#482 - *இன்றைய காலகட்டத்தில்,ஞானஸ்நானம் எத்தனை வயதில் எடுக்கவேண்டும் ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க என்ன தகுதிவேண்டும்?*
இப்பயெல்லாம் ஒரு
சில ஊழியக்காரர்கள் கிறிஸ்துவின் நாமம் சொல்லபட்டவுடனே ஞானஸ்நானம் எடுக்க
தகுயானவர்கள் என்று சொல்கிறார்கள் மற்றும் வெளிநட்டின் உதவி பெறுகிறவர்கள், அவர்கள் வரும்போது மட்டும் அவசர அவசரமாக
ஞானஸ்நானத்திற்கு ஆள் தேடூகிறார்கள் "ஏனென்றால் கணக்கு காமிக்க யாரு
கிடச்சாலும் புடிச்சி முக்கிவிடுகிறர்கள்
இதில் முதல்ல எடுத்தவர்களும் அடங்கும் கேட்டால் எங்களை பாராதீர்கள் கிறிஸ்துவை பாருங்கள் என்கிறார்கள்.
இவர்கள் ஆத்ம ஆதாயம் பண்ணமாட்டர்களாம்? விசுவாசிகள் ஆதாயபடுத்தி சபைக்கு கொன்டுவரனுமாம்?
இதற்கு விளக்கம் தாருங்களேன் ஐயா?🙏🙏🙏
*பதில்*
ஞானஸ்நானம்
எடுக்க வயது வரம்பை வேதத்தில் காணமுடியாது.
யார்
ஞானஸ்நானம் எடுக்கிறார்களோ அவர்கள் தேவ வசனத்தை கேட்க திராணியுள்ளவராயும் அதை
விசுவாசிக்க ஏதுவானவராயும் கிறிஸ்துவை தேவ குமாரன் என்று அறிக்கையிட
புத்தியுள்ளவராயும் தன் பாவம் மன்னிக்கப்படுதற்காக ஞானஸ்நானம் எடுக்கிறார் என்பதை
உணருகிறவராகவும் இருத்தலே அவசியம் (அப். 8:31-40, 22:16, 2:38)
சிறு
குழந்தைகளுக்கு மேலே உள்ள எந்த தகுதியும் இல்லாததால் அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பது
வேதத்தின்படி தவறானது என்று காண்கிறோம்.
இப்படி
எந்த சம்பவமும் நடக்காமல் அவசர அவசரமாக கொடுக்க முயற்சிப்பவர் முகஸ்துதி செய்பவர் – தன் வயிறு நிரம்ப வேலை
செய்பவர் (பிலி. 3:18-19)
சத்தியத்தை
வெளியே எடுத்து செல்ல வேண்டும் –
அது தான் விதைக்கிறவனுடைய வேலை (மத் 13:3)
வசனத்தை
சொல்லும் படி இயேசு எங்கும் சுற்றி திரிந்தார் (மத் 4:23)
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/DdQM79dFf5v6GQMRfbDc2H
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக