வெள்ளி, 17 ஜனவரி, 2020

#719 - கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளானேன், என்று, அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறாரே ! இந்த கர்த்தருடைய நாள் என்பது, எந்த நாள்?? வாரத்தின் முதலாம் நாளா?? இல்லை அவர் ஆவிக்குள்ளான நாளை "கர்த்தருடைய நாள் என்கிறாரா?? ".

#719 - *கர்த்தருடைய நாளில் நான் ஆவிக்குள்ளானேன், என்று, அப்போஸ்தலனாகிய யோவான் கூறுகிறாரே* ! இந்த கர்த்தருடைய நாள் என்பது, எந்த நாள்?? வாரத்தின் முதலாம் நாளா??  இல்லை அவர் ஆவிக்குள்ளான நாளை "கர்த்தருடைய நாள் என்கிறாரா?? ".

*பதில்*
கர்த்தருடைய நாள் என்ற சொல் வெளிப்படுத்துதல் 1: 10 ல் மட்டுமே பார்க்க முடியும்.

ஆனால் இந்த கர்த்தருடைய நாள் வாரத்தின் எந்த நாளை குறிக்கிறது என்று நாம் கணிக்க கூடிய சூழல் இந்த வாக்கியத்தில் சாத்தியமில்லை என்றே நான் எண்ணுகிறேன்.

இருந்தபோதிலும் "கர்த்தருடைய நாள்" என்ற இலக்கண சமமான சொற்றொடர் 23 முறை வேதத்தில் பார்க்கலாம்.

கர்த்தருடைய நாள், சூழலைப் பொறுத்து வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுள்ளது. சில எடுத்துக்காட்டுகள்:

ஏசாயா 13:6 " அலறுங்கள், கர்த்தரின் நாள் சமீபமாயிருக்கிறது; அது சர்வவல்லவரிடத்திலிருந்து மகா சங்காரமாய் வரும்." இந்த பயன்பாட்டில், கர்த்தருடைய நாள் என்பது பாபிலோனியர்கள் மீது கர்த்தர் நியாயத்தீர்ப்பின் நேரத்தைக் குறிக்கிறது. கிமு 539 இல் பாபிலோனியர்கள் வீழ்ந்தனர்.

எசேக்கியேல் 13:5 "நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை." இங்கே அதே சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் இது வேறு நேரத்தைக் குறிக்கிறது. இந்த முறை கிமு 586 இல் நிகழ்ந்த பாபிலோனியர்களால் எருசலேமின் வீழ்ச்சியைக் குறிக்கிறது.

யோவேல் 2:28-31 "அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள். ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன். வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன். கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்."

மேலோட்டமாக யோவேலின் இந்த வசனங்கள் எசேக்கியேலின் வார்த்தைகளுக்கு இணையாகத் தோன்றினாலும் அப்போஸ்தலர் 2: 17-21-ல் உள்ள இந்த வசனங்களை பேதுரு மேற்கோள் காட்டி, முதல் பிரசங்கம் பிரசங்கிக்கும் பெந்தெகோஸ்தே நாளான அந்த நாளில் அவை நிறைவேறியதாகக் கூறுகிறார்.

ஆகவே, இந்த "கர்த்தருடைய நாள்" என்பது சிலுவையில் இயேசு இறந்த நேரத்தையும் அவருடைய சபையின் தொடக்கத்தையும் குறிக்கிறது.

1 தெசலோனிக்கேயர் 5: 1-2 " சகோதரரே, இவைகள் நடக்குங்காலங்களையும் சமயங்களையுங்குறித்து உங்களுக்கு எழுதவேண்டுவதில்லை. இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வருமென்று நீங்களே நன்றாய் அறிந்திருக்கிறீர்கள்."

இந்த முறை பவுல் உலக முடிவின் நேரத்தைக் குறிக்க கர்த்தருடைய நாள் என்று பயன்படுத்துகிறார்.

நான்கு சுவிசேஷ புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்ட முதல் நாளில் இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்பட்டார். அப்போஸ்தலர் 20: 7, "வாரத்தின் முதல் நாளில் அப்பம் பிட்கும்படி கூடினார்கள்.

வெளி 1:10ல் அப்.யோவான் குறிப்பிட்ட கர்த்தருடைய நாள் வாரத்தின் முதல் நாள் அல்லது ஞாயிற்றுக்கிழமை என்று ஊர்ஜீதமாக சொல்வதற்கு ஆதாரம் இல்லையென்றாலும்  ஞாயிற்றுக்கிழமையை கர்த்தருடைய நாளாக அநுசரிப்பதற்கு உள்ள அதிகமான / பூரணமான காரணங்களை கவனிக்கவும்:

1-இயேசு கிறிஸ்து  உயிர்தெழுந்த நாள் மாற்கு 16:9

2-உயிர்தெழுந்த பின் பரமேரும் முன்னர் 6 முறை தரிசனமான நாட்கள். மாற்கு16:9; மத்தேயு 28:5-9; லூக். 24:34; 24:13-15; 33,36, யோ. 20:19; 26

3-இயேசுவின் மரணத்துக்கும் பரமேரும் நாளுக்கும் இடைப்பட்ட காலங்களில் சீஷர்கள் கூடினது. யோ. 20:19, 26, அப். 2:1

4- சபை ஸ்தாபிக்கப்பட்டது அப் 2:1

5- பரிசுத்த ஆவியானவர் இறங்கின நாள் அப். 20:1-4

6-அப்பம் பிட்கும்படி கூடினார்கள் அப். 20:7

7- காணிக்கை சேர்க்கும்படி கூடினார்கள். 1கொரி. 16:1-3

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக