#711 - *காயீன் காணிக்கை அங்கிகரீக்கப்படாதது ஏன்?*
சிலநாள் சென்றபின், காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக்
காணிக்கையாகக் கொண்டுவந்தான். ஆதியாகமம் 4:3
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளில் கொழுமையானவைகளிலும்
சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர்
அங்கீகரித்தார். ஆதியாகமம் 4:4
*பதில்*
மோசே
பதிவுசெய்த வாக்கியங்களின்படி இங்கே நாம் காண்பது காயீன் மற்றும் ஆபேல் இருவரும்
கர்த்தருக்கு முன்பாக காணிக்கையை செலுத்த வந்தார்கள்.
இருவரும்
பலியைக் கொண்டு வந்தார்கள். ஆனால் ஒரு
வித்தியாசம் இருந்தது.
இரத்தம்
இல்லாத நிலத்தின் கனியின் பலியைக் காயீன் கொண்டுவந்தார். ஆபேல் இரத்த பலியை (கொழுமையானவற்றை)
கொண்டு வந்தார்.
அவர்கள்
பலியை கர்த்தருக்கு முன்பாக செலுத்தினதன் விளைவாக, தேவனானவர் ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும்
அங்கீகரித்தார். காயீனையோ அவரது காணிக்கையையே
அங்கீகரிக்கவில்லை.
*ஏன்
அப்படி நடந்திருக்கமுடியும்*?
ஏன்
என்பதை மோசேயின் பதிவிலேயே அந்த வேறுபாட்டை நாம் கண்டுகொள்ள முடியும்.
காயீனுடைய
காணிக்கை உற்பத்தி செய்யப்பட்டது,
ஆபேலுடையது இரத்தம் ஓடும்/தாங்கியிருக்கும் பலி.
காயீனின்
நிராகரிக்கப்பட்ட பலியைக் குறித்து புதிய ஏற்பாட்டில் எபிரேய எழுத்தாளர் இன்னும்
தெளிவுபடுத்துகிறார்:
"*விசுவாசத்தினாலே* ஆபேல்
காயீனுடைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன்
நீதிமானென்று சாட்சிபெற்றான்;
அவனுடைய காணிக்கைகளைக் குறித்து தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும்
இன்னும் பேசுகிறான்."
(11: 4) .
விசுவாசத்தினால்
ஆபேல் தனது பலியை கர்த்தருக்கு வழங்கினார் என்று பார்க்கிறோம்? காயீன்
விசுவாசத்தினால் பலி/காணிக்கை செலுத்தியதாக மோசே எழுதவில்லை.
காயீன்
விசுவாசத்தினாலே காணிக்கையை கொடுக்கவில்லை என்றால், விசுவாசத்திற்கு நேர்மாறானது தரிசித்து
செய்வது என்று 2 கொரி. 5:6ல் பார்க்கிறோம். அதாவது மனித உள்ளுணர்வு மூலம்.
காயீன்
“தன் விரும்பியபடி / எண்ணத்தின்படி / பார்த்ததன் அடிப்படையில்” தேவனுக்கு தான் செலுத்தும்
காணிக்கையை நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று எண்ணி தன் காணிக்கையை செலுத்தினார்.
அவர்
கொண்டுவந்த உற்பத்தி செய்த தானியங்கள் / நிலத்தின் கனிகள் பார்ப்பதற்கு அழகாக
இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. அறுவடை வரை அவர் அந்த பயிர்களுக்காக உழைத்தார்
என்பதில் சந்தேகமில்லை. அந்த காணிக்கைக்காக அவர் செலவிட்ட கடின உழைப்பு, நேரம் மற்றும்
கவனிப்பு அனைத்தும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று அவர் எதிர்பார்த்தார் என்பதிலும் சந்தேகமில்லை.
தேவன்
தன் காணிக்கையை அங்கீகரிக்காததன் விளைவாக காயீன் நடந்து கொண்ட முறையிலேயே அவர்
எவ்வளவாக தன் காணிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்ப்பார்த்தார் என்று
புரிகிறது.
காயீனின்
காணிக்கை ஆர்வத்துடன் செலுத்தப்படவில்லை என்பதால் நிராகரிக்கப்படவில்லை என்பதை நாம்
அறிய வேண்டும்.
விசுவாசத்தின்படி
காணிக்கை செலுத்தாததால் காணிக்கை நிராகரிக்கப்பட்டது.
விசுவாசம்
என்பது சொந்த நம்பிக்கையின் உணர்வு அல்ல. அப்படி தான் காயீனுக்கு இருந்தது.
ஆபேலின்
காணிக்கையோ விசுவாசத்தினால் இருந்தது என்று பார்க்கிறோம். எபி. 11:4.
விசுவாசம்
தேவனுடைய வார்த்தையைக் கேட்பதன் மூலம் வருகிறது (ரோமர் 10:17)
ஆகையால், ஆபேல் தேவனுடைய
வார்த்தையைக் கேட்டு கீழ்ப்படிந்து காணிக்கையை செலுத்தினார்.
கர்த்தருடைய
தெளிவான போதனையை புறக்கணித்து காயீனைப் போலவே, இரட்சிப்பின் விஷயங்களிலும் அநேகர்
தங்களுக்கு தோன்றினவற்றை மேடைகளில் பலியிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துவின்
போதனையை விட்டு தங்கள் சொந்த முறையை தங்களுக்குத் தானே கண்டுபிடித்தவர்கள்
காயீனின் மதத்தைப் பின்பற்றுகிறார்கள்.
1 யோவான் 3:12
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக