் யூத நடைமுறையை அவர் ஏன் பின்பற்றத் தேர்ந்தெடுத்தார் என்று வேதம்
பதிவு செய்யவில்லை. இருப்பினும் நாம் ஒரு நியாயமான யூகத்தை இங்கு காண முடியும். அவர்
எருசலேமுக்குச் செல்வதாகவும், ஒரு குறிப்பிட்ட பண்டிகைக்காக சரியான நேரத்தில் அங்கு
வர விரும்புவதாகவும் கூறினார் (அப் 18:21).
யூத வட்டாரங்களின்
மத்தியில் தங்கள் நம்பிக்கையை கைவிட்டு ஒரு கிறிஸ்தவராக மாறியவர் பவுல் என்று நன்கு
அறியப்பட்டிருந்தார். இந்த பொருத்தனையின் வழக்கத்தை பின்பற்றுவதன் மூலம், கிறிஸ்துவைப்
பற்றி தன் சகோதரர்களிடம் பேச இது ஒரு வாய்ப்பை வழங்கியது.
தலைச்சவரம்
செய்வதற்கு ஒரு பொருத்தனை அவசியமில்லை. ஆனால் தலைச்சவரம் செய்வதனால் ஒரு சுயநஷ்டமும்
இல்லை. எனவே பொருத்தனை என்கிற வழக்கத்தை பின்பற்றி அவருக்கு கிடைக்காத வாய்ப்பின் கதவுகளைத்
திறந்ததாக கருதமுடிகிறது.
அவர் நசரேய
விரதத்தின் ஒரு பகுதியை வைத்திருந்தாலும், அவர் இந்த வகை பொருத்தனையை முழுமையாக பின்பற்றியிருக்க
மாட்டார். ஏனென்றால் நசரேய விரதம் என்பது திராட்சையிலிருந்து முழு விளக்கினை கோருகிறது.
எண் 6:3-4
ஒரு கிறிஸ்தவராக,
வாரத்தின் முதல் நாளில் கர்த்தருடைய பந்தியில்
அவர் கலந்திருக்காமல் இருக்க வாய்ப்பில்லை !!
ஆகவே
– பவுல் தலைச்சவரத்தின் பின்னணியை எந்த வகையிலும் நமக்கு சாதகமாக்கிக் கொள்ளும்
சூழ்நிலை இந்த காலங்களில் இல்லை. நம்மை சுற்றிலும் உள்ளவர்கள் விக்கிரக
ஆராதணைக்காரர்கள் – அவர்களுக்கு சத்தியம் சொல்லுகிறேன் என்ற காரணத்திற்காக தங்களை
தளர்த்திக்கொண்டோம் என்று ஒருவர் முற்பட்டால் அது கிறிஸ்துவின் உபதேசத்திற்கு
விலகி எடுத்து சென்றுவிடும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக