#676 - *இன்றைய
ஆராதனை கூட்டங்களில் காணிக்கை பகுதியை ஏன் ஆராதனை நேரத்தின் நடுவே வைக்கப்படுகிறது?* இவ்வாறு
செய்வது வந்த மக்களை காணிக்கை கொடுக்குமாறு கட்டாயப்படுத்துவது போல் உள்ளதே… ஒருவர்
மாற்றி ஒருவராக காணிக்கை போடும்படி பைகளை அவர்கள் மத்தியில் அனுப்பும் போது மறைமுகமாக
காணிக்கையை போட வைக்கும் யுக்தியாக தொிகிறதே?
*பதில்*
கிறிஸ்தவ
தொழுகை என்பது 5 பாகங்கள் கொண்டது.
பாடல்
பாடப்பட்டது – எபே. 5:19
வேத வசனம் போதிக்கப்பட்டது – 1 கொரி.
4:17
வாரத்தின்
முதல் நாளில் கர்த்தருடைய பந்தி கடைபிடிக்கப்பட்டது – அப். 20:7
வாரத்தின்
முதல் நாளில் காணிக்கை சேர்க்கப்பட்டது – 1 கொரி. 16:1-2
ஜெபம்
ஏறெடுக்கப்பட்டது – அப். 12:5,12, 1 தெச. 5:17
கடைசியாகவோ
முதலாவதாகவோ நடுவிலோ எப்பொழுது எடுத்தாலும் காணிக்கையை போட வேண்டியது ஒவ்வொரு
கிறிஸ்தவனின் கடமை.
எவ்வளவு
காணிக்கை போடவேண்டும் என்பதை அவரவர் தீர்மானித்துக்கொள்ளல் அவசியம் (2கொரி. 9:7)
என்னை
பொருத்தவரை – காணிக்கை வாங்குவதை விட கொடுப்பது நல்ல முறை. அதாவது பைகளை அனுப்பி
வாங்குவதை காட்டிலும் காணிக்கையை சபையார் முன்வந்து கொடுக்க வேண்டும். அந்த
உதாரணத்தை தான் வேதத்தில் காணமுடிகிறது – மாற்கு 12:41
நாங்கள்
எங்கள் தொழுகை முறையில் - முதலாவது ஜெபம்,
பாடல், கர்த்தருடைய பந்தி, காணிக்கை, தேவ செய்தி என்ற முறையை பின்பற்றுகிறோம். காணிக்கையை
சபையார் வரிசையில் முன்னதாக வைக்கப்பட்டிருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு
வரிசையாக திரும்பி செல்வார்கள்.
ஊழியர் - கணியாகுளம் கிறிஸ்துவின் சபை,
வேதாகம ஆசிரியர்
தொடர்பு : +918144776229
*கேள்வியும் வேதாக பதில்களும் வாட்ஸப்குழுவில் இணைய* க்ளிக் செய்ய வேண்டிய லிங்க்: https://chat.whatsapp.com/Lu8jhEd4Sag5XMhtNqGXi2
Website : http://www.kaniyakulamcoc.wordpress.com
YouTube Channel : https://www.youtube.com/joelsilsbee
*----*----*----*----*----*-----*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக