சனி, 8 பிப்ரவரி, 2020

#750 - குழந்தை ஞானஸ்நானம் தவறா, சரியானதா?

#750 - *குழந்தை ஞானஸ்நானம் தவறா,  சரியானதா?* விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான் இது தான் உண்மை. எனது கேள்வி குழந்தை ஞானஸ்நானம் தவறா,  சரியானதா? பிறந்து 30 நாள் குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது, ஏன் குழந்தை ஞானஸ்நானம் சபையில் அனுமதிக்கப்பட்டுள்ளது- விளக்கம் தாங்க பிரதர் நன்றி.

*பதில்*
ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதற்கு வேண்டிய தகுதிகள் என்ன என்பதை அறிந்தாலே இதற்கான விடையை இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.

1-வசனத்தை கேட்க வேண்டும் ரோ. 10:17, யோ. 8:32
2-விசுவாசிக்க வேண்டும் எபி. 11:6, யோ. 20:31
3-பாவத்தை விட்டு மனந்திரும்ப வேண்டும் லூக்கா 13:3, அப். 17:30
4-பாவத்தை அல்ல விசுவாசத்தை அறிக்கையிட வேண்டும் ரோ. 10:10, மத். 10:32
5-பின்பு முழுகி ஞானஸ்நானம் பெற வேண்டும் கலா. 3:27, அப். 2:38

மேலே சொன்ன 5 படிகளையும் எந்த குழந்தையும் பூர்த்திசெய்ய முடியாது.

*மேலும் குழந்தைக்கு* :
ஞானஸ்நானம் கொடுத்ததாகவோ
கொடுக்கவேண்டும் என்றோ
கொடுக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவோ வேதத்தில் இல்லை.

வேதத்தில் சொல்லாததை செய்வது பாவம் – 1யோ. 3:4, 1யோ. 5:17

கிறிஸ்தவத்தை மதமாக்கினதும் குழந்தை ஞானஸ்நானத்தை அறிமுகபடுத்தியதும் கத்தோலிக்கர்கள்.

வேதத்தில் இதற்கு இடமில்லை.

கிறிஸ்தவ மார்க்க சபையில் கிறிஸ்து சொல்லாத எந்த கட்டளைக்கும் இடமில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com

----*----*----*----*----*-----
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக