#797 - *மரித்தவர்கள் நரகமோ, பரதீசோ சென்ற பின் மீண்டும் உயிருடன் வர முடியுமா?*
*பதில்*
இயேசு
கிறிஸ்துவின் திரும்ப வரும்போது மரித்தோர் முதலாவது எழுந்திருப்பார்கள். அவர்களுக்கு
புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்படும். அந்த அழிவில்லாத சரீரத்தோடு
நியாயாசனத்திற்கு முன்பாக நின்று தங்கள் தங்கள் கிரியைக்குதக்க தீர்ப்பை பெற்றுக்கொள்வார்கள்.
இயேசு
கிறிஸ்து திரும்ப வரும் அதே நேரத்தில் உயிரோடு இருப்போரும் தற்போது இருக்கும்
மண்ணினால் உருவாக்கப்பட்ட சரீரத்தை களைந்து புதிய அழிவில்லாத சரீரம் கொடுக்கப்பட்டு
அனைவரும் நியாயாசனத்திற்கு முன்பாக நின்று தங்கள் தங்கள் கிரியைக்குதக்க தீர்ப்பை
பெற்றுக்கொள்வார்கள்.
*ஆதார
வசனங்கள்*:
1கொரி. 15:51-53 இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு
அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு
நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும்
மறுரூபமாக்கப்படுவோம். எக்காளம்
தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்;
நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும்,
சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ளவேண்டும்.
1தெச.
4:15-17 கர்த்தருடைய வார்த்தையை முன்னிட்டு நாங்கள் உங்களுக்குச் சொல்லுகிறதாவது:
கர்த்தருடைய வருகைமட்டும் உயிரோடிருக்கும் நாம் நித்திரையடைந்தவர்களுக்கு
முந்திக்கொள்வதில்லை. ஏனெனில், கர்த்தர் தாமே
ஆரவாரத்தோடும், பிரதானதூதனுடைய சத்தத்தோடும், தேவ எக்காளத்தோடும் வானத்திலிருந்து இறங்கிவருவார்; அப்பொழுது
கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந்திருப்பார்கள். பின்பு, உயிரோடிருக்கும்
நாமும் கர்த்தருக்கு எதிர்கொண்டுபோக, மேகங்கள்மேல்
அவர்களோடேகூட ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு, இவ்விதமாய்
எப்பொழுதும் கர்த்தருடனேகூட இருப்போம்.
2தெச.
1:7-8 தேவனை அறியாதவர்களுக்கும்,
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும்
நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு
தமது வல்லமையின் தூதரோடும், ஜூவாலித்து எரிகிற அக்கினியோடும்,
வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.wordpress.com/2024/08/08/volume2/
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக