வியாழன், 27 பிப்ரவரி, 2020

#772 - மணவாட்டி யைப் பற்றி தெளிவான விளக்கம் தர வேண்டும்

#772  - *மணவாட்டி யைப் பற்றி தெளிவான விளக்கம் தர வேண்டும்* ஏனென்றால் சபையை மணவாட்டி என்று குறிப்பிட்டிருக்கிறார் அதைப் பற்றின விளக்கம் எனக்கு வேண்டும் ஐயா.

*பதில்*
1) சாதாரண அர்த்தத்தில் மணவாட்டியை ஏசா. 49:18; ஏசா. 61:10 வருகிறது.

2) மேலும்
கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் இடையிலான உறவு ஒரு மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையிலான உருவத்தின் கீழ் சொல்லப்பட்டுள்ளது (யோ. 3:29).

சபை "மணமகள்" என்று அழைக்கப்படுகிறது (வெளி. 21:9; வெளி. 22:17).

பத்து கன்னிகளின் உவமையை ஒப்பிட்டு பார்க்க முடியும் மத். 25:1-13.

ஆனால் – பெரிய சவால் - *மணவாட்டி சபை* என்று தங்களை கூறிக்கொள்பவர்களுக்கு இங்கே கொடுக்கப்பட்டுள்ளது !!

ஆம் – சபை மோசேயின் மணவாட்டி அல்ல - *கிறிஸ்துவின்  மணவாட்டி*

அப்படியென்றால் - மோசேயின் நியாயபிரமாணத்துக்கு  அல்ல, கிறிஸ்துவின் விசுவாச பிரமானத்திற்கு மாத்திரமே கீழ்படிகிறவர்களாக இருக்க வேண்டும்* !!

வசனம்:
அப்படிப்போல, என் சகோதரரே, நீங்கள் மரித்தோரிலிருந்து எழுந்த கிறிஸ்து என்னும் வேறொருவருடையவர்களாகி, தேவனுக்கென்று கனிகொடுக்கும்படி கிறிஸ்துவின் சரீரத்தினாலே நியாயப்பிரமாணத்துக்கு மரித்தவர்களானீர்கள்." ரோமர் 7:4.

(கிறிஸ்துவினுடைய) சொந்த புருஷனுடைய கட்டளைக்கு கீழ்படியாத மனைவியின் (சபையை) மீது புருஷன் அன்பாக இருப்பானோ?

சொல்லாததை / செய்யக்கூடாது என்ற சகலத்தையும் தன் மனைவி செய்தால் – புருஷனாவது அவள் மனைவி மீது அன்பு செலுத்துவானா ?

(கிறிஸ்தவர்களுக்கு அல்ல) இஸ்ரவேலருக்கு மாத்திரம் சொல்லப்பட்டு, நிறைவேற்றப்பட்டு, முடித்து வைத்து, அப்புறப்படுத்தப்பட்ட நியாயபிரமாணத்தில் சொல்லப்பட்ட கட்டளைகளான:
(ரோ. 10:4, ரோ. 3:25-31, கலா. 2:16, அப். 13:39, எபி. 7:18-19, எபி. 9:8-16, ரோ. 8:3)

*தசம பாகம் என்ற பெயரில் புதிய ஏற்பாட்டு காலத்திலும் சபையாரிடம் வசூல் வேட்டை ஒரு பக்கம்,

*ஒய்வு நாளான சனிக்கிழமையை அநுசரிப்பது ஒரு கூட்டம்,

*வாரத்தின் முதல் நாளை ஓய்வு நாள் என்று சொல்லும் ஒரு கூட்டம்,

புதிய ஏற்பாட்டு தொழுகையில் இசைகருவிகளைப் பயன்படுத்த எந்த ஒப்புமையும் அங்கீகாரமும் மாதிரியும் உத்தரவும் வேதத்தில் இல்லாத பட்சத்தில்: (கொலோ. 3:16, எபே. 5:19, யாக். 5:13)

*ஆராதனை என்ற பெயரில் கூப்பாடும் நடனத்தோடும் நடத்தும் கச்சேரிகள் ஒரு பக்கம்,

சபையில் பெண்கள் பேசுவது அயோக்கியத்தனம் என்று அப்பட்டமாக வேதத்தில் சொல்லியிருந்தும்: (1 கொரி. 14:34-35, 1தீமோ. 2:11-12, 1கொரி. 11:3)

*பெண்களின் மேடை ஆதிக்கங்கள் ஒரு பக்கம்,

*போதாக்குறைக்கு ரெவரென்டு பட்டத்தோடும் பாஸ்டர் பட்டத்தோடும் பெண்களின் சபை மேடைகளில் அணிவகுப்பு !!

*அற்புதங்கள் எனற பெயரில் நாடகங்களும் ஏமாத்து அரங்கேற்றங்களும்,

*தூதர் பாஷை பேசுகிறோம் என்று எவருக்கும் எந்த காலத்திலும் புரியாததை சபையில் பேசுவது,

இப்படி ஏகப்பட்ட மீறல்களை தன் மனைவியிடம் (சபையிடம்) புருஷன் (கிறிஸ்து) கண்டால் – என்ன நடக்கும்??? திருமணம் ஆன அனைவருக்கும் – இதற்கு பதில் தெரியுமே  !!!

சபையானது கிறிஸ்துவின் மணவாட்டி – அதில் மாற்றம் இல்லை.
கிறிஸ்துவை தலையாக கொண்ட சரீரமே கிறிஸ்துவிற்கு உரிமை.

மற்றவர்களின் கோட்பாட்டை (தலையை) கொண்டு இயங்குகிற சரீரத்தை (சபையை) குறித்து என்ன சொல்வது?

பவுல் சொல்வது :
"நான் உங்களைக் கற்புள்ள கன்னிகையாகக் கிறிஸ்து என்னும் ஒரே புருஷனுக்கு ஒப்புக்கொடுக்க நியமித்தபடியால், உங்களுக்காக தேவவைராக்கியமான வைராக்கியங்கொண்டிருக்கிறேன்." 2 கொரி. 11:2.


கிறிஸ்துவின் சொல்படி கட்டளைபடி முழுமையாக நடந்து கீழ்படிந்து இருக்கும் மனைவியை (சபையை) – அவர் வருகையின் போது சேர்த்துக்கொள்கிறார் !!

"பின்பு, கடைசியான ஏழு வாதைகளால் நிறைந்த ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதரில் ஒருவன் என்னிடத்தில் வந்து: நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி, பெரிதும் உயரமுமான ஒரு பர்வதத்தின்மேல் என்னை ஆவியில் கொண்டுபோய், தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். "(வெளி. 21: 9-10).

உன்னை படைத்தவன் உன் கணவன், சேனைகளின் கர்த்தர் அவருடைய என்பது பெயர்; உமது மீட்பர் இஸ்ரவேலின் பரிசுத்தர்; அவர் முழு பூமியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார்" (ஏசாயா 54:5).

கர்த்தர் சொல்லுகிறார், "நான் உன்னை மணந்திருக்கிறேன். நான் உன்னை அழைத்துச் செல்வேன், ஒன்று நகரத்திலிருந்து, இரண்டு குடும்பத்திலிருந்து, நான் உன்னை சீயோனுக்கு அழைத்து வருவேன் "" (எரேமியா 3:14).

கிறிஸ்துவின் மணமகள் சபை (எபேசியர் 5: 23-27)

சபை என்பது தனிப்பட்ட கிறிஸ்தவர்களால் ஆனது.

எனவே, திருச்சபையின் தனிப்பட்ட உறுப்பினர்களாகிய நாம் கிறிஸ்துவை மணந்தவர்கள் என்று கூட்டாக சொல்லலாம். ரோமர் 7: 4 மற்றும் 2 கொரி. 11:2

உலகத்தில் ஒரே சபை தான் – அது கிறிஸ்துவினுடையது.
ஒரு புருஷனுக்கு ஒரே மனைவி தான் !!!

அவர் சொல்படி, அவர் கட்டளைபடி அந்த சபையானது 50வது நாளில் (அப். 2) அதாவது கி.பி 33ம் ஆண்டில் துவங்கப்பட்டது.
அந்த சபையில் நாம் அங்கம் வகிக்க வேண்டும்.

நீங்கள் சார்ந்திருக்கும் சபை யாரால் – எப்போது துவங்கப்பட்டது என்ற கேள்வியை கேட்டுக்கொண்டால் நம் சொந்த நிலமையை புரிந்து கொள்ள முடியும்.

கத்தோலிக்கம் சுமார் 625ம் ஆண்டு துவங்கப்பட்டது.
15ம் நூற்றாண்டில் ப்ரோடஸ்டன்ட், 16ம் நூற்றாண்டில் மற்றவைகள் என்று கத்தோலிக்கத்திலிருந்து பிரிந்து வந்தவை தான் இப்போது நாம் பார்த்துக்கொண்டிருக்கும் ஏகப்பட்ட புற்றீசல் போல இருக்கும் பெயர் பலகைகள் !!

ஆனால் 33ம் ஆண்டு கிறிஸ்துவால் துவங்கப்பட்டது இன்றும் அமைதியாய் இயங்கி கொண்டு தான் இருக்கிறது.

இந்த பதிவு அநேகருக்கு முகச்சுளிவையும் கேள்வியையும் ஏற்படுத்தும் – என்ன செய்வது?

இன்று என்னப்படுமளவும் நாம் வேதத்தோடு நம்மை சரிபார்த்துக்கொள்வது நன்மையாயிற்றே !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக