#795 - *பொய்யை அருவருக்கிற தேவன். பழைய ஏற்பாட்டில் ராகாப் பொய் சொல்லி
காப்பாற்றும் போது ஏன் அதை ஏற்றுக்கொண்டார்?* அவளை ஆசீர்வதித்தார்.🤔
*பதில்*
பழைய
மற்றும் புதிய ஏற்பாட்டில் உள்ள பல வசனங்கள் பொய் சொல்வது பாவம் என்று குறிக்கிறது.
யோசுவா
புத்தகத்தில் சொல்லப்பட்ட ராகாபின் பொய்யையும், புதிய ஏற்பாட்டில் ராகாபைப் பற்றி
இரண்டு இடங்களில் (எபி. 11:31; யாக். 2:25) நன்மையாக சொல்வதை
படிக்கும் போது நமக்கு இந்த கேள்வி எழுகிறது.
சூழ்நிலைகளின்
காரணமாக பொய் பேசுவதற்கு இந்த விஷயத்தில் வேதம் முரணாக இருக்கிறதா?
ஒருவரின்
“ஒரு” நீதியான செயலை வேதம் அங்கீகரிப்பதால்,
அந்த நபர் செய்த மற்ற எல்லாவற்றையும் தேவன் மன்னிக்கிறார் என்று
அர்த்தமல்ல.
நோவா, ஆபிரகாம், மோசே மற்றும் பலர் உண்மையுள்ளவர்களாகக் சொல்லப்பட்ட போதும் (எபி. 11: 7-29),
அவர்களும் சில வேளைகளில் தேவ சித்தத்திற்கு கீழ்ப்படியாமல் முட்டாள்தனமாக
அல்லது கோழைத்தனமாக செயல்பட்டனர் என்பதை நாம் மறுக்க முடியாது (எண். 20:1-12,
ஆதி. 9:21; 12:12-20; 20:1-18)
ஏற்கனவே
சுட்டிக்காட்டியிருந்த போதும் பேதுரு கர்த்தரை மறுதலித்திருந்த போதும் கிறிஸ்து தான்
உயிர்த்தெழுந்தபின் தன் ஆடுகளை மேய்ப்பாயாக என்று சொன்னதும் / கடலில் நடந்து வந்த
போது சந்தேகப்பட்டதும் உங்களுக்கு நினைவிருக்கும். மத். 14:31, மத். 26:69-75,
யோ. 21:17
பேதுரு
தான் செய்த பாவங்களோடு நின்றுவிடாமல் மனந்திரும்பினதன் விளைவையும் நாம் கண்டோம். மத்.
26:75
தேவனைப்
பின்பற்றுபவர்கள் எவரும் ஏதாவதொரு வகையில் தவறுகளைச் செய்துவிட பிசாசு தூண்டிக்கொண்டே
தான் இருக்கிறான்.
அது
போல ராகாப் ஒரு கானானிய தேசத்து வேசி (யோசு. 2:9-13) என்பதை அறிவோம். கானான் மக்கள்
மிகவும் பொல்லாதவர்கள்.
அவர்கள்
“அருவருப்பான பழக்கவழக்கங்களை” கடைப்பிடித்திருந்தார்கள் - லேவி. 18:3, 30
“வெறுக்கத்தக்க
காரியங்களை” செய்தார்கள் (உபா. 18:9).
அவர்கள்
மக்கள் மீது மந்திரங்களை எழுப்பவும்,
இறந்தவர்களை அழைக்கவும் முயன்றனர் (உபாகமம் 18: 9-11).
அவர்கள்
“தங்கள் மகன்களையும் மகள்களையும் கூட தங்கள் தெய்வங்களுக்குத் தீயில்
எரிப்பார்கள்” (உபாகமம் 12:30).
ராகாப்
தனது கலாச்சாரத்தின் துஷ்பிரயோகத்தை விட்டு முழுமையாக தேவனை ஏற்றுக்கொண்டாரா
அல்லது அவளுடைய சூழ்நிலைகளுக்கு அவள் பலியாகிவிட்டாளா என்ற ஒரு கேள்வி உள்ளது.
இருப்பினும் “மறைத்து” வைத்த வேசி என்று வேதத்தில் விவரிக்கப்படுகிறார் (யோசுவா 2:1-8; 6:17,25).
ஒரு கானானியப் பெண்ணின் வாழ்க்கையில் இத்தகைய பாவத்தன்மை
எந்த ஆச்சரியத்தையும் நமக்கு தெரிவிப்பது இல்லை. ஆனால், ராகாபின் வாழ்க்கை
அவரது பாவ கலாச்சாரத்திற்கு இணையாக தொடரவில்லை. அவள் வெளியேற விரும்பினாள்,
கர்த்தர் ஒரு வழியைக் கொடுத்தார்.
யோசுவா
2-ல் ராகாபின் பதிவு செய்யப்பட்ட சொற்களும் செயல்களும் ஒரு பெண்ணை
மாற்றியமைக்கின்றன.
இஸ்ரவேல் உளவாளிகளுக்கு அவர் கூறிய கூற்றுகளைக்
கவனியுங்கள்:
*கர்த்தர்*
உங்களுக்கு தேசத்தை ஒப்புக்கொடுத்தாரென்றும்,
உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறதென்றும்,
உங்களைக்குறித்து தேசத்துக் குடிகள் எல்லாரும்
சோர்ந்துபோனார்களென்றும் அறிவேன். நீங்கள்
எகிப்திலிருந்து புறப்பட்டபோது, *கர்த்தர்*
உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதையும்,
நீங்கள் யோர்தானுக்கு அப்புறத்தில் சங்காரம்பண்ணின எமோரியரின்
இரண்டு ராஜாக்களாகிய சீகோனுக்கும் ஓகுக்கும் செய்ததையும் கேள்விப்பட்டோம். கேள்விப்பட்டபோது
எங்கள் இருதயம் கரைந்துபோயிற்று, உங்களாலே எல்லாருடைய
தைரியமும் அற்றுப்போயிற்று; *உங்கள் தேவனாகிய கர்த்தரே
உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர்*. (யோசுவா 2:9-11).
யெகோவா
தேவனுடைய பிரசன்னத்தை பற்றிய நம்பிக்கையையும், அவருடைய வல்லமைமிக்க செயல்களையும் ராகாப்
அறிந்து விசுவாசித்திருந்தார்.
எரிகோவை
அழிப்பதற்கான இஸ்ரேலிய திட்டத்தை ராகாபும் அவரது குடும்பத்தினரும் இரகசியமாக
வைத்திருந்தனர்.
உண்மையில்,
புதிய ஏற்பாடு சரியாக உணர்ந்தபடி, ராகாப்
யெகோவா தேவனின் மீதான தனது நம்பிக்கையை தீவிரமாக வெளிப்படுத்தினார் (இருப்பினும்
அறிந்திராத, அனுபவமற்ற, மற்றும்
அவளுடைய விசுவாசத்தில் குறைபாடு இருந்தது).
தொடர்நது
நாம் கவனித்தால், ராகாபின் நேர்மையற்ற தன்மை வேதத்தில் ஒருபோதும் மன்னிக்கப்பட்டதற்கான குறிப்பு
இல்லை. வேசி என்பதற்கான கூற்றை தவிர அவளுடைய பொய் சொன்னதற்காக பழைய அல்லது புதிய
ஏற்பாட்டிலோ பாராட்டப்படவில்லை.
அந்த
நேரத்தில் அவரது ஒட்டுமொத்த நம்பிக்கை மற்றும் செயல்களால் எரிகோவின் அழிவிலிருந்து
அவர் பாராட்டப்பட்டார் மற்றும் அவர் செய்த உதவிக்கு கைமாறாக காப்பாற்றப்பட்டார்.
ஆம், அவள் ராஜாவின்
மனிதர்களிடம் பொய் சொன்னாள், ஆனால் அவளும் (1) யெகோவா மீது
நம்பிக்கை வைத்தாள், (2) அவரிடம் உதவி கேட்டு, (3) இஸ்ரவேல் உளவாளிகளிடம் கருணை காட்டினாள், (4)
தைரியமாக அவர்களை மறைத்து தப்பிக்க உதவினாள்.
ராகாபின்
பொய்யை மறுப்பதற்கோ அல்லது அவளுடைய ஒட்டுமொத்த, தேவன் மீது வளர்ந்து வரும் நம்பிக்கையை
விமர்சிப்பதற்கோ தர்க்கரீதியான அல்லது விவிலிய காரணம் இல்லை.
மனந்திரும்பி
நீதியுள்ள வாழ்க்கையை வாழ்வதற்கான கடுமையான முயற்சியின் நடுவில் ஒரு சோதனையால் தற்காலிகமாக
பின்வாங்கிப்போன மதுவிற்கு அடிமைப்பட்டவரோ
அல்லது பாவ வாழ்க்கையில் மூழ்கி கிடந்தவரின் மீண்டு வரும் முயற்சியின் சிறிய சறுக்கலில்
இரட்சிப்பின் பாதையை பற்றிக்கொள்ள முயற்சிப்பதை பாராட்டாமல் இருக்க முடியுமா?
பொய்க்கு
துளியும் இடமளிக்காத தேவனை நாம் தொழுது கொண்டிருப்பதால் - சூழ்நிலையைக் கொண்டு
யாரும் பொய் சொல்வதற்கு எப்போதும் வேதத்தில் அனுமதியில்லை – தீத்து 1:3-4, எபி. 6:18
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக