செவ்வாய், 18 பிப்ரவரி, 2020

#764 - அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. 1 கொரி 10:9 இதன் சரியான விளக்கம் என்ன?

#764 - *அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைபார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள். அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. 1 கொரி. 10:9 - இதன் சரியான விளக்கம் என்ன?*

*பதில்*
ஜனங்கள் தேவ வார்த்தையை நம்பாததை குறிக்கிறது இந்த வசனம்.

பரீட்சை அல்லது சோதனை என்றால் – நாம் அறிந்ததை / கற்றதை சரி செய்து அல்லது சோதித்து பார்ப்பது.

சோதனை என்ற வார்த்தை மனிதனுக்குப் பொருந்தும்போது, ​​பாவத்திற்கான நோக்கங்களை அல்லது தூண்டுதல்களை முன்வைப்பதாகிறது.

தேவனைப் பற்றிய குறிப்புடன் பயன்படுத்தப்படும்போது, ​​மனிதன் அவருடைய பொறுமையை முயற்சிப்பது, கோபத்தைத் தூண்டுவது, அல்லது அவர் எவ்வளவு தாங்குவார் என்பதைப் பார்க்கும் விதத்தில் செயல்படுவது, மக்களின் துன்மார்க்கத்தையும் வக்கிரத்தையும் அவர் எவ்வளவு காலம் தாங்குவார் என்பதாகும்.

எதிர்ப்பு, புகார், பொறுமையின்மை மற்றும் அவருடைய நடவடிக்கைகளில் அதிருப்தி ஆகியவற்றால் இஸ்ரவேலர் அவரை சோதித்தார்கள், அல்லது “அவருடைய பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் முயற்சித்தார்கள்”.

தேவனுடைய வார்த்தையை நம்பாமல் கீழ்படியாமல் முறுமுறுத்து கர்த்தரையே சோதித்ததால் வனாந்திரத்தில் அழிக்கப்பட்டு போனார்கள்.

அவர்கள் இச்சித்ததுபோல நாமும் பொல்லாங்கானவைகளை இச்சியாதபடிக்கு, இவைகள் நமக்குத் திருஷ்டாந்தங்களாயிருக்கிறது. வ6

அவர்களில் சிலர் விக்கிரகாராதனைக்காரர் ஆனதுபோல நீங்களும் ஆகாதிருங்கள். வ7

அவர்களில் சிலர் வேசித்தனம்பண்ணி, ஒரேநாளில் இருபத்துமூவாயிரம்பேர் விழுந்துபோனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம்பண்ணாதிருப்போமாக. வ8

அவர்களில் சிலர் கிறிஸ்துவைப் பரீட்சைப்பார்த்து, பாம்புகளால் அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நாமும் கிறிஸ்துவைப் பரீட்சைபாராதிருப்போமாக. வ9

அவர்களில் சிலர் முறுமுறுத்து, சங்காரக்காரனாலே அழிக்கப்பட்டார்கள்; அதுபோல நீங்களும் முறுமுறுக்காதிருங்கள். வ10

இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது. வ11.

கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவை தலையாக கொண்டுள்ளனர் – எபே 1:23, கொலோ 1:18

அவருடைய சரீரமாக கிறிஸ்தவர்களாகிய நாமனைவரும் இருப்பதால் – தலை சொல்வதை *மாத்திரம்* கேட்க கடமைபட்டிருக்கிறோம் – கொலோ 2:18-19

சொந்த யோசனையும் சொந்த பிரியத்தையும் சொந்த அபிப்ராயத்தையும் நுழைத்து தொழுகையில் செய்து கொண்டிருக்கிற கூத்துகள் தேவனுக்கு விரோதமானவை – அவரை பரீட்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

விக்கிரகத்தை வணங்குபவர்கள் மணியடித்து வேண்டிக்கொள்கிறார்கள்.
ஆனால் ஜீவனுள்ள தேவனை தொழுது கொள்கிறோம் என்று சொல்லிக்கொண்டு கைகளை தட்டிக்கொண்டே ஜெபிக்கும் பழக்கத்தை கிறிஸ்தவ மதத்தினர் இப்போது பழகி கடைபிடிப்பது எவ்வளவு பொிய அபத்தம்?

பயமும் நடுக்கமும் அவரை தொழுது கொள்ளும்போது எங்கே போனது? எபி 12:28

தேவன் தண்டிக்கவில்லை என்பதால் அங்கீகரிக்கிறார் என்பதல்ல மாறாக கிருபை விலகி செல்லும்முன், கடைபிடித்துக்கொண்டிருக்கும் அவலங்களை விட்டு (பாவத்தை விட்டு) மனந்திரும்ப வேண்டும் – ரோ 6:1

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக