#796 - *எது போன்ற கூடுகையில் பெண்கள் பேச வேதம் அனுமதிக்கின்றது?* வாரத்தின் முதல் நாள் தவிர்த்து பிற நாட்களில் நாம் சபையாக (ஆண்கள் & பெண்கள்)
கூடும்போது பெண்கள் பேசுவதற்கு (வேத வாசிப்பு, தனி நபர்
பாடல், செய்தி)
வேதம் அனுமதிக்கின்றதா ?
*பதில்*
இந்த
கேள்விக்கு 2 வசனங்களை நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.. அவை 1கொரி. 14:34-37 & 1தீமோ. 2:11-15
1கொரி.
14:34-37 சபைகளில் உங்கள் ஸ்திரீகள் பேசாமலிருக்கக்கடவர்கள்; பேசும்படிக்கு
அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள் அமர்ந்திருக்கவேண்டும்;
வேதமும் அப்படியே சொல்லுகிறது. அவர்கள் ஒரு காரியத்தைக்
கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள் புருஷரிடத்தில்
விசாரிக்கக்கடவர்கள்; ஸ்திரீகள் சபையிலே பேசுகிறது
அயோக்கியமாயிருக்குமே. தேவவசனம் உங்களிடத்திலிருந்தா புறப்பட்டது? அது உங்களிடத்துக்கு மாத்திரமா வந்தது? ஒருவன்
தன்னைத் தீர்க்கதரிசியென்றாவது, ஆவியைப் பெற்றவனென்றாவது
எண்ணினால், நான் உங்களுக்கு எழுதுகிறவைகள் கர்த்தருடைய
கற்பனைகளென்று அவன் ஒத்துக்கொள்ளக்கடவன்.
1தீமோ.
2:11-15 ஸ்திரீயானவள் எல்லாவற்றிலும்
அடக்கமுடையவளாயிருந்து,
அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள். உபதேசம்பண்ணவும், புருஷன்மேல்
அதிகாரஞ்செலுத்தவும், ஸ்திரீயானவளுக்கு நான் உத்தரவு
கொடுக்கிறதில்லை; அவள் அமைதலாயிருக்கவேண்டும். என்னத்தினாலெனில்,
முதலாவது ஆதாம் உருவாக்கப்பட்டான், பின்பு
ஏவாள் உருவாக்கப்பட்டாள். மேலும், ஆதாம் வஞ்சிக்கப்படவில்லை,
ஸ்திரீயானவளே வஞ்சிக்கப்பட்டு மீறுதலுக்கு உட்பட்டாள். அப்படியிருந்தும்,
தெளிந்த புத்தியோடு விசுவாசத்திலும் அன்பிலும் பரிசுத்தத்திலும்
நிலைகொண்டிருந்தால், பிள்ளைப்பேற்றினாலே
இரட்சிக்கப்படுவாள்.
இரண்டு
வசன பகுதிகளும் இரண்டு வெவ்வேறு சூழ்நிலைகளை உள்ளடக்கியது.
1 கொரி. 14 - சபையில் தொழுகையின் நடவடிக்கைகளை கையாள்கிறது. 1தீமோ 2. - பொதுவான கிறிஸ்தவ வாழ்க்கையை கையாள்கிறது.
1தீமோ.
2ன் அறிக்கைகள் சபை தொழுகைக்கும் பொருந்தும். அதே வேளையில் அவை அன்றாட
வாழ்க்கையையும் கையாளுகின்றன.
ஆனால்
1கொரி. 14ல் உள்ள கூற்றுகள் தொழுகையை மாத்திரம் வகையறுக்கிறது.
ஆகவே
இந்த இரண்டு பகுதி வசனங்களும் ஒரே மாதிரியாக இல்லாததால் அதன் வேறுபாட்டை அறிவது
முக்கியமானது.
*அமைதியாக
இருக்கவேண்டும் என்பதன் பொருள் என்ன?*
இரண்டு
பகுதிகளிலும் ஒரே சொல்லாகிய அமைதல் என்பது பயன்படுத்தப்படுவது தவிர்க்கமுடியாதது போல்
ஆகிவிட்டது என்றே சொல்ல முடியும்.
ஏனெனில்
இரண்டு தனித்துவமான கிரேக்க சொற்கள் இந்த சம்பவங்களில் பயன்படுத்தப்படுகின்றன.
*1)*
1 கொரி
14:34 ல், "அமைதலாக" என்ற இடத்தில் உபயோகப்படுத்தப்படும் இடத்தில் “சீகாஓ” என்ற கிரேக்க
வார்த்தை வருகிறது.
அதற்கு
- “அமைதியாக இருங்கள், அசையாமல் இருங்கள், ஒன்றும் சொல்லாதீர்கள், பேசுவதை நிறுத்துங்கள் அல்லது சமாதானமாக பொறுமையாக இருங்கள்” என்று பொருள்.
இந்த
இடத்தில் உபயோகப்படுத்தப்படும் அந்த கிரேக்க வார்த்தைக்கு – “பெண்கள் சபையில் பேச
அனுமதியில்லை என்றும் அது அயோக்கியத்தனம் அல்லது வெட்ககேடானது” என்று பவுல் விளக்கம்
அளித்துள்ளார் (1கொரி. 14:35)
மேலும்
– 1கொரி. 14:28ல் உபயோகப்படுத்தப்படும் அமைதலாக இருக்கவேண்டும் என்ற வார்த்தைக்கும்
இதே சீகாஓ தான் உபயோகப்படுத்தப்படுகிறது.
நாம்
வழக்கமாக உபயோகப்படுத்தும் தமிழ் மொழிபெயர்ப்பு வேதாகமத்தில் *அந்த குறிப்பிட்ட
வரிகளே அமைதலாகிவிட்ட ஓர் (குறிக்கப்படவேயில்லை) ஆச்சரியம்* உண்டு !!
1கொரி.
14:28 - கீழே கவனிக்கவும்:
(ASV) but if there be no interpreter, *let him keep silence in the church*; and let him speak to himself, and to God.
(KJV) But if there be no interpreter, *let him keep silence in the church*; and let him speak to himself, and to God.
(நாம்
வழக்கமாக உபயோகப்படுத்தும் தமிழ் மொழிபெயர்ப்பு):
அர்த்தஞ்
சொல்லுகிறவனில்லாவிட்டால்,
சபையிலே பேசாமல், தனக்கும் தேவனுக்கும்
தெரியப் பேசக்கடவன்.
(புதிய
தமிழ் மொழிபெயர்ப்பு): அவ்வாறு விளக்கக்கூடியவர் அங்கே இல்லையென்றால் சபையினர்
சந்திக்கும்போது *வேறு மொழியில் (அந்நியபாஷையில்) பேசுகின்றவர் அமைதியாக
இருக்க வேண்டும்*. தன்னிடமும் தேவனிடமும் மட்டுமே பேசிக்கொண்டு அவர் இருத்தல்
வேண்டும்.
மேலும்:
பேசாமலிருக்கக்கடவன்
என்று 1கொரி. 14:30ல் வருகிற பதத்திற்கும் அதே சீகாஓ தான்
பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
1கொரி.
14:30 அங்கே உட்கார்ந்திருக்கிற மற்றொருவனுக்கு ஏதாகிலும் வெளிப்படுத்தப்பட்டால், முந்திப் பேசினவன் *பேசாமலிருக்கக்கடவன்*.
தொழுகையில்
பாட வேண்டும் என்ற கட்டளை உள்ளதால் இது எல்லா சப்தங்களையும் தடை செய்வதாக
கருதமுடியாது. (எபே. 5:19;
கொலோ. 3:16)
அந்நிய
பாஷையில் பேசுகிறவர்களும் தீர்க்கதரிசிகளும் ஒரு கட்டத்தில் அமைதியாக இருக்க
வேண்டும் என்ற கட்டளைகளைப் போலவே,
இந்த வார்த்தையின் பொருள் -
சில சமயங்களில் சில செயல்கள் செய்யப்படக்கூடாது என்பதற்கான அறிகுறியாகும்.
*2)*
1தீமோ.
2:11-12ல் வரும் *“அமைதலாயிருக்க”* வேண்டும் என்ற இடத்தில் உபயோகப்படுத்தப்படும் கிரேக்க
வார்த்தை ஹிசூக்கியா.
அதாவது
அமைதி, சலசலப்பு
அல்லது மொழியிலிருந்து விலகல்: - ஓய்வு அல்லது சமாதானமான / முற்றிலும் அமைதி என்று
பொருள்.
இதே
ஹிசூக்கியா என்ற வார்த்தை அப். 22:2ல் பவுலின் பேச்சைக் கேட்க யூதர்கள் அமைதியாானர்கள்
என்பதை குறிக்க உபயோகப்பட்டுள்ளது.
ஸ்திரீயானவள்
எல்லாவற்றிலும் அடக்கமுள்ளவளாயிருந்து அமைதலோடு கற்றுக்கொள்ளக்கடவள் என்ற 2தெச. 3:11-12ல்
வரும் இடத்திலும் இந்த ஹிசூக்கியா வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.
இது முழுமையான அமைதலை குறிக்கவில்லை, ஆனால் வாழ்க்கையில்
ஊடுருவும் அணுகுமுறையை அறிவுறுத்துகிறது. இங்கேயும் “ஒரு ஆணுக்கு கற்பிக்கவோ
அல்லது ஆணின் மீது அதிகாரம் செலுத்தவோ அனுமதிக்கப்படவில்லை” என்று பவுல் வகையறுக்கிறார்.
(வ12).
சபையில்
செய்தி கொடுத்துக்கொண்டிருந்த போது கொரிந்திய பெண்கள் சந்தேகங்களை எழுப்பியதாகத்
தெரிகிறது. (1கொரி. 14:35)
அவர்கள்
சபையில் அமைதியாக இருக்க வேண்டும் என்பது தேவனுடைய கட்டளை என்றும், வீட்டில் போய் தங்கள்
கணவர்களிடம் கேட்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று பவுல் கூறுகிறார்.
இந்த
வசனத்தை முன்னிட்டு சிலர் பக்கவாட்டில் தங்கள் கருத்துக்களை பிரட்டிவிடுவதை
காணமுடியும் – அதாவது “கேள்விகளைக் கேட்க திருமணமான பெண்களுக்கு மட்டுமே அனுமதி
இல்லை, ஆனால்
திருமணமாகாத பெண் குறுக்கிட முடியும்” என்று சொல்லிவிடுகின்றனர் !!
பவுலின்
கூற்றை நீங்கள் மீண்டும் படித்தால்,
சபையில் *பெண்கள்* என்று பொதுவாக சொல்வதை கவனிக்க முடியும்.
1கொரி. 14:34 சபைகளில் உங்கள் *ஸ்திரீகள்*
பேசாமலிருக்கக்கடவர்கள்;
பேசும்படிக்கு அவர்களுக்கு உத்தரவில்லை; அவர்கள்
அமர்ந்திருக்கவேண்டும்; வேதமும் அப்படியே சொல்லுகிறது.
1கொரி.
14:35 அவர்கள் ஒரு காரியத்தைக் கற்றுக்கொள்ளவிரும்பினால், வீட்டிலே தங்கள்
புருஷரிடத்தில் விசாரிக்கக்கடவர்கள்; *ஸ்திரீகள்*
சபையிலே பேசுகிறது அயோக்கியமாயிருக்குமே.
இவ்வாறு
இந்த கட்டளையானது ஒரு பெண் – சபை கூடும்போது ஜெபத்தை நடத்துவதையோ, வேதவசனங்களை கோடிட்டு
காண்பிப்பதையோ அல்லது சபையில் தேவ வசனத்தை பிரசங்கிக்கவோ தடைசெய்கிறது.
*சபை
என்றாலே அதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்தது. பெண்கள் தனியாகவும் ஆண்கள்
தனியாகவும் கூடி ஜெபித்ததாக வேதத்தில் உதாரணம் இல்லை* !!
*கவனிக்க*:
இருப்பினும், ஒரு பெண் சபைக்கு வெளியே
தேவனுடைய வார்த்தையை ஜெபிக்கவோ பேசவோ முடியாது என்று அர்த்தமல்ல.
1கொரி.
11:1-16ல் ஜெபிக்கும்போதும் தீர்க்கதரிசனம் சொல்லும்போதும் பெண் தலையை மூடிக்கொள்ள
வேண்டும் என்று ஒரு விதி இருக்கிறது.
தொழுகையில்
பெண்கள் பேசுவதும் தீர்க்கதரிசனம் சொல்வதும் ஜெபிப்பதும் அனுமதி இல்லை என்கிறபோது –
அவர்கள் சபைக்கு / தொழுகைக்கு வெளியே பெண்கள் மத்தியிலும் பிள்ளைகள் மத்தியிலும்
இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபடும் போது தாங்கள் அதிகாரத்திற்கு உட்பட்டவர்கள்
என்றும் அதற்கு கீழ்ப்படிந்தவர்கள் என்பதையும் காண்பிக்கும்படியாக தன் தலையை
மூடிக்கொள்ள வேண்டும் என்று விவரிக்கிறார்.
தொழுகை
அல்லாத பொதுவான இடங்களில் ஆண்கள் கூடியிருக்கும் பட்சத்தில் 1தீமோ. 2:11-15ல் உள்ள
பகுதியானது ஒரு பெண் அவர்கள் (ஆண்கள்) மத்தியில் போதிப்பதும் ஜெபிப்பதும் ஆலோசனை
வழங்குவதற்கும் அனுமதியில்லை என்றும் காணமுடியும்.
ஒரு
பெண் கற்றுக்கொள்ளும் சூழ்நிலையில் பங்கேற்பதை அது தடை செய்வதில்லை, அவள் ஆதிக்கம்
செலுத்தவோ அல்லது முன்னிலை வகிக்கவோ அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வகையில் ஒரு பெண், தான் கேட்கப்படும் பட்சத்தில் பதிலளிக்கலாம், அல்லது ஒரு வசனத்தை படிக்கலாம். ஆனால்
அவர் மாணவர்களிடையே அமர்ந்திருந்தாலும் மற்றவர்களுக்கு “அறிவுறுத்தத்” தொடங்கினால்
அவள் தனக்கு வேதம் அளித்த வரம்பை மீறுவதாகும். சிலர் இந்த வேதம் வாசிக்கும் விவகாரத்திலும்
அதிக உணர்திறன் உடையவர்கள் என்று நான் நம்புகிறேன்.
இருப்பினும், ஒரு பெண் ஆண்கள்
மீது ஆதிக்கம் செலுத்தாமல் கவனமாக இருப்பது வேத கட்டளை.
"அது
சரியாக இருக்க முடியாது" என்று ஒரு ஆணின் அறிக்கைக்கு பதிலளிப்பது பெண்ணின்
கருத்தை ஆணின் மீது வைப்பதாகும்.
ஆக்கில்லாவும்
மற்றும் பிரிஸ்கில்லாவும் - தவறாக போதித்த மனிதனுக்கு (அப்பொல்லோ) கற்பிப்பது / திருத்துவது
சபையில் பொதுவாக அல்ல தனிப்பட்ட அமைப்பில் தன் கணவருடன் இருந்த போது செய்யபட்ட ஒரு
செயல் (அப். 18: 24-26).
*ஆண்களும் பெண்களும் கலந்து இருக்கும் கூட்டத்தில் பேச
ஒரு பெண் தடை செய்யப்பட்டுள்ளாரா?*
1-அப்பொல்லோவிற்கு
தனிபட்ட சுட்டிக்காட்டல் வேதத்தை அதிக திட்டமாக கற்பித்த அந்த செயல் தனது
கணவருக்கு உதவிய பிரிஸ்கில்லாவின் உதாரணம். அப். 18:24-26
2-ஆண்களும்
பெண்களும் கூடியிருந்த ஒர் இடத்தில் ஒரு பெண் பேசுவதற்கு ஒரு எடுத்துக்காட்டு - பேதுருவின்
கேள்விகளுக்கு பதிலளித்த சப்பீராள் (அப். 5:8).
3-பேதுரு
வாசலில் நிற்கிறார் என்பதை சொல்லும்படி ரோதை மரியாளின் வீட்டில் ஜெபம் நடந்து கொண்டிருந்த
போது அறிவித்தார். அப். 12:12-15.
*நாம் சபையாராக கூடும் போது பேச அனுமதி உள்ளதா?*
பெண்கள் போதிக்க, ஜெபிக்க, முன்னின்று நடத்த அனுமதியில்லை.
தொழுகைக்காக
அல்லாமல்;
ஜெபத்திற்காக அல்லது ஆலோசனைக்காக கூடினபோது – ரோதையும் சப்பீராளும் பதிலளிக்க அனுமதிக்கப்பட்டார்கள் போதிக்கவோ
நடத்தவோ அல்ல.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*Q&A Biblical Whatsappல் இணைய (locked group)* :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக