திங்கள், 10 பிப்ரவரி, 2020

#753 - தலையில் கை வைத்து ஜெபிக்கலாமா?

#753 - *தலையில் கை வைத்து ஜெபிக்கலாமா?*

*பதில்*
தலையில் கை வைப்பதை குறித்து எபிரேயரில் காண முடிகிறது.

எபி. 6:1-3 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேசவசனங்களை நாம்விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம்,  ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்து போவோமாக. தேவனுக்குச் சித்தமானால் இப்படியே செய்வோம்.

முதலில், இந்த வசனத்தில் என்ன சொல்லப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்வோம்.

மக்கள் கீழே விழுவதையோ அல்லது ஒரு நோயால் குணப்படுத்தப்படுவதையோ இது குறிப்பிடவில்லை.

இது கைகளை வைப்பதின் போதனைகளைப் பற்றி பேசுகிறது, ஆனால் எவ்வாறு இந்த போதனை என்றும் பட்டியலிடப்பட்ட மற்றவையும் வேதத்தில் வரையறுக்கப்படவில்லை. மாறாக இப்படிப்பட்ட தலைப்புகளின் பெயர்கள் மட்டுமே உள்ளன. எப்படியிருந்தாலும் அவைகள் அடிப்படை போதனைகள் (அஸ்திபாரம்) என்றே கூறப்படுகிறது.

"கைகளை வைப்பது" என்றால் என்ன என்பதைக் கண்டுபிடிக்க, நடைமுறையில் வேறு குறிப்புகளைக் கவனிக்க வேண்டியுள்ளது.

*வேதாகம நாட்களில்:*
ஒரு நபரின் மீது கை வைப்பது என்றால் அந்த நபரை நீங்கள் அங்கீகரித்தற்கான ஒப்புதலைக் குறிக்கும் ஒரு செயல்.

எப்படியென்றால் யாக்கோபு தனது பேரப்பிள்ளைகளை ஆசீர்வதித்தபோது, ​​அவர்கள் தலையில் கை வைத்தார் (ஆதியாகமம் 48:14).

மோசேயின் நாட்களிலும் அதை பார்க்கிறோம்.

"சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும்." லேவியராகமம் 4:15.

சபையின் மூப்பர் கர்த்தருடைய சந்நிதியில் தங்கள் கைகளை அதின் தலைமேல் வைக்கக்கடவர்கள்; பின்பு கர்த்தருடைய சந்நிதியில் அந்தக் காளையைக் கொல்லவேண்டும். லேவியராகமம் 8:18; 16:21; எண். 8:12.

தேவனை தூஷிக்கும் எவரையும் நியாயபிரமாணத்தின்படி ​​சாட்சிகள் கல்லெறிந்து கொல்வதற்கு முன்பு தலையில் கை வைக்க வேண்டியிருந்தது - லேவியராகமம் 24: 11-14.  அவர் செய்த பாவத்திற்காக அவர் பெற்ற மரண தண்டனைக்கு சாட்சிகளின் ஒப்புதல் இந்த நடவடிக்கை காட்டியது.

ஒரு நபர் ஒரு குறிப்பிட்ட பொறுப்பிற்காக நியமிக்கப்பட்டபோது, ​​ஜனங்கள் தங்கள் ஒப்புதலைக் காட்டும்படி தலையில் கைகளை வைத்தார்கள். எண். 8:9-11.

யோசுவாவிற்கும் அதே சம்பவம் நடந்தது. எண். 27:22-23; உபா. 34:9

சவுலும் பர்னபாவும் அனுப்பப்பட்டபோது இதேபோன்ற நிகழ்வு நடந்தது. அப். 13:2-3.

குழந்தைகளின் மீது கை வைத்து இயேசு கிறிஸ்து அவர்களை ஆசீர்வதித்தார். மத். 19:13-15.

(பழைய முறைகளை) வேதவசனங்களைப்  பற்றிய அறிவு தீமோத்தேயுவிற்கு இருந்ததால் இந்த பழக்கத்தை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டதால் “ஜனங்கள் மீது கை வைக்க அவசரப்பட வேண்டாம்” என்று தீமோத்தேயு எச்சரிக்கப்பட்டார்.  1 தீமோ. 5:22

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு ஊழியனான தீமோத்தேயுவுக்கு மூப்பர்களை நியமிக்க வேண்டிய கடமை இருந்தது (தீத்து 1:5). ஆனால் அப்படிப்பட்டவர்களை நியமிப்பதற்காக இந்த செயல்முறையை தீவிரப்படுத்தவில்லை / அவசரப்படுத்தவில்லை.

அப்போஸ்தலர்களின் அடையாளங்களில் ஒன்று பரிசுத்த ஆவியின் வரங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது.

அப்போஸ்தலர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்தவர்கள் மீது கை வைப்பதன் மூலம் இது செய்யப்பட்டது. அப். 8:17-19.

இந்த வல்லமையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று பணத்தால் முயற்சி செய்த சீமோன் கண்டிக்கப்பட்டார். அப். 8:18-20

பவுல் அப்போஸ்தலரின் அடையாளத்தை இந்த முறையில் வெளிப்படுத்தினார். அப் 19:6, 2 தீமோ. 1:6,

அதை சபை மூப்பர்கள் கவனித்து அறிந்திருந்தார்கள் - 1 தீமோ. 4:14

எங்குமே பரிசுத்த ஆவியானவரின் ஈவுகளை பெறுபவர்கள் கீழே விழுந்ததாக குறிப்பிடவில்லை.

ஜனங்களை குணப்படுத்த பல்வேறு வழிகள் பயன்படுத்தப்பட்டன.  

குறிப்பாக இயேசு கிறிஸ்து மக்கள் மீது கை வைத்தபோது குணமடைந்தார்கள் (மாற்கு 6:5; 16:18; லூக்கா 4:40; 13:13; அப். 9:17; 28:8.
கைகளை வைக்கும் செயல் இன்னும் அதே பொருளை கொண்டிருப்பதை கவனிக்க வேண்டும்.

மற்றொருவர் குணமடைய விரும்பும் நபரின் ஒப்புதலை இது காட்டுகிறது.

ஆனால் ஜனங்கள் எப்போதும் எங்கும் கீழே விழுவில்லை !!  அதற்கு பதிலாக உடனடி குணமடைந்தார்கள்.

*கைகளை தலையில் வைக்கும் போது*:
அவர்களை அங்கீகரிப்பதை காண்பிக்கிறது.
அவர்களுக்கு உடன்படுவதை காண்பிக்கிறது.
குணப்படுத்துவதை காண்பிக்கிறது.
பரிசுத்த ஆவியானவரின் ஈவை கொடுத்ததை காண்பிக்கிறது.

ஒருவர் மீது கை வைக்கும் போது இவைகளில் எது நிறைவேறுகிறது என்று கவனியுங்கள் – இல்லையென்றால் சீக்கிரமாக யார் தலையிலும் கை வைக்காமல் இருப்பது அவரவருக்கு நல்லது !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக