#708 - *இயேசு கிறிஸ்து எனக்காக எல்லாவற்றையும் சிலுவையில் முடித்து விட்டார்
நாம் எதுவும் செய்ய தேவையில்லை என்று சொல்லி கிருபை இருக்கிறது, மன்னிப்பு
இருக்கிறது என்று சொல்லி இஷ்டம்போல வாழ்ந்து கொண்டு நான் இரட்சிக்கப்பட்டேன்
பரலோகம் செல்வேன் என்று சொல்லுகிறவர்களுக்கு வேதம் என்ன செய்ய சொல்கிறது?* பதில் உண்டா பிரதர் ?
*பதில்*
பல்பொருள்
அங்காடி என்று சொல்லப்படும் சூப்பர் மார்க்கெட்டிலோ அல்லது சிறிய வணிக பெட்டி
கடைகள் போன்ற எந்த கடைகளானாலும் அதில் உள்ள அணைத்து பொருளும் மக்களுக்காக தான்
வைக்கப்பட்டிருக்கிறது.
எங்களுக்கான
பொருள் என்று கடையினுள் எவரும் போய் தனக்கு வேண்டிய பொருளை எடுத்துக்கொள்ளலாம் – ஆனால் வெளியேறும் போது
அதற்கான தொகையை கொடுத்தாலன்றி அந்த பொருள் நமக்கு சொந்தமாகாது.
உலக
மக்கள் அனைவரின் பாவங்களை தீர்க்கும்படி இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் வந்தார் – யோ. 12:47, யோ. 3:17, மத். 20:28, 1தீமோ. 1:15-16, 1யோ. 4:14
அவர்
நமக்கான இரட்சிப்பை சிலுவையில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார் – 1பேதுரு 2:24, யோ. 1:29, எபி. 9:28, தீத்து 2:14, 1யோ. 2:2.
நாம்
அறிய வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் உள்ளது.
–
யோ. 17:4 -பூமியிலே
நான் உம்மை மகிமைப்படுத்தினேன்;
நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்து முடித்தேன்.
–
ஏற்கனவே கொடுக்கப்பட்ட
பிரமாணத்தை முடிவிற்க கொண்டுவர கிறிஸ்து மரிக்கவேண்டியிருந்தது (ரோ. 10:4
விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின்
முடிவாயிருக்கிறார்.
–
எபி. 10:10
இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச்
சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம்.
பிதாவானவர்
தனக்கு கொடுத்த வேலையை இயேசு கிறிஸ்து செய்து முடித்தார்.
நமக்காக
இயேசு கிறிஸ்து ஏற்படுத்தி வைத்திருக்கும் இரட்சிப்பை நாம் அவர் வார்த்தையை ஏற்று, மனந்திரும்பி
பாவமன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளும் போது தான் அந்த இரட்சிப்பு
நமக்குறியதாகிறது –
மாற்கு 16:16, அப்.
2:38, அப். 2:47.
அப்படி
ஒன்றும் செய்யாமல் –
நமக்கு பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவராக இருப்போம். சத்தியம்
நமக்குள் இராது –
1யோ. 1:8
நம்முடைய பாவங்களை *நாம்
அறிக்கையிட்டால்*, பாவங்களை
நமக்கு மன்னித்து *எல்லா
அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும்
உள்ளவராயிருக்கிறார்*. நாம் பாவஞ்செய்யவில்லையென்போமானால், நாம் அவரைப்
பொய்யராக்குகிறவர்களாயிருப்போம்,
அவருடைய வார்த்தை நமக்குள் இராது. – 1யோ. 1:9-10
தன்
இஷ்டம் போல் வாழ்கிறவர் தன் கிரியைக்குத்தக்க பலன் நியாயத்தீர்ப்பில் உண்டு – மத். 16:27
சபையாகிய
மணவாட்டியை கிறிஸ்துவானவர் பாதுகாக்கிறார் – எபே. 5:27
அந்த
சபையாகிய சரீரத்தில் ஒருவர் அங்கமாக இருக்கவேண்டுமென்றால் – நியாயபிரமாணத்தின்படியல்ல
–
கிறிஸ்துவின் பிரமானத்தின்படி *பாவமன்னிப்பிற்கென்று* ஞானஸ்நானம் பெற்றிருந்தால்
தேவன் அவர்களை தன் குமாரனின் சரீரத்தில் (சபையில் / கிரேக்க வார்த்தை எக்லீஷியா)
சேர்க்கிறார் –
அப். 2:47.
இக்கால
போதகர்கள் பண வசூலில் குறியாக இருப்பதால், பாவத்தை
கண்டித்து உணர்த்தாமல் இரட்சிக்கப்பட்டு ஞானஸ்நானம் கொடுத்து தங்கள் சொந்த சபையில்
சேர்த்து தசமபாகம் பெற்றுக்கொண்டு வாழ்ந்து சுகித்து அந்த ஆத்துமாக்களை நரகத்தில்
தள்ள முயற்சிக்கிறார்கள் ... ஓநாய்களுக்கு தப்பியிருத்தல் ஆடுகளுக்கு அவசியம்.
பிலி. 3:19
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக