#799 -*இன்றைய புதிய ஏற்பாட்டு காலகட்டத்தில் இயேசுவின் கட்டளைகள் யாவை? அந்தக்
கட்டளைகளுக்கு கீழ்படிந்து நடப்பது
எப்படி?*
*பதில்*
இஸ்ரவேலருக்கு
தேவன் கொடுத்தப்படி பட்டியலிட்டு கட்டளைகளை கொடுக்கவில்லை. பிரதானமாக கொடுத்த கட்டளை
மத் 28:18-20ல் நாம் பார்க்கமுடிகிறது.
மத்.
28:18-20 அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து,
அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக்
கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால்,
நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும்
சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே
அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக்
கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ,
உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட
இருக்கிறேன் என்றார். ஆமென்.
மேலும்
– சபையில், வாழ்க்கையில், வேலை ஸ்தலங்களில், குடும்பத்தில், கணவனாக, மனைவியாக,
பிள்ளையாக, பெற்றோராக, முதலாளியாக,
ஊழியக்காரனாக, விசுவாசியாக, கண்காணியனாக, சுவிசேஷகனாக என்று ஒவ்வொருவரும் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலர் மூலமாக நமக்கு பரிசுத்த ஆவியானவர் அனைத்தையும்
எழுதி கொடுத்துள்ளார் (அப். 1:3, 2தீமோ. 3:16-17, யோ. 20:31)
தேவனுக்கு
ஏற்ற வாழ்க்கையை வாழ்வது எப்படி என்பதை நிரூபங்கள் நமக்கு தெளிவாக தருகிறது.
அவைகள்
பட்டியலிட்டு எவை என்று ஒருவேளை நீங்கள் கேட்கும் பட்சத்தில் அவைகள் சுமார் 1050 கோட்பாடுகளாக
இருப்பதாக ஒரு வலைதளத்தில் பட்டியலிட்டிருப்பதை கண்டேன். ஆனால் கிறிஸ்து நமக்கு அதை
குறிப்பிட்டு பட்டியலிட்டு கொடுக்காத பட்சத்தில் அதை நான் பகிர்வது தவறான
முன்உதாரனமாகிவிடும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/IKjkZaamKt43Fj6eYdo10Y
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக