திங்கள், 10 பிப்ரவரி, 2020

#752 - ஒரே மனிதனால் பாவம் அனைவருக்கும் வந்திருக்க, இரட்சிப்பு மாத்திரம் ஏன் அனைவரது மீதும் தானாக வரவில்லை? இரட்சிக்கப்பட விசுவாசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எதற்கு?

#752 - *ஒரே மனிதனால் பாவம் அனைவருக்கும் வந்திருக்க, இரட்சிப்பு மாத்திரம் ஏன் அனைவரது மீதும் தானாக வரவில்லை?* இரட்சிக்கப்பட விசுவாசிக்க வேண்டும் என்ற நிபந்தனை எதற்கு?

*பதில்*
ரோமர் 5ம் அதிகாரம் வசனங்கள் 12 முதல் 21 வரை இந்த பகுதியை நாம் வேதத்தில் காண முடியும்.

மீறுதலின் பலன் கிருபை வரத்தின் பலனுக்கு ஒப்பானதல்ல. எப்படியெனில், ஒருவனுடைய மீறுதலினாலே அநேகர் மரித்திருக்க, தேவனுடைய கிருபையும் இயேசுகிறிஸ்து என்னும் ஒரே மனுஷனுடைய கிருபையினாலே வரும் ஈவும் அநேகர்மேல் அதிகமாய்ப் பெருகியிருக்கிறது. ரோ. 5:15

மேலும் ஒருவன் பாவஞ்செய்ததினால் உண்டான தீர்ப்பு தேவன் அருளும் ஈவுக்கு ஒப்பானதல்ல; அந்தத் தீர்ப்பு ஒரே குற்றத்தினிமித்தம் ஆக்கினைக்கு ஏதுவாயிருந்தது; கிருபைவரமோ அநேக குற்றங்களை நீக்கி நீதிவிளங்கும் தீர்ப்புக்கு ஏதுவாயிருக்கிறது. ரோ. 5:16

ஒரே மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானதுபோல, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. ரோ. 5:18

தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பாவத்தின் நிமித்தம் பொிய பிளவு / பிரிவு இருந்தது. ஏசா. 59:2

இந்த பிரிவை சரி செய்ய / ஒப்புரவாக்க பரிசுத்தமுள்ள ஒருவர் நடுநிலையாக மனிதனை தேடி வர வேண்டியிருந்தது – எபி. 9:15, ஏசா. 57:19

தேவன் தம்முடைய சொந்த குமாரனை இந்த உலகத்திற்கு அதன் காரணமாகவே அனுப்பி வைத்தார் – யோ. 3:15-17

நன்மை தீமை அறிந்து தீமையை பின்பற்றினவர்கள் (பாவம் செய்து தேவ மகிமையை/பிரசன்னத்தை இழந்தவர்கள்) தேவனை சேரும் வண்ணம் – அதற்கான வழியை இயேசுவின் மூலம் பிதாவானவர் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் – யோ. 14:6

யாரையும் வலுக்கட்டாயமாக தன் பக்கம் இழுத்து ஒரு பொம்மையை போல அல்லது இயந்திரத்தை போல நாம் அவரை பின்பற்றாமல் – முழு இருதயத்தோடும் முழு மனதோடும் அவரை அறிந்து உணர்ந்து புரிந்து ஏற்றுக்கொள்ளும் போது பிசாசின் தந்திரங்களுக்கு தைரியமாகவும் முழுமையாகவும் நாம் எதிர்த்து நிற்க முடியும் – மாற்கு 12:33.

இயேசுவை கிறிஸ்து என்று அறிந்து புரிந்து நேரடியாக தொட்டு பழகி பார்த்ததின் விளைவு – அப்போஸ்தலர்கள் சரீரத்தை கொல்லுகிறவர்களுக்கு எதிர்த்து நின்றதுமல்லாமல் அவர்களை பொருட்படுத்தாமலும் இருந்தார்கள். 1யோ. 1:1, அப். 4:18-19

உதாரணத்திற்கு நாம் பெற்ற பிள்ளையை ஒருவர் தன்னுடைய பிள்ளை என்று ஒரு ஆதாரத்தை வைத்து உரிமை கொண்டாடினால் – அவரை எதிர் கொள்ளும் தைரியமும் பெலனும் உங்களுக்கு எவ்வளவு அதிகமாக இருக்கும் என்பதை நிதானித்து பாருங்கள்?

இயேசு கிறிஸ்து உலகத்தில் உள்ள அனைத்து மக்களின் பாவத்திற்காக மரித்து பாவமன்னிப்பின் ஏற்பாட்டை செய்து வைத்தார் – யோ. 6:51

அவரை ஏற்றுக்கொண்டு அவர் கட்டளைக்கு ஞானஸ்நானத்தில் கீழ்படியும்போது இரட்சிப்பு நமக்கு ஏதுவாகிறது – அப். 2:47.

கிறிஸ்துவின் வார்த்தையில் நிலைத்து நின்றால் – இயேசு நமக்கு பெற்று தந்த இரட்சிப்பை ஆதாயப்படுத்திக்கொள்கிறோம் – மாற்கு 13:13

பாவம் செய்த பின் அந்த பாவ சரீரத்தில் மரணம் வந்தது – ரோ. 5:17

அந்த சரீரத்தின் மூலமாக பிறக்கும் நாம் அனைவரது சரீரமும் மரணத்தின் பின்பு மண்ணுக்கு திரும்பிவிடுகிறது. ஆதி. 3:19

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஆத்துமாவோ – இரட்சிப்பை சுதந்தரித்துக்கொள்கிறது !!

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Book ஆர்டர் செய்ய* :
https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

வலைதளம் :
http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக