*பதில்*
நீங்கள் குறிப்பிடும் வசனம் யோ. 3:5ல்
பார்க்கிறோம்.
இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன்
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்திலே பிரவேசிக்கமாட்டான்
என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். யோ. 3:5
இங்கே “ஜலம்” என்பதன் மூலம்
“ஞானஸ்நானம்” என்று குறிக்கப்படுகிறது.
இவ்வாறே இந்த வார்த்தை எபே. 5:26;
தீத்து 3:5லிரும் வருகிறது.
மாற்கு 16:16ல் “விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்” என்றார்.
இந்த வசனங்களிலிருந்தும்,
அப்போஸ்தலர்களின் உதாரணத்திலிருந்தும் இது தெளிவாகிறது. அப். 2:38,
அப். 2:41; அப். 8:12-13, அப்.
8:36, அப். 8:38; அப் 9:18; அப் 10:47-48; அப் 16:15, அப் 16:33;
அப் 18:8; அப் 22:16; கலா
3:27.
சந்தேகத்திற்கு இடமின்றி,
இயேசு தம்முடைய சபைக்குள் சேர்க்கப்படுவதற்கான சீரான வழி இது என்பதை
உறுதிப்படுத்துவதாக புரிந்து கொள்கிறோம்.
இவ்வளவாக ஊர்ஜீதப்படுத்தப்பட்டிருந்தும்
ஞானஸ்நானம் அவசியமில்லை என்று வாதாடுபவர்களும் அநேகர் உண்டு. இப்படியாக தேவனுடைய வேறு
எந்த கட்டளையும் புறக்கணிக்கப்படலாம் அல்லது மீறப்படலாம் என்பதும் தெளிவாகிறது.
தண்ணீரில் வெறுமனே முழுகி எழுந்துவிட்டால்
போதுமானது என்று நினைத்து விட ஏதுவல்லாமல் அந்த மூழ்குதல் ஆவியினால் நடக்க (பிறக்க)
வேண்டியதும் அவசியமாகிறது.
பரிசுத்த ஆவியின் உதவியால் இருதயம் மாற்றப்பட
(புதியதாக பிறக்க) வேண்டும்.
பாவத்தின் மீது உள்ள பற்று கைவிடப்பட
வேண்டும். குற்றத்தின் உணர்ந்து
மனந்திரும்பி தேவனிடம் திரும்ப வேண்டும்.
தவறான செயல்களை கைவிட்டு மனந்திரும்ப
வேண்டும்.
ஜெபம்,
பரிசுத்தம், சாந்தம், தூய்மை
மற்றும் கிருபை நிறைந்த வாழ்க்கைக்கு தன்னைக் ஒப்புக் கொடுக்க வேண்டும்.
இந்த பெரிய மாற்றம் பரிசுத்த
ஆவியானவரின் மூலமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது என்று வசனத்தின் மூலம் அறிகிறோம். தீத்து 3:5;
1தெச 1:6; ரோ 5:5; 1பேது
1:22.
ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறப்பது
என்பது
வசனத்தை விசுவாசித்து மனந்திரும்பி
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெறும் போது இந்த இரண்டும் பூர்த்தி
செய்யப்படுகிறது.
இதன் மூலம் தண்ணீர் ஞானஸ்நானம் எடுக்க
வேண்டிய அவசியத்தை வேதம் தெளிவு படுத்துகிறது.
*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக