#805 - *தேவன் ஆணா பெண்ணா?*
பிதா மற்றும் பரிசுத்த ஆவி ஆகிய இருவரையும் தற்போது ஆண்பாலாகவே குறிப்பிடுகின்றோம். முற்காலத்தில் பிதா பெண்பாலாகவும், தாயாகவும் வணங்கப்பட்டதாக வரலாறு உள்ளது. பிதா மற்றும் ஆவியானவர் பாலினத்திற்கு அப்பாற்பட்டவர்கள். நம்முடைய தேவைக்கேற்ப அவர்கள் ரூபம் வெளிப்படும் என்பது என் கருத்து. சற்றே விளக்கவும் ஐயா.
*பதில்*
இந்த வகையான கேள்விகளுக்கு பதிலளிக்க, முதலில் தேவத்துவத்தின் தன்மையை ஒருவர் அறிந்திருக்க வேண்டும்.
அந்த வகையான தகவல்களின் ஒரே ஆதாரம் தேவனுடைய வார்த்தையான வேதாகமம் மட்டுமே. திரித்துவம் என்ற வார்த்தை வேதாகமத்தில் இல்லை.
நாம் குழப்பமடையாமல் இருக்கும்படியாக இதைகுறித்து வேதம் நமக்கு மிக தெளிவாக பொதிந்து வைத்திருக்கிறது.
கடவுளை அல்லது அவருடைய செயல்பாடுகளை விவரிக்க வேதம் பெரும்பாலும் ஆண்பால் சொற்களைப் பயன்படுத்துகிறது.
ஆண் பெயர்கள் / சொற்கள் கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவர் ஆகியோருக்கு வேதம் முழுவதும் பயன்படுத்தப்படுகின்றன.
கடவுளின் பெயர்கள் : யெகோவா, எலோஹிம், எல்ஷடாய், எல்ஷபோத், அதோனாய் போன்ற பெயர்கள் ஆண் பாலினத்தை குறிக்கிறது.
மேலும், ஆண் உருவகங்கள் அடிக்கடி கடவுளுக்குப் பயன் படுத்தப்படுகின்றன.
சங்கீதக்காரன், “கர்த்தர் என்றென்றைக்கும் ராஜா” (சங் 10:16) என்றும்,
“தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார்” (சங் 103:13) என்றும்
"நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்" (நெகே 4:20) என்றும்
நெகேமியா கடவுளை ஒரு போர்வீரனாக பிரதிநிதித்துவப்படுத்தினார்.
எரேமியா மூலம் ஜனங்களுக்கு தான் ஒரு கணவனாக தேவன் தெரியப்படுத்துகிறார் (எரே 3:1-2).
இயேசு கிறிஸ்து அன்பான பிதாவுடன் ஒப்பிட்டார் (லூக்கா 15:11-32).
கிறிஸ்துவின் பெயர்கள் - இயேசு என்பதும் கிறிஸ்து என்பதும் ஆண்பால்.
இயேசு ஒரு மேய்ப்பனின் ஆண் பாத்திரங்களில் முன்வைக்கப்படுகிறார் (மத்தேயு 25:32; யோவான் 10:11-18)
தீர்க்கதரிசி (லூக்கா 13:33)
போதகர் (மத்தேயு 26:28; எபிரெயர் 7: 24-28)
மணமகன் (மத்தேயு 22:1-4)
குமாரன் (மாற்கு 1:11; யோவான் 3:16 [தந்தை-மகன் உறவை யோவான் தனது நற்செய்தியில் 60 தடவைகளுக்கு மேல் குறிப்பிடுகிறார்]; எபிரெயர் 1: 2-3).
அதே நேரத்தில்:
பல சந்தர்ப்பங்களில் தேவன் தன்னை பெண்ணிற்கான மனநிலையில் தன்னை வெளிப்படுத்துவதையும் கவனியுங்கள்.
ஏசா 42:14 நான் வெகுகாலம் மவுனமாயிருந்தேன்; சும்மாயிருந்து எனக்குள்ளே அடக்கிக்கொண்டிருந்தேன்; இப்பொழுது பிள்ளை பெறுகிறவளைப்போலச் சத்தமிட்டு, அவர்களைப் பாழாக்கி விழுங்குவேன்.
ஏசா 46:3 தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
ஏசா 49:15 ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.
ஏசா 66:13 ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன்; நீங்கள் எருசலேமிலே தேற்றப்படுவீர்கள்.
மத்தேயு 23:37ல் எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று என்றார் இயேசு கிறிஸ்து தன்னை ஒரு தாயின் கரிசணையோடு.
தேவனிடம் மோசே – நீர் யார் என்று கேட்டதற்கு, அவரது பதில் மிகவும் முக்கியமானது “இருக்கிறவராகவே இருக்கிறேன்” (யாத் 3:14)
கடவுள் ஒரு நித்திய ஆவியானவர் (உபா 33:27, சங் 102:27; யோ 4:24; 1 தீமோ 1:17; வெளி 1:8)
இயேசு சுட்டிக்காட்டியபடி, “ஆவிக்கு மாம்சமும் எலும்புகளும் இல்லை” (லூக்கா 24:39)
1 சாமு 15:29ல், தேவனே அறிவித்தார் “இஸ்ரவேலின் வலிமை ... ஒரு மனிதன் அல்ல.” என்றார்.
மோசே எண்ணாகமம் 23:19 ல் எழுதினார்: "தேவன் ஒரு மனிதர் அல்ல ... மனுஷகுமாரனும் அல்ல." என்றார்.
ஓசியா அந்த உறுதிமொழியை மீண்டும் கூறினார்: "நான் தேவன், மனிதன் அல்ல" (ஓசியா 11:9) என்றார்.
வேதம் தெளிவுபடுத்துகிறது:
“இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை - ஏசாயா 64:8;
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லையென்றும் சொல்லத்தகுமோ? ஏசா 29:16.
ஆண் என்றும் பெண் என்றும் படைத்ததன் நோக்கமே - மனித குலத்தை பலுகி வளர்ப்பதற்காக தங்கள் எல்கையை கொண்டு வகையறுக்கப்பட்டவர்கள் – ஆதி 1:28
ஆகவே - தேவனை ஆண் என்றோ பெண் என்றோ நாம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை.
தங்கள் தெய்வங்களை பெரிய மீசை வைத்தும் பெரிய அரிவாளை கைகளில் கொடுத்தும் விக்கிரகங்களை உண்டுபண்ணுவதும், அழகான பெண் உருவத்தில் தாமரை மீது உட்கார வைத்து அழகு பார்த்து வணங்கி வரும் சமுதாயத்திலிருந்து வருவதால் இந்த மாதிரியான எண்ணங்களை நாம் விட்டுவிடுவது நம்முடைய இரட்சிப்பிற்கு உகந்தது.
தேவன் ஆவியாயிருக்கிறார் !!
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக