வெள்ளி, 17 ஜனவரி, 2020

#717 - கர்த்தருடைய பந்தியில் பதப்படுத்தப் பட்ட Grapes Juice use பண்ணலாமா? அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்று வேதத்தில் இருக்க தற்போது அநேக கிறிஸ்துவின் சபையில் அப்பத்தை மேசையில் வைத்து விட்டு மேடையில் நின்று ஜெபிக்கிறது சரியா?

#717 - *கர்த்தருடைய பந்தியில் பதப்படுத்தப் பட்ட Grapes Juice use பண்ணலாமா?* அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்று வேதத்தில் இருக்க தற்போது அநேக கிறிஸ்துவின் சபையில் அப்பத்தை மேசையில்  வைத்து விட்டு மேடையில்  நின்று ஜெபிக்கிறது சரியா?

*பதில்*
திராட்சை ரசமோ அப்பமோ புளிப்பில்லாதிருப்பது அவசியம். 1கொரி. 5:7-8, லேவி. 8:2

பதப்படுத்தப்பட்ட திராட்சை ரசம் புளிப்புள்ளதா என்பதை உபயோகப்படுத்தும்போது சோதித்துப்பார்த்தல் அவசியம்.

இங்கு அநேக கம்பெனிகளிலிருந்து ஃப்ரெஷ் திராட்சை பழ ரசம் என்று கடைகளில் விற்றாலும் 100சதவீதம் ஃப்ரெஷ் என்று விற்றாலும் நான் பழத்தை வாங்கி கர்த்தருடைய பந்தியை தயாரிப்பதே வழக்கம். தேவனுக்கென்று அந்த சிரமத்தை நான் எடுத்துக்கொள்வதை பாக்கியமாக எண்ணுகிறேன் 2சாமு. 24:24

நிச்சயமாக கடையில் விற்கும் வேஃபர் என்று சொல்லப்படுகிற வட்ட வடிவில் இருக்கும் தயாராக விற்கபடும் அப்பத்தையோ கடையில் விற்கப்படும் பன் அல்லது ரொட்டியையோ கர்த்தருடைய பந்திக்கு உபயோகப்படுத்த முடியாது அவை புளிப்பு ஏற்றப்பட்டவை !!

இரண்டாவதாக நீங்கள் கேட்ட கேள்வி அப்பத்தை எடுத்து ஸ்தோத்திரம் பண்ணி என்று இருக்க மேஜையை பார்த்து ஜெபிப்பது சரியா என்று?

வேதத்தில் உள்ள உதாரணங்களை அர்த்தம் மாறாமல் அதன் பொருட்பட எடுக்க கற்றுக்கொள்வது அவசியமாக இருக்கிறது.

உதாரணமாக தேவாலயத்திற்கு இயேசு கழுதையில் சென்றார் என்றால் கழுதையின் மீது போவார் என்ற தீர்க்கதரிசனம் ஒரு பக்கம் இருந்தாலும் அங்கு போனது தான் முக்கியத்துவமேயன்றி கழுதையின் மீது ஏறி போக வேண்டும் என்பது முக்கியமல்ல.

யோர்தானில் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டது என்றால் ஞானஸ்நானம் எடுக்கவேண்டியது முக்கியபடுகிறது. யோர்தானில் போய் எடுக்க வேண்டும் என்றோ ஓடும் தண்ணீரில் எடுக்க வேண்டும் என்றோ முக்கியமல்ல.

அது போல அப்பத்திற்காக ஜெபிக்க வேண்டியது முக்கியம் கையில் எடுத்துக்கொண்டு தான் ஜெபிக்க வேண்டும் என்பதை நாம் முக்கியப்படுத்த வேண்டிய அவசியமில்லை. *அதைப்பிட்டு* என்றும் *இந்த பாத்திரம்* என்றும் குறிப்பிட்டு வசனங்கள் (1கொரி. 11:24-25) வருகிறதை ஒருவேளை சிலர் வலியுறுத்துனால் நாம் இயேசு பிட்ட அந்த அப்பத்திற்கும் இயேசு உபயோகப்படுத்தின அந்த பாத்திரத்திற்கும் எங்கே போவது? அந்த பாத்திரம் என்பது என் இரத்தத்தினாலாகியது என்று சொல்லப்பட்டதால் அதனுள் இருந்த ரசத்தையே குறிக்கிறது (1கொரி. 11:25)

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
    
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html

வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com

YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக