சனி, 22 பிப்ரவரி, 2020

#770 - இந்த வசனங்களை மட்டுமே இயேசு கிறிஸ்து படித்தார். ஏன் அதன் கீழ் படிக்கவில்லை?? விளக்கம் தாருங்கள்


#770 - *கர்த்தருடைய ஆவியானவர் என் மேலிருக்கிறார் என்ற வசனத்தை மாத்திரம் ஏன் இயேசு கிறிஸ்து படித்தார்?*

கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்
; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும், 19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு, லூக்கா 4:18-19

இந்த வசனங்களை மட்டுமே இயேசு கிறிஸ்து படித்தார். ஏன் அதன் கீழ் படிக்கவில்லை?? விளக்கம் தாருங்கள்

*பதில்*
 அவர் இந்த வசனத்தை வாசித்தது - தான் வளர்ந்த ஊரில். லூக். 4:16

அவர் வாசித்த இடம் - ஜெபஆலயம். லூக். 4:16

தேவ ஆலயம் - என்பது நியாயபிரமாண காலத்தில் ஒன்றே ஒன்று தான் - அது எருசலேம் தேவாலயம் மாத்திரமே. ஆகவே தான் சாமாரிய பெண்ணிடம் எங்கும் தொழுது காலம் வரும் என்றார் கிறிஸ்து (யோ. 4:21)

மற்றவைகள் எல்லாம் - அந்தந்த ஊரில் அவரவர் வளர்ச்சிக்காகவும் வேத அறிவிற்காகவும் இயங்கும் ஜெபஆலயங்கள்.

ஜெபஆலயங்களில் அந்த நாளில் வாசிக்கும்படியான முறைமையின் படி - அவருக்கு *அந்த பகுதி* கொடுக்கப்பட்டது. லூக்கா 4:17, 19

அவருக்கு அன்றைய தினத்தில் வாசிக்க வேண்டிய பகுதியை வாசித்து முடித்து உட்கார்ந்தார் - லூக்கா 4:20

அவருக்கும் அவர் வாசித்ததற்கும் சம்பந்தம் இருப்பதை உணர்ந்ததால் தான் - கூடி நின்றவர்கள் ஆச்சரியமாக அன்று அவரை பார்த்தனர் - லூக்கா 4:20

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக