#798 - *மத்தேயு 1.16: யாக்கோபு யோசேப்பை பெற்றான் என்றும் லூக்கா 3.23ல் யோசேப்பு ஏலியின் குமாரன் என்று உள்ளது.. இதில் எது சரி?*...
*பதில்*
மத். 1:16 யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; அவளிடத்தில் கிறிஸ்து என்னப்படுகிற இயேசு பிறந்தார்.
லூக்கா 3:23 அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவரானார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
மத்தேயுவின் கணக்கு யோசேப்பின் வம்சாவளியைக் கொடுக்கிறது.
லூக்காவின் கணக்கு மரியாளின் வம்சாவளியைக் கொடுக்கிறது.
மேலும் மரியாள் வழியில் இருக்கும் பரம்பரையை குறிப்பிடும் போது –எபிரேய பாரம்பரியத்தின்படி வம்சாவழியை குறிப்பிடுகிறார். மரியாளுக்கு நியமிக்கப்பட்ட கணவரான யோசேப்பின் வம்சத்தில் இடம்பெறும் ஆண் பெயர்களை மட்டுமே லூக்கா பட்டியலிடுகிறார்.
மேலும், எபிரேயர்கள் "மகன்" என்ற வார்த்தையை வெவ்வேறு புலன்களில் பயன்படுத்தினர்,
ஒரு தலைமுறை (எ.கா: சாலமோன் தாவீதின் "மகன் - மத்தேயு 1:6)
தொலைதூர சந்ததியினரையும் – மகன் என்று குறிப்பிடும் பழக்கம் (பேரன், கொள்ளு பேரன் போன்றவர்கள் - மத்தேயு 1: 1; 21:9; 22:42)
மருமகனையும் மகன் என்று சொல்கிறார்கள் (1 சாமு. 24:16; 26:17) – யோசேப்பு ஏலியின் "மகன்" (மருமகன்) என்ற சூழலில் இது அர்த்தமுள்ளதாக இருக்கிறது.
லேவிய திருமண சட்டம் (உபாகமம் 25: 5-10; மத்தேயு 22: 24-26).
மத்தேயு மற்றும் லூக்காவின் பட்டியல்கள் வேறுபடுவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், இயேசு “மேசியா என்பதை” யூதர்களுக்கு நிரூபிப்பதே மத்தேயுவின் நோக்கம்.
தாவீதின் சிம்மாசனத்தை சுதந்தரிக்க இயேசுவுக்கு சட்டபூர்வமான உரிமை உண்டு என்பதை யூதர்கள் இந்த பரம்பரை பட்டியலிலிருந்து புரிந்து கொள்கிறார்கள் (ஏசாயா 9:6,7; மத்தேயு 22:41-45; லூக்கா 1:32).
லூக்காவின் நோக்கம், மரியாளின் வம்சாவளியில் தாவீதின் இரத்தக் கோட்டிலிருந்து வந்தவர் என்பதைக் காட்டுவதாகும். அப்படியாக இயேசு தாவீதின் இரத்தக் கோடு வம்சாவளியைக் காட்டியது (2 சாமுவேல் 7: 12-14).
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக