#678 - *மத். 16:18ல் சொல்லப்படும் பாறை யாரை குறிக்கிறது? விளக்கவும்*
*பதில்*
இந்த வார்த்தையின்
மூலம் பலர் வித்தியாசமாக புரிந்து கொள்வது இயல்பு.
"பாறை" என்ற வார்த்தை பேதுருவை குறிக்கிறது
என்றும், இந்த
பாறை மீது, கிறிஸ்து தன் சபையை கட்டுவதாக கருதுகின்றனர்.
இயேசு தன்னைக் குறிப்பிட்டார் என்று சிலர் நினைத்திருக்கிறார்கள்.
கிறிஸ்து ஒரு பாறை என்று அழைக்கப்படுகிறார் - ஏசா_28:16; 1பேதுரு 2:7-8, 1கொரி. 3:11 – அஸ்திபாரம் கிறிஸ்துவே -
எபே. 2:20
"பாறை"
என்ற வார்த்தை பேதுருவின்
பெயர் அர்த்தத்தை குறிக்கிறதென்றாலும் இந்த வசனத்தில் இந்த கல்லின் மேல் என்று சொல்லப்படுவது
கிறிஸ்து தன்னை குறிப்பிடுகிறார்.
அவர் ஏற்படுத்தப்போகிற
சபையின் திறவுகோளை பேதுருவிற்கு கொடுக்கிறார் – மத். 16:19. அதனைக்கொண்டு
பேதுரு முதலாவது யூதரிடத்திலும் பின்னர் புறஜாதியினரிடத்திலும் துவங்குகிறார் – அப். 2:14-40, 10:34-48
யூதர்களுக்கும் புறஜாதியினருக்கும் சபையின் அஸ்திவாரத்தை
துவங்கிய காரியம்
பேதுருவுக்கு இருந்தது.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +91 81 44 77 6229
*Q&A Biblical வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்யவும் :
https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
*Q&A Book ஆர்டர் செய்ய* :
kaniyakulamcoc.blogspot.com/2023/02/qr-code-link-for-q-book-payment.html
வலைதளம் :
kaniyakulamcoc.wordpress.com
YouTube “வேதம் அறிவோம்” :
https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக