#762 - *மனந்திரும்ப அவசியம் இல்லாதவர்கள் எப்படி நீதிமான் ஆவார்கள்?*
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:7 -
அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்துச் சந்தோஷம் உண்டாகிறதைப்பார்க்கிலும் மனந்திரும்புகிற ஒரேபாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். லூக்கா 15:7 -
*பதில்*
மனந்திரும்ப
அவசியமில்லாதவர்கள் என்ற வார்த்தையை நாம் எதிர்மறையாக பார்ப்பதால் அதன் அர்த்தம்
மாறி பார்க்கிறோம்.
உண்மையில்
அந்த வசனம் சொல்லும் விதத்தை நன்கு கவனிக்கவும். வேறொரு மொழி பெயர்ப்பில்
இப்படியாக வருகிறது :
“அவ்வாறே, ஒரு பாவி
மனந்திருந்தி தனது வாழ்வை மாற்றிக்கொள்ளும்போது பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம்
உண்டாகும் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். தங்கள் இதயத்தை மாற்றத்
தேவையில்லாத தொண்ணூற்று ஒன்பது நல்ல மனிதருக்காக ஏற்படும் சந்தோஷத்தைக் காட்டிலும்
அந்த ஒரு பாவிக்காக ஏற்படும் சந்தோஷம் அதிகமாக இருக்கும்” லூக்கா
15:7
அந்த
99 போ் மனந்திரும்ப வேண்டியதில்லை என்கிறார் – அதாவது அவர்கள் ஏற்கனவே நீதிமான்களாக
இருப்பதால் மனந்திரும்ப வேண்டியதில்லை என் வசனம் சொல்கிறது.
வேர்க்க
விறுவிறுக்க ஊர் ஊராக கஷ்டத்தோடு பணம் செலவு செய்து பத்திரிக்கை அடித்து வீடு வீடாக
போய் திருமணத்திற்கு அழைத்த விருந்தினர் உள்ளே திருமண வீட்டில் இருந்தாலும் மாப்பிள்ளையோ
மணப்பெண்னோ உள்ளே வரும்போது இருக்கும் சந்தோஷம் எப்படியிருக்குமோ அதைவிட பலஆயிரமடங்கு
ஒரே ஒரு ஆத்துமா இரட்சிக்கப்பட்டாலும் பரலோகம் களிகூறுகிறது என்கிறார்.
ஒரே
ஒரு ஆத்துமா தானே என்று சாதாரணமாக எடுக்காதபடிக்கு ஒரு ஆத்துமா
இரட்சிக்கப்பட்டாலும் பரலோகம் களிகூறுகிறது என்கிற முக்கியத்துவத்தை இங்கே காண்கிறோம்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக