#710 - *தற்கொலையை தூண்டும் ஆவி எது?*
*பதில்*
தற்கொலை சம்பவங்கள் ஆறு இடத்தில் நாம் வேதத்தில் காண முடியும் (நியா. 16:29-30; 1 சாமு. 31:4; 1 சாமு. 31:5; 2 சாமு. 17:23; 1 இரா. 16:18; மத். 27:5) மற்றும் ஒரு சம்பவம் மற்றவர் உதவியோடு தற்கொலை செய்து கொண்டது (நியா. 9:53-54).
இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததற்கான பதிவுகளேயன்றி தற்கொலை சரியா தவறா என்பதை தெரிவிப்பதற்கல்ல.
தற்கொலை என்பது கொலை செய்வது தான். வித்தியாசம் என்ன வென்றால் இந்த தற்கொலை என்ற நிகழ்வில் கொலை செய்பவர் அவர் தாமே. தன் ஆத்துமாவை தானே கொலை செய்து கொள்கிறார். பாதிக்கப்பட்டவர் அவரே.
"தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்." (1 யோ. 3:15).
எனவே, இந்த பாதையில் செல்லும்போது பரலோகம் நுழைய முடியாது.
குற்றத்தை உணர்த்திக்கொண்டே இருப்பவன் சாத்தான். வெளி. 12:10, மத். 27:4
மனந்திருப்பிய பின் தேவன் ஒரு போதும் பழைய குற்றங்களை நினைவுபடுத்தமாட்டார் – மத். 26:34, யோ. 21:15
செய்த குற்றத்தை உணர்ந்து தேவனிடத்தில் மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது விடுதலை கிடைக்கிறது.
தற்கொலையை தூண்டுவது பிசாசு. செய்த தவறை நினைவு படுத்திக்கொண்டேயிருப்பான்.
செய்தது தவறு என்று உணர்ந்து - தேவனிடத்தில் திரும்ப வேண்டும். இல்லையென்றால் –இந்த வாழ்க்கையும் நித்திய வாழ்க்கையும் நரகத்தில் முடியும்.
தேவன் பாவிகளை நேசிக்கிறார் –எப்படிபட்ட பாவத்தையும் மன்னிக்கிறவர்.
பரலோக வாழ்க்கையை தருகிறவர். சந்தோஷமான நித்தியமான சமாதானமான வாழ்வை தேவனிடத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Book ஆர்டர் செய்ய* : https://kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
வலைதளம் : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக