திங்கள், 13 ஜனவரி, 2020

#709 - அன்பு திரளான பாவங்களை மூடும் – விளக்கவும்

#709 - *அன்பு திரளான பாவங்களை மூடும் – விளக்கவும்*
 
*பதில்*
நீதி. 10:12ம் இதே கருத்தை வலியுறுத்துகிறது.
 
தேவ கட்டளையை மீறும் போது, பலவீனமடைந்து சாத்தானின் வலையில் விழுகிறோம். அந்த உள்ளுணர்வு நிச்சயம் மனதில் தங்கியிருக்கும்.
 
ஆதாமும் ஏவாளும் பாவம் செய்தபின் ஒளிந்து கொண்டார்கள். ஆதி. 3:10
 
பத்சேபாளுடன் விபச்சாரம் செய்தபோது தாவீது உணர்ந்திருந்தார். சங். 51:3.
 
பவுல் தன் பழைய வாழ்க்கையை குறித்து வெட்கப்பட்டார். 1 கொரி. 15:9.
 
மரியாள் தன் நடத்தையில் தவறிவிட்டதாக யோசேப்பு நினைத்தார். ஆனாலும், மரியாளிடம் இருந்த அன்பின் நிமித்தமாக இரகசியமாக தள்ளிவிட நினைத்தார். மத். 1:19-25.
 
ஆனால் – அன்பு இல்லாமையால் தன் தந்தையின் அவமானத்தை வெளிப்படுத்த நோவாவின் மகன் முயன்றான். ஆதி. 9:20-27.
 
பாவம் எப்போதும் நம்மை உறுத்திக்கொண்டேயிருக்கும். பாவத்திலே ஊறி மனசாட்சியே கெட்டுப்போகும் அளவிற்கு போகும் மனநிலைமையும் உள்ளது. 1தீமோ. 4:2.
 
துன்மார்க்கத்தில் பழகினவர்கள் நன்மைக்கும் தீமைக்கும் வித்தியாசம் அறியார்கள். செப். 3:5.
 
ஆகையால், ஒருவர் ​​நமக்கு எதிராகவோ, வேறொருவருக்கோ, அல்லது தேவனுக்கு எதிராகவோ பாவம் செய்து தேவனிடத்தில் அவர் மன்னிப்பைப் பெற்றபோது (அப். 22:16;  அப். 2:38) நாமும் அவர் செய்த தவறை புரிந்துகொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.
 
"எவனுடைய மீறுதல் மன்னிக்கப்பட்டதோ, எவனுடைய பாவம் மூடப்பட்டதோ, அவன் பாக்கியவான்". சங். 32:1.
 
"பாவத்தை மூடுவது" என்பது இருதயத்தில் இருந்து அந்த பாவ செயலை முழுவதுமாக எடுத்துப்போடுவது/வெளியேற்றுவதும் அல்லது வேறோருவர் நமக்கு எதிராக செய்த செயலுக்கு முன்னர் அவரிடம் நாம் பழகின அதே அன்பில் பின்னரும் பழகுவதும் ஆகும்.
 
பாவம் செய்தவரின் பாவங்களை நாம் மூடுவதல்ல மனந்திரும்பிய / பாவமன்னிப்பு பெற்றுக்கொண்ட ஒருவர் தன் பாவத்தின் விளைவின் நிமித்தம் ஏற்பட்ட அவமானத்திலிருந்து பாதுகாக்கிறோம் / மூடுகிறோம்.
 
ஒரு சகோதரனின் பலவீனத்தை ஒரு போதும் கேலி செய்யகூடாது.
 
*கவனிக்க வேண்டியவைகள்*:
 1. அன்பு - பாவங்களை புறக்கணிக்கவோ அல்லது கண்டுக்காமல் இருக்கும் என்பதோ கிடையாது. (மத். 18:15).
 
2.அன்பு இருந்தால் தவறான காரியத்தையே எப்போதும் கண்டு பிடித்துக்கொண்டு இருக்காது. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என்ற தமிழ் பழமொழி உண்டு. அன்பு இருந்தால் அநியாயத்தில் சந்தோஷப்படாமல், சத்தியத்தில் சந்தோஷப்படுவார்கள். சகலத்தையும் பொருத்துக்கொள்வார்கள், சகலத்தையும் நம்புவார்கள். 1கொரி. 13:6-7.
 
3. பாவத்தை கண்டுகாமல் இருப்பதையோ அல்லது புறக்கணிப்பதையோ ஆதரிக்கவில்லை. மற்றவர்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்ட ஒருவர், அந்த நபரின் பாவங்களைத் தாண்டி, தேவ சித்தத்திற்கு இணங்க அவர்களுக்கு நன்மை செய்வதைக் காணலாம்.
 
4. மனந்திரும்புதல் நிகழும்போது அன்பு உண்மையிலேயே மன்னிக்கும். தேவனுடைய அன்பு இருப்பதால் தன் தவறை உணர்ந்து மனந்திரும்பிய போது செய்த அனைத்து பாவங்களையும் மறந்து மன்னித்து மூடிவிடுகிறார்.
 
5. கிறிஸ்தவர்களிடையே தீவிரமான அன்பு எதிர்கால பாவங்கள் ஒருவருக்கு எதிராக நிகழாமல் தடுக்கும், அதாவது கசப்பு, சண்டை மற்றும் பொறாமை ஆகியவற்றால் ஏற்படும் பாவங்கள் வராமல் அன்பு மூடிக்கொள்கிறது.
 
6. பாவம் செய்தவர் மனந்திரும்ப ஒரு வாய்ப்பைக் அன்பு கொடுக்கும். மத். 18:15.
 
7.மேலும் அன்பு இருந்தால் பாவம் செய்தவரை ஆதாயப்படுத்த முயற்சி செய்யும். கலா. 6:1.
 
8. சகோதரர்களிடம் நமக்கு ஆழ்ந்த அன்பு இருக்கும்போது, ​​நாம் மன்னிக்க விரும்புவோம், மன்னிக்கத் தயாராக இருப்போம்.
 
"தர்மம் பல பாவங்களுக்கு மன்னிப்பு கொடுக்கும்" என்று ரோமானியர்கள் நம்பிக்கை.  ஆனால், அத்தகைய கோட்பாடு வேதவசனங்களின் போதனைகளுக்கு முரணானது.
 
எதற்காக ஞானஸ்நானம் என்று அறியாமலே எடுத்து கொண்ட ஞானஸ்நானம் ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை - ஆனால் வேதத்தை அறிந்து விசுவாசித்து மனந்திரும்பி பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது அது வரை செய்த பாவம் மன்னிக்கப்படுகிறது. மாற்கு 16:16, அப். 2:38, அப். 2:47.
 
அவர்கள் தேவனால் பிறக்கிறார்கள், தேவனுடைய பிள்ளைகளாகிறார்கள். கிறிஸ்துவை தரித்துக்கொள்கிறார்கள். ரோ. 6:3-5, கலா. 3:27, யோ. 1:15.
 
இந்த வசனத்தின் பொருள்: மற்றவர்களிடமாய் காண்பிக்கும் அன்பின் நடத்தையின் நிமித்தம் வரும் நன்மை மற்றும் அவர்களின் குறைபாடுகளை தயவாக கவனிக்கவும், அவர்களின் தவறுகளை அன்பாய் சுட்டிக்காட்டுவதற்கும் நம்மை வழிநடத்தும் என்பதை குறிப்பிடுகிறார்.
நம்முடைய அன்பு அல்லது தர்மங்கள்நம்முடைய பாவங்களை மூடினால் கிறிஸ்து மரிக்க வேண்டிய அவசியமில்லாமல் இருந்திருக்குமே.
 
அன்பு பாவங்களை மன்னிக்கும் என்று வேதத்தில் எங்கும் கற்பிக்கப்படவில்லை.

*எடி ஜோயல் சில்ஸ்பி*
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
    
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2

Website : http://www.kaniyakulamcoc.wordpress.com

YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee

*----*----*----*----*----*-----*
Print Friendly and PDF

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக