#802 - *பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள், பூலோகத்தாரே,
நீங்கள் யாவரும் அவருக்கு முன்பாக நடுங்குங்கள். சங்கீதம் 96:9 - விளக்கவும்*.
*பதில்*
1நாளாகமம்
16ம் அதிகாரம் 29-30 வசனங்களிலிருந்து இந்த பகுதி எடுக்கப்பட்ட ஒரு பாடல்.
இது
வேறு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும். கட்டிடக்கலை மற்றும் ஆடைகளின் அழகுகளை
அவர் கருத்தில் கொள்ளவில்லை.
தேவனுக்கு
நாம் ஏறெடுக்கும் தொழுகையை – பாவமான அல்லது மேலோட்டமான முறையில் வழங்கக்கூடாது.
நம்முடைய
ஜெபங்களிலும் அவரை புகழ்வதிலும் நாம் பயபக்தியுடனும், நேர்மையுடனும்,
அக்கறையுடனும், பரிசுத்தமான இதயத்துடனும்
இருக்க வேண்டும்.
எங்கே
இரண்டு மூன்று பேர் கூடுகிறீர்களோ அங்கு நான் இருக்கிறேன் என்றார் (மத். 18:20)
அப்படியானால்
– தொழுகைக்காக கூடியிருக்கும் போது மகா வல்லமையான தேவனாகிய அவருடைய வல்லமையையும்
மகிமையையும் மனிதர்கள் நன்கு உணர்ந்தால் தங்கள் இஷ்டத்திற்கு சந்தோஷம் என்ற
பெயரில் கூச்சலும் ஆட்டமும் போட துணிவில்லாமல் உடல் எலும்பும் நடுக்கம் கொள்ளும் வண்ணம் பயத்தோடு
தொழுது கொள்வார்கள்.
ஒரு
புனிதமான நடுக்கம் இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியுடன்
ஒத்துப்போகிறது, இதயம் ஒரு விதமான மகிழ்ச்சியுடன் கூடிய நடுக்கத்தை தெரிவிக்கிறது. முழு நம்பிக்கையுடன்
கூடிய மகிழ்ச்சி. நாம் சரியான இடத்தில் சரியான / சகல வல்லமையுள்ள மாட்சிமையுள்ள
தேவனுக்கு முன்பதாக வந்துவிட்டோம் – இனி எல்லாவற்றையும் அவர் பார்த்துக்கொள்வார்
என்ற மகிழ்ச்சி.
நியாயபிரமாணத்தின்படி
பிரதான ஆசாரியன் தனது சேவை நேரத்தில் அணிந்திருப்பது போன்ற புனித ஆபரணங்களை இந்த பரிசுத்த
அலங்காரம் என்பது இலக்கணத்தின்படி குறிக்கிறது என்று சொல்லமுடியும். சங்கீதக்காரன் - புனிதமான ஆடைகளை அணிந்துகொண்டு அழைக்கிறார்.
அவருக்கு
முன்பாக நடுங்குவது என்பது இப்போது பெரிய கேள்விகுறியாகி போனது. தாவீது டான்ஸ் ஆடினார்
என்பதை மாத்திரம் கோடிட்டு காண்பித்து கொண்டிருக்கும் தற்கால ஜனங்கள் – தாவீது அதை
தெருவில் ஆடினார் என்பதை மறந்து போனார்கள் !!
கீழே
உள்ள வசனம், மேலும் நமக்கு தெய்வீக பயத்தோடும் நடுக்கத்தோடும் தொழுகையை மேற்கொள்ள
வேண்டும் என்ற வலியுறுத்தலை புரிய வைக்கும்.
சங்.
33:8 பூமியெல்லாம் கர்த்தருக்குப் பயப்படுவதாக; உலகத்திலுள்ள குடிகளெல்லாம் அவருக்கு
அஞ்சியிருப்பதாக.
எபி.
12:28-29 ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும்
தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம். நம்முடைய
தேவன் பட்சிக்கிற அக்கினியாயிருக்கிறாரே.
சங்.
111:9 அவர் தமது ஜனத்திற்கு மீட்பை அனுப்பி,
தமது உடன்படிக்கையை நித்திய உடன்படிக்கையாகக் கட்டளையிட்டார்;
அவருடைய நாமம் பரிசுத்தமும் பயங்கரமுமானது (பயங்கரமானவர் என்றால்
ஆங்கிலத்தில் ரெவரெண்டு !!! – ஆம் ரெவரெண்டு என்பது தேவனுடைய நாமம் – அதை மனிதர்கள்
எப்படி போட்டுக்கொள்ள முடியும்)
சங்.
89:7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச்
சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
சங்.
2:11 பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள்,
நடுக்கத்துடனே களிகூருங்கள்.
சங்.
89:7 தேவன் பரிசுத்தவான்களுடைய ஆலோசனைச் சபையில் மிகவும் பயப்படத்தக்கவர், தம்மைச்
சூழ்ந்திருக்கிற அனைவராலும் அஞ்சப்படத்தக்கவர்.
சங்
95:6 நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து
முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
சங். 99:1 கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக; அவர் கேருபீன்களின் மத்தியில்
வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக.
எபி. 12:25
பேசுகிறவருக்கு நீங்கள் செவிகொடுக்கமாட்டோமென்று விலகாதபடி எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில், பூமியிலே
பேசினவருக்குச் செவிகொடுக்கமாட்டோமென்று விலகினவர்கள் தப்பிப்போகாமலிருக்க,
பரலோகத்திலிருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித்
தப்பிப்போவோம்?
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக