செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

#763 விக்கிரகத்தை வணங்கலாமா ?

#763  *விக்கிரகத்தை வணங்கலாமா?* 
(*நீளமான கேள்வி*)  அனைத்து கிறிஸ்தவ பிரிவுகளிலும் ஒவ்வொரு பைபிள் படிக்கிறோம்.  தமிழில் மற்றும் ஆங்கிலம் என அனைத்து பைபிளிலும் இருக்கும் வசனத்திற்கும் இப்போது நாம் செய்வதும் சரியா என விளக்கவும்.

*வேத வசனம்  என்ன சொல்கிறது*?
*Protestant bible*
Deuteronomy 4:15-19,23 - [15]கர்த்தர் ஓரேபிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களோடே பேசின நாளில், நீங்கள் ஒரு ரூபத்தையும் காணவில்லை.
Take ye therefore good heed unto yourselves; for ye saw no manner of similitude on the day that the LORD spake unto you in Horeb out of the midst of the fire:

[16]ஆகையால் நீங்கள் உங்களைக் கெடுத்துக்கொண்டு, ஆண் உருவும், பெண் உருவும் ,
Lest ye corrupt yourselves, and make you a graven image, the similitude of any figure, the likeness of male or female,

[17]பூமியிலிருக்கிற யாதொரு மிருகத்தின் உருவும், ஆகாயத்தில் பறக்கிற செட்டையுள்ள யாதொரு பட்சியின் உருவும்,
The likeness of any beast that is on the earth, the likeness of any winged fowl that flieth in the air,

[18]பூமியிலுள்ள யாதொரு ஊரும் பிராணியின் உருவும், பூமியின் கீழ்த் தண்ணீரிலுள்ள யாதொரு மச்சத்தின் உருவுமாயிருக்கிற இவைகளில் யாதொரு உருவுக்கு ஒப்பான விக்கிரகத்தை உங்களுக்கு உண்டாக்காதபடிக்கும்,
The likeness of any thing that creepeth on the ground, the likeness of any fish that is in the waters beneath the earth:

[19]உங்கள் கண்களை வானத்திற்கு ஏறெடுத்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வானத்தின் கீழெங்கும் இருக்கிற எல்லா ஜனங்களுக்கும் ஏற்படுத்தின வானத்தின் சர்வ சேனைகளாகிய சந்திர சூரிய நட்சத்திரங்களை நோக்கி, அவைகளைத் தொழுது சேவிக்க இணங்காதபடிக்கும், உங்கள் ஆத்துமாக்களைக்குறித்து மிகவும் எச்சரிக்கையாயிருங்கள்.
And lest thou lift up thine eyes unto heaven, and when thou seest the sun, and the moon, and the stars, even all the host of heaven, shouldest be driven to worship them, and serve them, which the LORD thy God hath divided unto all nations under the whole heaven.

[23]நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கையை மறந்து, உங்கள் தேவனாகிய கர்த்தர் வேண்டாம் என்று விலக்கின எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Take heed unto yourselves, lest ye forget the covenant of the LORD your God, which he made with you, and make you a graven image, or the likeness of any thing, which the LORD thy God hath forbidden thee.

*RC Bible*

15 ஓரேபு மலையில் நெருப்பினின்று ஆண்டவர் உங்களோடு பேசிய அந்நாளில், நீங்கள் எந்த உருவத்தையும் காணவில்லை. எனவே மிகவும் எச்சரிக்கையாய் இருங்கள்.

இணைச் சட்டம் 4:15
16 நீங்கள் அழிவுக்கு உள்ளாகாதபடி சிலைகளைச் செய்யாதீர்கள்.

இணைச் சட்டம் 4:16
17 ஆண் அல்லது பெண் , நிலத்தின் விலங்குகள் அல்லது வானத்துப் பறவைகள்,

இணைச் சட்டம் 4:17
18 தரையில் ஊர்வன அல்லது தரைக்குக் கீழே நீரில் வாழும் மீன்கள், எந்த உருவத்திலும் சிலைகளைச் செய்யாதீர்கள் .

இணைச் சட்டம் 4:18
19 மேலும், வான் நோக்கிக் கண்களை உயர்த்தி, கதிரவன், நிலா, விண்மீன்கள், வான்படைகள் ஆகிய நீங்கள் கண்ணால் காணும் பொருள்களுக்குமுன் மண்டியிட்டு வணங்காதபடி எச்சரிக்கையாய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளாகிய ஆண்டவர், வானத்துக்குக் கீழுள்ள எல்லா மக்களினங்களுக்கும் பணிபுரியவே அவற்றை ஏற்படுத்தியுள்ளார்.

இணைச் சட்டம் 4:19
23 எனவே, உங்கள் கடவுளாகிய ஆண்டவர் உங்களோடு செய்துள்ள உடன்படிக்கையை மறந்துவிடாதீர்கள், மேலும் உங்கள் கடவுளாகிய ஆண்டவர் கட்டளையிட்டபடி எந்தவொரு உருவத்திலும் உங்களுக்கெனச் சிலையைச் செய்யாதபடி கவனமாய் இருங்கள் .
இணைச் சட்டம் 4:23

வேதம் எந்த ஒரு உருவத்தையும் வணங்க கூடாது என தெளிவாக கூறுகிறது .

நாம் என்ன செய்கிறோம்
ஒவ்வொரு வீட்டிலும் இயேசுவின் உருவப்படம் அல்லது சிலையை வைத்து வழி படுகிறோம்.

*என்னுடைய சந்தேகங்கள்*
1. வேதாகமத்தில் எந்த உருவத்தையும் வணங்க கூடாது என இருக்கும்போது நாம் ஒரு உருவத்தை வைத்து வணங்குவது சரியா?

2. உபாகமம் 27.15 (Protestant) இணைச்சட்டம் 27.15 (RC) ஆகிய இரண்டு வேதாகமம் மற்றும் வசனங்களில் மனுஷனுடைய  கைவேலையில் செய்த எந்த பொருளையும் வணங்க கூடாது என இருக்கும்போது நாம் இயேசு எனும் உருவத்தை வணங்குவது சரியா?

3. ஏனென்றால் இயேசு உயிரோடு இருக்கும்போது போட்டோ எடுத்திருந்தாலும் (அப்போது camera இல்லை), அல்லது வரைந்திருந்தாலும் அதுவும் மனிதன் கைவேலையில் உருவானதுதானே. அதை வணங்குவது சரியா?

4. அப்படி எந்தவொரு உருவத்தையும் வணங்குவது எனக்கு புரிந்தவரை வேத வசனத்திற்கு எதிராக தோன்றுகிறது.

நாம் செய்வது எந்த முறையில் சரி அல்லது தவறு என விளக்குமாறு கேட்கிறேன்.

*இன்னொரு முக்கிய விஷயம்.*
யஜுர் வேதம் (Hindu Vedha)
யஜுர் வேதத்தின் கீழ்வரும் வரிகள் அதே போன்றதொரு கடவுள் கோட்பாட்டை விளக்குகிறது.:

1. "ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி"
    "கடவுளுக்கு உருவம் கிடையாது."
    [யஜுர் வேதம் 32:3]5

2. "சுதமா  போப்விதம்"
 "உடலற்ற அவன்  தூய்மையானவன்."
[யஜுர் வேதம் 40:8]6

உருவ வழிபாடு செய்பவர்கள் என கூறும் புற மதத்தின் வேதங்களிலும் உருவத்தை வழிபட கூடாது என இருக்கும்போது நாம் வழிபடுவது எப்படி சரியாகும் என தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கவும்.

இந்த பதிவு என்னை தெளிவுபடுத்திக் கொள்ள இங்கு பதிவிட்டுள்ளேன்.

*பதில்*
1. *வேதாகமத்தில் எந்த உருவத்தையும் வணங்க கூடாது என இருக்கும்போது நாம் ஒரு உருவத்தை வைத்து வணங்குவது சரியா*?

*கிறிஸ்தவர்கள்* - சிலுவை உட்பட (இயேசு என்று சொல்லி) எந்த உருவத்தையோ, படத்தையோ வணங்ககூடாது. அது விக்கிரக ஆராதனை. அவர்கள் பரலோகம் போவதில்லை என்று வேதம் தெளிவாக சொல்கிறது.

பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், *விக்கிரகாராதனைக்காரரும்*, பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார். வெளி 21:8

2. *உபாகமம் 27.15 (Protestant) இணைச்சட்டம் 27.15 (RC) ஆகிய இரண்டு வேதாகமம் மற்றும் வசனங்களில் மனுஷனுடைய  கைவேலையில் செய்த எந்த பொருளையும் வணங்க கூடாது என இருக்கும்போது நாம் இயேசு எனும் உருவத்தை வணங்குவது சரியா*?

*தவறு* - இயேசு என்று இவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் உருவப்படம், சுமார் 235-300வது ஆண்டுகளில் ஓவியரால் கற்பனையாக வரையப்பட்டது.

வேதத்தின் படி படத்தையோ சொரூபத்தையோ வணங்குவது தவறு. அது விக்கிரக ஆராதனை.
கடவுள் ஆவியாயிருக்கிறார்.

3. *ஏனென்றால் இயேசு உயிரோடு இருக்கும்போது போட்டோ எடுத்திருந்தாலும் (அப்போது camera இல்லை), அல்லது வரைந்திருந்தாலும் அதுவும் மனிதன் கைவேலையில் உருவானதுதானே. அதை வணங்குவது சரியா*?

உயிரோடு இருந்த போது போட்டோ கிடையாது. அப்படியே அந்த காலத்தில் ஒரு வேளை போட்டோ இருந்து அதை ஒருவர் எடுத்தார் என்றே வைத்துக்கொண்டாலும் – அந்த ஒரிஜினல் ஃபோட்டோவை வைத்தும் வணங்க கூடாது – அதுவும் விக்கிரகமே. வேதாகமம் அதையும் வன்மையாக கண்டிக்கிறது. அப்படி வணங்கினவர்களும் பரலோகம் போகமுடியாது என்று வெளி 21:8 சொல்கிறது !

நீங்கள் *எனக்கு ஒப்பாக* வெள்ளியினாலே தெய்வங்களையும் பொன்னினாலே தெய்வங்களையும் உங்களுக்கு உண்டாக்கவே வேண்டாம். யாத் 20:23

4. *அப்படி எந்தவொரு உருவத்தையும் வணங்குவது எனக்கு புரிந்தவரை வேத வசனத்திற்கு எதிராக தோன்றுகிறது*.

உங்கள் அனுமானம் சரியானதே.

மேலும், கத்தோலிக்கர்களுக்கும் கிறிஸ்தவத்திற்கும் நேர் மாறான வித்தியாசங்கள் உண்டு.

*கிறிஸ்துவின் உபதேசத்தை மாத்திரம்* பின்பற்றுபவர்கள் தான் கிறிஸ்தவர்கள்.

கத்தோலிக்கர்கள் பின்பற்றுவது வேதம் + போபின் கட்டளைகள்.
ஆகவே கத்தோலிக்கர்களை கிறிஸ்தவத்தோடு நாம் ஒப்பிட்டு பார்க்க முடியாது.  

குறிப்பு : *கிறிஸ்தவத்தில் உள்ள ஜனங்களின் சந்தேகங்களை தீர்ப்பதற்கான தளம் இது*. 

இந்துக்களின் புத்தகங்களைக் குறித்து நீங்கள் கேட்ட கேள்விக்கு நான் கருத்து சொல்வதற்கில்லை. 

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
 
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
 
வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com
 
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக