#774 - *வாரத்தின் முதலாம் ஞாயிறு என்று நிர்ணயம் பண்ண பட்ட காலக்கட்டம் எது?* ஏன் அது புதன் என்றோ சனிக்கிழமை என்றோ வேதத்தில் தெளிவாக இல்லாத
பட்சத்தில் ஒரு கிறிஸ்தவன் எதன் அடிப்படையில் அவன் ஞாயிற்று கிழமையை முக்கியப்படுத்த வேண்டும்??
*பதில்*
மத்.
28:1 – ஒய்வு நாள் முடிந்து வாரத்தின் முதல் நாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது !!
மாற்கு
16:1ல் ஒய்வுநாளான பின்பு வாரத்தின் முதல் நாள் என்று பார்க்கிறோம்.
கிரேக்க
வார்த்தையாகிய பெந்தேகோஸ்தே என்று வேதாகமத்தில் சொல்லப்படுவது – இக்கால சபையின்
பெயரை குறிப்பது அல்ல மாறாக
-50வது
நாள் - லேவி. 23:16
-புதிய
போஜனபலி செலுத்தும் நாள் - லேவி. 23:16
-ஏழுவாரங்களின்
பண்டிகை - யாத். 34:12
-முதற்கனி
பலி செலுத்தும் பண்டிகை – எண். 28:26
-வாரங்களின்
பண்டிகை - எண். 16:10
என்று
குறிப்பிடப்படுகிறது.
அந்த
விசேஷித்த நாள் என்பது ஓய்வுநாளுக்கு முடிந்த மறுநாள் என்று லேவி. 23:15-16ல்
பார்க்கிறோம். (ஒய்வுநாள் = 7ம் நாள் / சாபத் என்ற சனிக்கிழமை. செபா என்றால் 7)
லேவி.
23:15-16 நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள்
முதற்கொண்டு எண்ணத்துவக்கி,
ஏழுவாரங்கள் நிறைவேறினபின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய
ஐம்பதாம் நாள்மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய
போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்.
லேவி.
23:11 உங்களுக்காக அது அங்கிகரிக்கப்படும்படி, ஆசாரியன் அந்தக்கதிர்க்கட்டை
ஓய்வுநாளுக்கு மறுநாளில் கர்த்தருடைய சந்நிதியில் அசைவாட்டவேண்டும்.
அந்த
பண்டிகைக்காக எருசலேமில் யூதர்களும் இஸ்ரவேலரும் கூடின போது தான் பரிசுத்த
ஆவியானவர் வல்லமையோடு இறங்கினார் – அது வாரத்தின் முதல் நாள் (அப். 2:1)
சனிக்கிழமைக்கு
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை என்பது நாம் அறிந்ததே.
ஆகவே
வாரத்தின் முதல் நாள் என்பது ஞாயிற்றுக்கிழமையை குறிக்கிறது.
வேதத்தில்
சொல்லப்பட்ட கர்த்தருடைய நாள் என்று வரும் எல்லா இடங்களிலும் – வாரத்தின் முதல்
நாளை குறிக்கவில்லை. அதனை குறித்த விரிவான தகவலுக்கு # 719ஐ கவனிக்கவும்.
*ஞாயிற்றுக்கிழமை
ஏன் கிறிஸ்தவனுக்கு முக்கியப்படுத்தப்பட்டது*?
1-இயேசு கிறிஸ்து
உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9
2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான
நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15;
33,36, யோ. 20:19; 26
3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேறும் நாளுக்கும்
இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ. 20:19, 26, அப். 2:1
4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப். 2:1
5- பரிசுத்த ஆவியானவர் இறங்கின நாள் அப். 20:1-4
6-அப்பம் பிட்கும்படி கூடினார்கள் அப். 20:7
7- காணிக்கை சேர்க்கும்படி கூடினார்கள். 1கொரி. 16:1-3
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக