#773 - *வளைக்காப்பு, பெண்கள் பருவ வயது அடைதல், இறந்தவர்கள் நினைவு நாள் போன்ற நிகழ்ச்சிகளை கிறிஸ்துவின் சபையில் நடத்த அனுமதி உண்டா?* அப்படி நடத்துபவர்கள் யார்?
தேவனை மகிமைபடுத்தவும், வேத வசனத்தை மற்றவர்களுக்கு போதிக்கவும் இந்த நிகழ்சிகளை பயன்படுத்தி கொள்கிறேன் என்று பழைய வழிபாடுகள், சாங்கியங்கள், மற்றும் பல.....
இது சரியா? தக்க பதில் அளிக்கவும்
*பதில்*
1) *சீமந்தம்*
சீமந்தம் அல்லது வளைக்காப்பு, பெண்கள் பருவமடைதலின் விழா போன்றவை – இந்துக்களின் பாரம்பரியத்திலிருந்து வந்தவை.
திருமணம் ஆகி (முதல் முறையாக கருவுற்ற) வயிற்றில் பிள்ளை உருவான 5ம் மாதம் அல்லது 7 மாதம் அல்லது 9ம் மாதம் அவரவர் குடும்ப வழக்கப்படி கணவனிடத்திலிருந்து *பிரித்து* பெண்ணின் தாய் வீட்டிற்கு கொண்டு போகும் ஒரு சடங்கு இந்த சீமந்தம் அல்லது வளைகாப்பு என்பது.
மணப்பெண் போலவே அந்த பெண்ணை அலங்கரித்து கைநிறைய வளையல்களை அடுக்குகிறார்கள். பெண்கள் மாத்திரமே பங்கேற்கும் இவ்விழாவில் மகப்பேறடைந்த தாய்மார்கள் வந்திருந்து புதியதாக தாய்மை எய்தியிருக்கும் பெண்ணிற்கு வளையல்கள் அணிவதும் தாங்களும் அணிந்து கொள்வதும் நிகழும்.
இளஞ்சிசு உயிர் வாழ்தல் வீதம் குறைந்தும் மகப்பேறு கால மரணவீதம் கூடுதலாகவும் இருந்த பண்டைக்காலத்தில் சூலுற்றப் பெண் நல்ல முறையில் ஈன்றெடுக்க வேண்டும் என தங்கள் விக்கிரகங்களிடம் வேண்டி இந்த சடங்கு இருந்தது.
மேலும் ஆறாம் மாதம் முதல் குழந்தையின் கரு வெளியுலகை உணரத் தொடங்குகிறது; அக்காலத்தில் அதனை வரவேற்கும் வகையாக இந்தச் சடங்கு நடத்தப்படுவதாகவும் ஒரு நம்பிக்கை.
ஒரு பிராமணணை அழைத்து சிறப்பு யாகம் ஒன்றை பும்சுவன சீமந்தம் என்ற பெயரில் நடத்தப்படும்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டாலும் தன்னை நாடார் என்றும், வன்னியர் என்றும், மீனவர் என்றும், பிராமணன் என்றும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பும் (பூரணமாக) கிறிஸ்தவத்திற்கு மனந்திரும்பாதவர்கள் தங்கள் வழிமுறையான இந்த இந்துக்களின் கலாச்சாரத்தை விக்கிரகத்தினிடம் செல்லாமல் தங்கள் ஊழியரை அழைத்து தேவனிடம் ஜெபம் செய்து நிறைவேற்றிக்கொள்கின்றனர் !!
இந்த நிகழ்வு மாற்கு 10:9ம் வசனத்திற்கு முரண்பாடு போல உள்ளதல்லவா?
2)
*பெண்கள் பருவமடைதல்*
பெண் குழந்தைகள் / பிள்ளைகள் பருவமடையும் வரை மற்றவர்களுடன் சகஜமாக பழக விடுவதும் விளையாடுவதும் ஓடி திரிவதும் தமிழ்ர்களின் (இந்துக்களின்) பண்டைய வாழ்க்கை முறையில் அனுமதிக்கப்பட்டு அவள் பருவமடைந்த நாள் முதல் வீட்டை விட்டு வெளியேற அனுமதிக்க மாட்டார்கள். இது தமிழர்களின் / இந்துக்களின் கலாச்சாரமாக இருந்தது.
பெண்கள் படிப்பறிவு பெற்றுக்கொள்ள கூட அனுமதிக்கப்படாத காலம் அது. ஆகவே பெண்களை பள்ளிக்கூடம் அனுப்பவும் மாட்டார்கள்.
பொது அறிவு வளர வளர – பருவம் அடையும் வரை பெண்களை பள்ளிக்கு பெற்றோர் அனுப்ப சம்மதித்தாலும் பருவம் அடைந்த நாள்முதல் திருமணம் ஆகும் வரை வீட்டைவிட்டு வெளியேற பெண்களை அனுமதிக்கவில்லை.
இப்படி இருந்த சூழ்நிலையில் தன் வீட்டில் திருமணம் செய்து கொள்வதற்கு ஏற்ற வயதில் பெண் தயார் நிலையில் உள்ளது என்பதை ஊருக்கும் உறவினர் வீட்டாருக்கும் முக்கியமாக மாமன் வீட்டாருக்கும் தெரியபடுத்தி பூப்புனித நீராட்டு விழா என்று அனைவரையும் அழைத்து விழா எடுப்பார்கள்.
மேலும் ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக பெண்களின் பருவம் அடையும் வயது சுமார் 8லிருந்து 12 வயதிற்குள்ளாகவே வந்து விடுவதால் இக்காலங்களில் இந்த விழா நடைமுறையையும் அநேகர் செய்வது இல்லை.
அனைத்தையும் கடந்து பெண்கள் மீதான அடக்குமுறையானது கடந்த 20 வருடங்களாக பல முன்னேற்றங்கள் கண்டும் விட்டது.
தேவன் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாக செய்கிறவர் என்பதை வேதம் தெளிவுப்படுத்துகிறது. பிர. 3:11
சில பெண்கள் சரீர வளர்ச்சியின் பெலவீனத்தால் இந்த மூப்பு அடையமுடியாத அளவில் அவர்களது எதிர்கால வாழ்க்கையே கேள்விக்குறியாகிப் போகும் தருணத்தில் இப்படி ஒரு நிகழ்வை தன் மகள் கடந்து விட்டாள் என்பதை நினைத்து அவளது பெற்றோர் - தேவனுக்கு நன்றிகளை ஏறெடுக்க ஒரு கூட்டத்தை வைத்து அனைவருக்கும் தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்வதில் எந்த விதிமீறலும் இல்லையே (லூக்கா 15:23)
3)
ஆனால் இந்த நிகழ்வுகளை முன்னிட்டு விக்கிரகஆராதனைக்காரர்கள் மத்தியில் போய், அவர்கள் ஒருபக்கம் தங்கள் சடங்குகளை விக்கிரகங்களுக்கு செய்து கொண்டிருக்க – தான் அழைக்கப்பட்டோம் என்பதாலே ஊழியரும் போய் தன் பங்குக்கு ஜெபம் செய்வது – மற்ற அவிசுவாசியானவர்கள் தேவனுக்கு கீழ்படிய தடை செய்கிறர்கள்.
கீழே உள்ள வசனம் போஜனத்தை குறித்து சொல்லப்பட்டாலும் – இந்த இடத்தில் அந்த வசனங்களை படிக்கும் போது தேவனுடைய தீர்மானம் தெளிவாக விளங்கும்.
1கொரி. 8:7-13
ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி, விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது.
8:9 ஆகிலும் இதைக்குறித்து உங்களுக்கு உண்டாயிருக்கிற அதிகாரம் எவ்விதத்திலும் *பலவீனருக்குத் தடுக்கலாகாதபடிக்குப்* பாருங்கள்.
8:10 எப்படியெனில், அறிவுள்ளவனாகிய உன்னை விக்கிரகக்கோவிலிலே பந்தியிருக்க ஒருவன் கண்டால், பலவீனனாயிருக்கிற அவனுடைய மனச்சாட்சி விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளைப் புசிப்பதற்குத் துணிவுகொள்ளுமல்லவா?
8:11 பலவீனமுள்ள சகோதரன் உன் அறிவினிமித்தம் கெட்டுப்போகலாமா? அவனுக்காகக் கிறிஸ்து மரித்தாரே.
8:12 இப்படிச் சகோதரருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்து, பலவீனமுள்ள அவர்களுடைய மனச்சாட்சியைப் புண்படுத்துகிறதினாலே, நீங்கள் கிறிஸ்துவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்கிறீர்கள்.
8:13 ஆதலால் போஜனம் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்கினால், நான் என் சகோதரனுக்கு இடறலுண்டாக்காதபடிக்கு, என்றைக்கும் மாம்சம் புசியாதிருப்பேன்.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக