*பதில்*
அநேக
காரணங்களை பட்டியலிட முடியும் :
விசுவாசம்
என்றால் என்ன என்று விவரிக்க கூட தொியாத விசுவாச குறைச்சல். அப். 8:37
கிறிஸ்தவம்
என்ற பெயரில் பெருகி கிறிஸ்துவை விட்டுப் பிரிந்து போன கிறிஸ்தவ மதங்கள். கலா. 1:8
இயேசு
கிறிஸ்துவே நிறுவனராக / அஸ்திபாரமாக இருக்க –அநேகர் தங்களை Founder / நிறுவனர்
என்று வெளியரங்கமாக சொன்னாலும் அவர்களின் கொள்கைகளை பின்பற்றுதல். எபி. 6:2, 1கொரி. 3:11
சபை
என்ற பெயரில் கம்பெனிகளாக பெருகி போனது. கொலோ. 1:24, எபே. 4:4, எபே. 5:30, 1கொரி. 12:27
கிறிஸ்துவை
தலையாக கொள்ளாமல் அவரவர் சபைக்கு தனிதனியாக தலைவர்கள் வந்தாயிற்று. எபே. 5:23
எழுப்புதல்
என்கிற பெயரில் –
ஆட்டங்களும் கூத்துகளும் கருவிகளும் எழுப்பிவிடப்பட்டுள்ளது. மல்கியா 1:6
ஆவியானவர்
/ தீர்க்கதரிசனம் என்ற பெயரில் –
ஜோசியங்கள் பெருகி போனதன் விளைவு. உபா 13:1-3
முழு
சுவிசேஷத்தை சொல்கிறோம் என்று –
சுவிசேஷத்திற்கே (அடிப்படைக்கே) கீழ்படியாத நடத்துனர்கள். 1கொரி. 15:1-4
கர்த்தருடைய
பந்தியில் கலந்து கொண்டாலும் இன்னும் நியாயபிரமாணத்தை லாபத்திற்காக கையில் வைத்திருக்கும்
முதலாளிகள். 1கொரி. 11:25
யாரிடத்தில்
ஜெபிக்கிறோம் என்று தெரியாமல் இயேசுவே ஆவியானவரே கர்த்தாவே பிதாவே தேவனே ஆண்டவரே
என்று கதறி கடைசியில் இயேசுவின் மூலம் ஜெபிக்கிறோம் பிதாவே என்று முடிக்கும்
நிலைமையில் உள்ள பிரசங்கியாளர்கள். யாக். 3:1, யோ.
14:6
கர்த்தருடைய
பந்தியை தவிர வேறு எதையும் கடைபிடிக்காத முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை பின்பற்றாமல்
வேற்று மதத்தினரைப்போலவே அநேக பண்டிகைகள் கொண்டாடப்படுவது. லூக்கா 22:19, எரே. 10:2
வாரத்தின்
முதல் நாளின் முக்கியத்தை உணராமல் தங்களுக்கு இஷ்டமான நாளை பிரத்யேகப்படுத்திக்கொண்டது
– அப். 20:7, 1கொரி. 16:1-3, அப். 2
எப்படி
தண்ணீர் கலக்கப்பட்ட பாலில் தயிர் உறைந்தால் நீர்த்துப்போன தயிர் கிடைக்கிறதோ – அப்படியே மனித கோட்பாடுகளினுள்
இரட்சிப்பு என்பது குறைந்து போனது.
ஆனால்
இன்றும் 1இரா 19:18ன் உதாரணத்தின்படி முதல் நூற்றாண்டு கிறிஸ்தவத்தை பின்பற்றுகிற
ஏராளமான கிறிஸ்தவர்கள் உண்மையாய் தேவனை முறையாக பற்றிக்கொண்டு தான் இருக்கிறார்கள்.
கோதுமையோடு
களைகளும் கடைசிவரை இருந்து கொண்டு தான் இருக்கும். நமக்கு கிடைக்கும் போஷாக்குகளை கூடவே
இருந்து களைகளும் லாபமடையத்தான் செய்யும். அவைகளை கண்டுகொள்ளாமல் கோதுமை மணியாக நாம்
*சத்தியத்தை அப்படியே* பற்றிக்கொண்டு வளருவது அவசியம். அதை அறுப்பின் நாளில் தேவன்
பார்த்துக்கொள்வார். மத். 13:28-29.
தேவ
வார்த்தையை *விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம்
பெற்று* கர்த்தரை தலையாக கொண்டிருக்கும் சபையில் கர்த்தருடைய நாளில் தேவனை ஆராதித்து
வாரத்தின் முதல் நாள் தோறும் நம் இரட்சகருடைய மரணத்தை நினைவுகூர்ந்து சகலவிதமான
அன்போடும் சத்தியத்திற்கு செவி சாய்த்து நிலைத்து நின்றால் – முடியும் வரை நம்
இரட்சிப்பை காத்துக்கொள்ளலாம்.
இடுக்கமான
வாசலில் நாம் பிரயாணிக்க வேண்டியது அவசியம். மத். 7:13
பெரும்பான்மையை
நம்பி உண்மையை/சத்தியத்தை தொலைத்து விடவேண்டாம். ரோ. 9:33
கொடுக்கப்பட்டுள்ள
குறிப்பு வசனங்களை வேதத்தில் வாசிக்கவும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் அதற்கான வேதாக பதில்களும் பகிரப்படும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்:
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
எமது வலைதளம்
http://www.kaniyakulamcoc.wordpress.com
----*----*----*----*----*-----
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக