சனி, 22 பிப்ரவரி, 2020

#771 - எலியாவின் தொடக்கம் என்ன? அவர் எவராக அழைக்கப்பட்டார்? அவர் எவ்வாறு ஊழியம் செய்தார்?

#771 - *எலியாவின் தொடக்கம் என்ன? அவர் எவராக அழைக்கப்பட்டார்? அவர் எவ்வாறு ஊழியம் செய்தார்?*

*பதில்*
எலியாவை குறித்த முழு பதிவை இங்கு நான் பதிவிடுகிறேன்.

மறக்கமுடியாத தீர்க்கதரிசிகள் பட்டியலில் எலியா தனித்து நிற்கிறார்.

அவரது பின்னணி பற்றி அதிகம் சொல்லப்படவில்லை என்றே சொல்லலாம். ஆகாபுக்கு அழிவை முன்னறிவிக்கும் இடத்தில் அவர் முதன் முதலில் வேதாகமத்தில் காணப்படுகிறார் - I இரா. 17:1

எலியா என்றால் "யெகோவா என் தேவன்" என்று பொருள்.

எபிரேய மொழியில் திஸ்பியன் என்றால் “குடியிருப்பாளர்கள்”

எலியாவின் உடல் அல்லது ஆடை அல்லது இரண்டுமே முடி நிறைந்திருந்தது – 2இரா. 1:7-8 (ஆங்கிலம் மற்றும் எபிரேய வேத மொழிபெயர்ப்புகளில் இரண்டும்  மயிர் நிறைந்ததன் அர்த்தத்தில் எழுதப்பட்டிருக்கிறது)

மற்ற தீர்க்கதரிசிகள் இந்த பாணியை பின்பற்ற எத்தனித்தனர். சகரியா 13:4; மத். 3:4

எலியா ஒரு வறட்சியை அறிவிக்க காட்சிக்கு வருகிறார். அவருடைய ஜெபத்தினால் கொண்டு வரப்பட்டது - யாக்கோபு 5:17

வறட்சியை கொண்டு வருவதற்கு காரணம் ஆகாப் மற்றும் யேசபேல் – 1 இரா. 16:30-33

1 இரா. 17:1ல் எலியா தான் ஜீவனுள்ள தேவனுக்கு முன்பாக நிற்பதாக தெரிவிக்கிறார், வறட்சி வர இதுவே காரணம்.

கேரீத் ஆற்றினருகே தேவன் எலியாவை போஷித்தார் – 1 இரா. 17:2-7

ஆகாபின் கோபத்திலிருந்து எலியாவை பாதுகாக்க தேவன் தனது தீர்க்கதரிசியை மறைத்தார்

மூன்றரை ஆண்டுகளில் ஆகாப் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை – 1இரா. 18:17-18

எலியா தனக்கும் பாகாலின் தீர்க்கதரிசிகளுக்கும் இடையிலான போட்டியுடன் தனது கருத்தை நிரூபிக்க முன்வந்தார், இஸ்ரவேல் அனைவருமே சாட்சியம் அளித்தனர் – 1இரா. 18:19-20

எலியா இஸ்ரவேலை ஜனங்களை பார்த்து யாரைப் பின் தொடர்கிறார்கள் என்று கேட்டதற்கு எந்த பதிலும் வரவில்லை என்பதை கவனியுங்கள் – 1இரா. 18:21

மக்களை தங்கள் பாவங்களால் எதிர்கொள்வதில் எலியா தைரியமாக இருந்தார் – 2தீமோ. 4:1-4

மக்களை புண்படுத்துவதைத் தவிர்ப்பதற்காக மக்கள் பெரும்பாலும் தங்கள் வழியிலிருந்து வெளியேறுகிறார்கள். ஆனால் எலியா அதை சவாலாக எடுத்தார்.

தங்களைத் தாங்களே புண்படுத்த முயற்சிக்கிறார்கள் என்பதல்ல, ஆனால் ஒருவரின் உணர்வுகளைத் தவிர்ப்பதற்காக உண்மையைத் தவிர்க்க முடியாதே - மத்தேயு 15:12-14

பொய்யான தீர்க்கதரிசிகளை எலியா கொண்று போட்டார் – 1இரா. 18:39-40

தவறான போதனையாளர்களை எதிர்கொள்ள வேண்டும் என்று எலியா நமக்கு கற்பித்திருக்கிறார் - தீத்து 3:10-11

தவறான கருத்துக்களை முதியவரோ வலியவரோ யாராக இருந்தாலும் நாம் அவர்களோடு சேர்ந்து ஒத்து ஊதாமல் சத்தியத்திற்குள் நிற்கும்படி எதிர்த்து போராட நமக்கு எலியா விட்டு போன பாடம் – நாமும் போராட வேண்டும் – 2கொரி. 10:3-5

பாவத்தை பார்த்து கொண்டு அமைதியாக நாம் போவது அல்ல என்பதன் பாடத்தை நமக்கு எலியா கற்றுக்கொடுக்கிறார் – அதை அம்பலப்படுத்த வேண்டும் - எபேசியர் 5:11
 
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் : kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக